
21/06/2025
Canva Google Veo 3 மூலம் இயக்கப்படும் புதிய Al அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
ஜூன் 19 அன்று Canva, Google Veo 3 எனும் நவீன AI வீடியோ உருவாக்கும் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய' Create a Video Clip ' எனும் அம்சத்தை வெளியிட்டது. இந்த வசதியின் மூலம், பயனர்கள் சுலபமாக 8 விநாடிகள் நீளமுள்ள, ஒலியுடன் கூடிய வீடியோ கிளிப்புகளை உருவாக்கலாம்.
இது Pitch Deck துவக்கம், social media பதிவுகள், விளம்பர டீசர்கள் போன்ற குறுகிய வீடியோக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த புதிய அம்சம் Canva வின் முகப்புப் பக்கத்திலிருந்தே அணுகக்கூடியது, Canva Pro Teams Enterprise மற்றும் Nonprofit பயனர்களுக்கே இவ்வசதி கிடைக்கும்.