TAMIL BOYS

TAMIL BOYS Thank you for giving opurtunity.

Hai Friends,

Welcome to Tamil boys Page,

Here we are regulary update latest information, Jokes, News, Stories, Fitness tips, and etc.,

Please Follow with us and get regular updates.

11/10/2021

Live theft in Madurai readymade showroom, Live CCTV footage

16/10/2020

நாக்கை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையும்.

இக்கட்டான நேரத்தில் உதவி கேட்கும் போதுதான் ஒருவரின் குணத்தை தீர்மானிக்க முடியும்.

துன்பத்திற்கு மூல காரணம் மனிதனின் முட்டாள்தனம்.

இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்திடு.

சாந்தமான மனம் இருந்தால் சந்தோஷம் தானாக வரும்.

நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப
முடியாது.

கடவுள் அருள் இருந்தால் நினைத்தது நடக்கும்.

🙏 *இனிய காலை வணக்கம்* 🙏

26/06/2020
For Free Demo Classes, Call Me Today.+91 8883655026+91 7092453924
26/06/2020

For Free Demo Classes, Call Me Today.
+91 8883655026
+91 7092453924

22/06/2020

விவசாயி ஒருவரிடம் ஒரு குதிரையும் ஆடும் இருந்தது. ஒரு நாள் குதிரை நோய்வாய்ப்பட்டிருந்தது, விவசாயி கால்நடை மருத்துவரை அழைத்தார். மருத்துவர் விவசாயிடம் 'உங்கள் குதிரைக்கு வித்தியாசமான நோய்க்கிருமி ஏற்பட்டுள்ளது, அதற்கு மூன்று நாட்கள் மருந்து கொடுக்க வேண்டும். நான் தினமும் வந்து மருந்து கொடுக்கிறேன். மூன்றாவது நாள் குதிரை குணமாகவில்லை என்றால் நாம் அந்த குதிரையை கொன்றுவிடலாம்" என்று கூறினார்.

இதை அனைத்தையும் ஆடு கேட்டுக்கொண்டிருந்தது. மருத்துவர் கூறியவாரே அடுத்த நாள் குதிரைக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார். முதல் நாளன்று மருத்துவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு சென்று விட்டார். மருத்துவர் அங்கிருந்து சென்றவுடன் ஆடு குதிரையிடம் சென்று 'நண்பரே வலுவாக இரு, இல்லையென்றால் அவர்கள் உன்னை நிரந்தரமாக தூங்க வைத்து விடுவார்கள்" என்று கூறியது.

அதேபோல் இரண்டாவது நாளன்று மருத்துவர் குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு வெளியேறினார். ஆடு குதிரையிடம் சென்று 'நண்பனே எழுந்து வா இல்லையென்றால் நீ இறந்து விடுவாய்! எழுந்து... வா!" என்றது.

மூன்றாவது நாளன்று, குதிரைக்கு மருந்தை கொடுத்து விட்டு, குதிரையை பரிசோதித்த பிறகு, 'துரதிருஷ்டவசமாக நாம் குதிரையை கொல்ல வேண்டும். இல்லையெனில் அந்த நோய்க்கிருமி பரவி மற்ற குதிரையை பாதித்துவிடும்" என்றார். இம்முறை மருத்துவர் சென்ற பிறகு, ஆடு குதிரையிடம் வந்து அதற்கு உதவ முயன்றது. ஆட்டின் உதவியுடன் குதிரை அங்கிருந்து ஓடிவிட்டது.

விவசாயி குதிரை வயல்வெளியில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து, 'அதிசயம்! என் குதிரை குணமடைந்து விட்டது. நாம் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்யலாம். அந்த விருந்திற்கு ஆட்டை கொன்று விடலாம்," என்றார் விவசாயி.

கதையின் கருத்து : எந்த ஊழியர் உண்மையில் வெற்றியின் தகுதிக்கு தகுதியானவர், அல்லது உண்மையில் விஷயங்களைச் செய்ய தேவையான ஆதரவை யார் வழங்குகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

21/06/2020

Don't feel alone, there is always

Someone who silently cares for you..

21/06/2020

குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம் - குட்டி கதை...

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்...

இது உண்மையே.....
26/05/2020

இது உண்மையே.....

01/05/2020

சிறுகதை நேரம்

மனிதநேயம்!!

கவின் என்பவர் வேலைத்தேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார்.

அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே கவின் மின்கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அந்த முகவரியை காட்டி வழி கேட்டார். அக்கடையிலிருந்தவர் கவினிடம் சிறிது தூரம் சென்றால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கே பார்வையற்ற ஓர் வயதான அம்மா இருப்பார். அதுதான் இந்த முகவரியுடைய வீடு எனக் கூறினார்.

கவினும் அங்கே சென்றார். தென்னங்கீற்றால் ஆன ஓர் சிறிய கொட்டகை தான் வீடு. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத அளவிற்கு மோசமாக இருந்தது. கவினின் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? என்று கேட்டார். அம்மா நான் இந்த வழியாக வரும்போது 50 ரூபாய் கீழே கிடந்ததைப் பார்த்தேன்.

மேலும், மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த காகிதத்தைப் பார்த்தேன். அதனால் அந்த பணத்தை உங்களிடம் கொடுக்க வந்தேன். இதைக் கேட்டதும் வயதான அந்த அம்மா அழுதவாறே தம்பி இரண்டு நாட்களாக மொத்தமாக முப்பத்தைந்து பேர் 50 ரூபா கீழே விழுந்து கிடந்தது என்று கொடுத்துச் சென்றார்கள்.

