08/04/2024
இன்று 9-04-24 செவ்வாய்கிழமை ரமழான் மாத பிறை 29.
இன்று மாலை (யவ்முஷ் ஷக்)
பிறை பார்க்கும் நாள்
ஆகும்.
இஸ்லாமில் குறிப்பிட்ட நாட்களில் செய்யப்படும் வணக்கங்கள் பிறையை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அந்த வணக்கங்களை போன்றே பிறை பார்ப்பதும் அவசியமான ஒரு வணக்கமாகும். எனவே அதற்காக நேரத்தை ஒதுக்கி பிறை பார்க்க முயற்சி செய்ய வேண்டும்.
பிறை தெரிந்தால் உடனே மாவட்ட காஜிக்கோ, அல்லது பள்ளி இமாம் மற்றும் நிர்வாகத்திற்கோ தகவல் கொடுக்க வேண்டும்.
மதுரையில் இன்று
(9-04-24)
சூரிய மறைவு 6:28 PM மணி,
சந்திர மறைவு 7:08 PM மணி,
இரண்டு மறைவுக்கு மத்தியில் வித்தியாசம்.
40 நிமிடம்,
பார்க்க வேண்டிய திசை (Azimuth)
நேர் மேற்கிலிருந்து வடக்கு பக்கமாக 12° டிகிரி
அடிவானத்திலிருந்து (Elongation) 11° டிகிரி உயரத்தில்,
பிறை தெரிய வாய்ப்புள்ள நேரம் 6:46 PM .
இன்று பிறை பார்த்த பின் தகவல் கொடுக்கும் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
சந்திர மறைவு நேரம் 7:08 PM மணி ஆகும் எனவே அதற்கு முன்பாகவே பிறை பார்த்தவுடன் அப்பகுதி பள்ளியின் இமாமிற்கோ அல்லது ஜமாத்திற்கோ அல்லது மாவட்ட காஜிக்கோ உடனடியாக சாட்சியம் அளித்து விடுங்கள்.
தலைமை காஜி அறிவிப்பு செய்த பிறகு "குடும்பத்தோடு நாங்கள் அனைவரும் பிறை பார்த்தோம்" என்று சத்தியம் செய்து வீடியோ வெளியிடுவதால் எப்பயனும் இல்லை. அதனால் சமுதாயத்தில் குழப்பமும் பிளவும் தான் ஏற்படும்.
அல்லாஹ்வே அதிகம் அறிந்தவன்.
-தகவல்: முஹ்யித்தீன் யூசுஃபீ