Kaaritv - காரிடிவி

Kaaritv - காரிடிவி மக்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் இல்லை ?

Permanently closed.
*அனைவருக்கும் வணக்கம் மக்களே*💚🙏*மரங்களுக்கு பராமரிப்புபணி*நாள்:13/07/2025-ஞாயிறு *நேரம்*:காலை 6.00-9.00 மணி வரை*மரம் நட ...
11/07/2025

*அனைவருக்கும் வணக்கம் மக்களே*💚🙏

*மரங்களுக்கு பராமரிப்புபணி*
நாள்:13/07/2025-ஞாயிறு

*நேரம்*:காலை 6.00-9.00 மணி வரை

*மரம் நட விரும்பு* அமைப்பின் *58-வது வார களப்பணி*

கூடும் இடம்; *கீழ்கட்டளை ஏரி*

*இருப்பிடத்தின் வரைபடம்*
*Google Map*,

https://maps.app.goo.gl/thSTrogksEb9WmGAA

*தொடர்பு எண்கள்*
9566129496
9884654836
9962077113

*உதவ நினைத்தால் உதவலாம்*
*Phone Pay No*
9566129496

*உலக வெப்பமயமாதலை குறைக்கவும்*🥵 *சுற்றுச்சூழலை மேம்படுத்தவும்*, மற்றும் *பசுமையை பெருக்கவும்*🌍 விரும்பி *வார வாரம்* ஆராவாரத்துடன் *மரம் நடுவு* மற்றும் *பராமரிப்பு பணியை* மேற்கொள்ளும் நமது *மரம் நட விரும்பு* அமைப்பு, வரும்
*ஞாயிறு* அன்று
கீழ்கட்டளை ஏரிக்கரையில் *நடவு செய்துள்ள மரங்களுக்கு பராமரிப்புப் பணி* செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்விற்கு அனைத்து *தன்னார்வலர்களும்* கண்டிப்பாக *கலந்து கொண்டு* தங்களின் *பங்களிப்பை* தாருங்கள்🥳❣️🙏

நமது பகுதியை *பசுமையாக்க* இது *ஒரு சிறிய முயற்சி*, இதில் நீங்களும் பங்கேற்று *பசுமையைப்* பெருக்க *உதவுங்கள்* சொந்தங்களே🥳😍🌹💐🌱🌳💚🙏

இந்த *மரம் நடும்* செயலில் *பழமரங்கள்* நட்டு *கூண்டு* வாங்கி அமைக்க
*பண உதவிகள்* தேவைபடுகிறது.

உங்களால் இயன்ற *உதவிகளை* செய்யுமாறு *தாழ்மையுடன்* கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் செய்யும் *சிறிய உதவி* ஒரு *மரத்திற்கு* கூண்டு அமைக்க *உதவியாக* இருக்கும்💲♨️

🌱வைப்பு!
🌳வளர்ப்பு!!
🥳பராமரிப்பு!!!

இதை *மறக்காமல்* உங்களின் *நண்பர்களுக்கு* ஷேர் பண்ணுங்கள் சொந்தங்களே💚😍✌️👏🙏

இவண்,

*மரம் நட விரும்பு* குழு ஒருங்கிணைப்பாளர் 🌳 *மரப்பித்தன் ராஜ்குமார்* 🌳
9566129496

கடலூர் மாவட்டத்தில் இன்று காலை ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 4 மாணவர்கள் பலியானதாகவும், பலர் காயமுற்றதாகவும் செய...
08/07/2025

கடலூர் மாவட்டத்தில் இன்று காலை ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 4 மாணவர்கள் பலியானதாகவும், பலர் காயமுற்றதாகவும் செய்தி வந்துள்ளது.

தொடர்வண்டி வரும் நேரத்தில் அந்தப்வழங்கப்படும் ல் காப்பாளர் பங்கஜ் சர்மா என்பவர் அடைக்காததால் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளதாக நிர்வாகம் தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளது.

லெவல் கிராசிங் கேட் திறந்து இருந்தால், இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை மீறி எப்படி இரயில் வந்தது?

தன் எல்லைக்குட்பட்ட இரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா,திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். இரயில் வரும்போது திறந்து இருந்தால் உடனடியாக இரயில் ஓட்டுநருக்கு தெரிவித்து நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை. அது என்ன ஆனது?

கேட் மூடப்படவில்லை என்றால், இரயிலுக்கு எப்படி சிக்னல் கிடைத்தது?

ஒன்று மட்டும் தெரிகிறது. இது சாதாரண மனித தவறு இல்லை. இந்திய இரயில்வே சிஸ்டம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டில் இயங்குகிறது. இரயில்வே துறையில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஒன்றிய அரசின் அலட்சியமும் நிர்வாகமின்மையுமே முதன்மை காரணம்.

கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் உண்மையான குறைபாடுகளை களைய ஒன்றிய இரயில்வே துறை அமைச்சகம் முன்வர வேண்டும்.

அத்துடன், இந்த விபத்தின் மூலம் மற்றொரு உண்மையும் வெளிவந்துள்ளது. அதாவது, தொடர் வண்டித் துறையில் வாயில் காப்பாளர் (Gate Keeper) பணிகள் பெரும்பாலும் உள்ளூர் நபர்களுக்கே வழங்கப்படும் என்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது.

இந்த விபத்தின் மூலம் அப்பணி வாய்ப்பும் கூட இந்தியர்களுக்கு தான் வழங்குகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மண்ணின் மக்களான தமிழர்களுக்கு அல்ல!