ஆனால் அந்த கடிதத்தை நான் எழுதவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு எழுத படிக்கத் தெரியாது என்றார். ஆனால் கவின் பரவாயில்லை, அம்மா! நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கொடுத்து சென்றார். பின் அந்த வயதான அந்த அம்மா! தம்பி நீ செல்லும்போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்துவிடுமாறு அறிவுறுத்தினார்.

உடனே கவினின் மனதில் யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார் என பலவிதமாக சிந்தித்துப் பார்த்தார். அந்த கடிதத்தை கிழித்து விடுமாறு வயதான அம்மா ஒவ்வொருவரிடமும் கூறியிருப்பார். ஆனால் யாரும் அதைக் கிழிக்கவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி கூறினார், கவின்.

'நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி உண்டு".

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் கவினிடம் அண்ணா! இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா? வரும் வழியில் இந்த 50 ரூபாய் கிடைத்தது.

அதை அந்த அம்மாவிடம் தர வேண்டும். தாங்கள் அந்த வீட்டிற்குச் செல்லும் வழியைக் கூறினால் உதவியாக இருக்கும் என்றார், அந்த நபர். மனிதநேயம் சாகவில்லை என நினைத்து கவின் அவருக்கு அவ்வீட்டின் வழியைக் கூறினார்.

நீதி :

உதவி சிறியதோ, பெரியதோ நம்மால் முடிந்தவரை உதவிகளைச் செய்து கொண்டே இருப்போம். 'இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்".

28/04/2020

எவ்வளவு
பிரச்சனைகளுக்கு மத்தியிலும்
ஒரு பூ பூக்கத்தானே
செய்கிறது...!

இனிய இரவு வணக்கம்

28/04/2020

சிறுகதை நேரம்
கதை 1

கூடா நட்பு ஆபத்தை தரும் !!

ஒரு அடர்ந்த காட்டில் பல விலங்குகள் இருந்தன. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகினர். இரண்டும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அந்த உடன்படிக்கையில் தினமும் இரைத்தேட இருவரும் ஒன்றாகவே சேர்ந்து செல்ல வேண்டும் என்றும், அடுத்ததாக இருவரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றொருவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டும் உறுதி செய்து கொண்டது.

ஒருநாள் நரி இரைத் தேடுவதற்காக தன் நண்பனான கழுதையையும் அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கி அடர்ந்த காட்டிற்குள் சென்றது. நரி சென்று கொண்டிருந்த வழியில், காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தை பார்த்ததும் நரி பயத்தில் நடுங்கியது.

சிங்கத்திடம் சிக்கினால் உயிர் பிழைக்க முடியாது, எப்படியாவது தப்பிக்க வேண்டுமென என நரி யோசித்தது. நரி உடனே சிங்கத்திடம், காட்டின் ராஜாவே! எலும்பும் தோலுமாக இருக்கும் என்னைக் கடித்து உண்பதால் உங்கள் பசி கொஞ்சம் கூட குறையாது. அதனால் உங்களுக்கு நான் வேறு இரையைக் கொண்டு வருகிறேன் என்றது.

சிங்கம் எப்படி உன்னால் முடியும் எனக் கேட்டது. என்னுடைய நண்பனான, கழுதை ஒன்று இருக்கிறது. இரண்டு, மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு அந்தக் கழுதை போதுமானதாக இருக்கும் என்றும், சிரமமில்லாமல் நீங்கள் அதை பிடித்துக் கொள்வதற்கு நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றும் அந்த நரி கூறியது.

நரி கூறியதை கேட்ட சிங்கம் ஒப்புக்கொண்டது. பின்னர் சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையை அழைத்து வரச் சென்றது நரி.

கழுதையின் இருப்பிடத்திற்கு வந்த நரி கழுதையிடம் நண்பனே! இரைத்தேடச் செல்லலாமா? எனக் கேட்டது. பின் இரண்டும் காட்டிற்குள் வந்தன. நரி கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது. சிங்கம், வேகமாக கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. உடனே நரியின் மீதும் பாய்ந்து அதையும் பிடித்துக் கொண்டது.

நரி பதட்டத்துடன், ராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையை அழைத்து வந்தேன். ஆனால், இப்போது உங்களுக்கு உதவி செய்த என்னை ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்! என்று நடுக்கத்துடன் கேட்டது.

நெருக்கமான உன் நண்பனையே நீ காட்டிக் கொடுத்த உன்னை நம்ப முடியாது. இதேபோல் மற்றொரு நாள் நீ உயிர் பிழைப்பதற்காக என்னை விட பலம் வாய்ந்த வேறு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பதில் என்ன உறுதி இருக்கிறது. எனவே, உன்னை உயிருடன் விட்டு வைப்பது எதிரியை பக்கத்தில் வைத்திருப்பது போலதான் என்று கூறிக்கொண்டே சிங்கம் நரியைக் கொன்றது.

நீதி :

நட்பு என்பது புனிதமானது. புனிதமான நட்பிற்கு துரோகம் செய்தால் கடைசியில் தீமை தான் வந்து சேரும்.

28/04/2020

உதவத்தான் நான் இருக்கிறேன் உனக்குள் நீ முயன்றால்....

இப்படிக்கு
முயற்சி.

Address

Madurai
625011

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL BOYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share