கோவன், கனிமொழி, வை  கோ எல்லாம் உயிரோட தான் இருக்காங்கபடிப்பு அறைகள் கூடகுடிப்பு அறைகள்
08/07/2025

கோவன், கனிமொழி, வை கோ எல்லாம் உயிரோட தான் இருக்காங்க
படிப்பு அறைகள் கூட
குடிப்பு அறைகள்

06/07/2025

தமிழக சுகாதாரத் துறையே திருச்செந்தூரை தூய்மைப்படுத்தினாலும் அரசியல் ஆதிக்க சக்திகளால் திருச்செந்தூர் நாறுகிறது

10 மாவட்ட தூய்மை பணியாளகள் பணி செய்ய இருந்தும் திருச்செந்தூர் நாறுகிறது.... 👆

உண்மையில் எதற்கும் அஞ்சாமல்,தன் கண்முன்னே தன் நண்பனை காவலர்கள் அடித்தே கொன்றதை பார்த்த பின்பும்  நீதி செத்துவிடக்கூடாது ...
03/07/2025

உண்மையில் எதற்கும் அஞ்சாமல்,தன் கண்முன்னே தன் நண்பனை காவலர்கள் அடித்தே கொன்றதை பார்த்த பின்பும் நீதி செத்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுயிரையும் பற்றி கவலைப்படாமல் காணொளி எடுத்து
"நமக்கு ஏம்பா வம்பு! தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளாதே! இங்க எதுவும் சரியில்லை அப்படித்தான் நடக்கும் ரொம்ப பொங்கினா நமக்குதான்பா ஆபத்து!" என்று தன்னை சுற்றியுள்ளோர் பயத்தில் கூறியபோதும் அந்த காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இன்று நீதியை நிலைநாட்டிய இந்த சத்தீஷ்வரனுக்கு தான் அரசுவேலை தரப்பட வேண்டும்.

தமிழக அரசே சத்தீஸ்வரனுக்கு பாதுகாப்பும் அரசுவேலையும் உடனே வழங்கு!

03/07/2025
ஏங்ங்ங்ங்ங்க என் புருஷன் மேலதிகாரி சொன்னதுக்காக,ஒரு அப்பாவி மேல பொய் கேஸ் போட்டு அ*டிச்சு கொ*ண்ணிருக்காருங்க,அதுக்கு இரக...
02/07/2025

ஏங்ங்ங்ங்ங்க என் புருஷன் மேலதிகாரி சொன்னதுக்காக,
ஒரு அப்பாவி மேல பொய் கேஸ் போட்டு அ*டிச்சு கொ*ண்ணிருக்காருங்க,
அதுக்கு இரக்கமே இல்லாம என் புருஷன கைது பண்ணியிருக்காங்க...

இதனால பாதிக்கப்பட்டு பதறிப்போய் நீதி கேட்டு என் உ*யிர குடுத்து வீதியில வந்து த*ர்ணா போ*ராட்டம் பண்றேன்,

எனக்கு ஆதரவா யாரும் பேசாம,
என் கழுத்துல கிடக்குற கயிறு மாதிரி டிசைன்ல செஞ்ச பத்து
பவுன் தங்க சங்கிலியையும்,
என் கையில இருக்க நாலு அஞ்சு மோதிரத்தையும் பத்தி பேசுறாங்க...

மனசாட்சி இருக்காங்க உங்களுக்கு..?!
🫤🫤🫤

நடந்தது நடந்துப்போச்சு ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம் என ஊர் பஞ்சாயத்தில் சொல்வதைப் போல சொல்கிறார் முதல்வர்... "அஜித்தி...
01/07/2025

நடந்தது நடந்துப்போச்சு ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம் என ஊர் பஞ்சாயத்தில் சொல்வதைப் போல சொல்கிறார் முதல்வர்...

"அஜித்தின் வாய், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி"..

பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களை சுட்டிக் காட்டி நீதிபதிகள் அதிர்ச்சி..!

அஜீத்குமார் கொலையை, சாதாரண கொலையாக கருத முடியாது.

ஒரு மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது...

அஜீத்தின் உடலில் 44 காயங்கள் இருக்கின்றன. அவர் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை.

ஒரு சாதாரண நகை திருட்டு வழக்கிற்காக தனிப்படை அமைக்கப்பட்டது ஏன்?

இளைஞர் அஜித்தை சீருடையில் இல்லாத போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தது ஏன்..??

எப் ஐ ஆர் கூட பதிவிடாத நிலையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டது யார்?

FIR பதியாமல் சிறப்புப் படை குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி கையில் எடுத்தது?

அஜீத்குமாரை விசாரிக்க CCTV பொருத்திய காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வேறு வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதன் காரணம் என்ன.?

அஜீத் விசாரணைக்கு இயக்குனராக இருந்தவர் யார்?

யாருடைய அழுத்தத்தின் பெயரில் அஜீத் விசாரிக்கப்பட்டார்?

யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறது அரசு?

~ நீதிபதிகள் அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.



SivaPriyan Sempiyan

ஏமாந்தவனை பாத்ரூம்ல வழுக்கி விழுந்தானு கைகால் ஒடச்சா ரிவார்டுஅப்பாவிய அடிச்சி கொலைபண்ணா பணி இடை நீக்கம்நல்லாருக்கு ஞாயம்...
30/06/2025

ஏமாந்தவனை பாத்ரூம்ல வழுக்கி விழுந்தானு கைகால் ஒடச்சா ரிவார்டு

அப்பாவிய அடிச்சி கொலைபண்ணா பணி இடை நீக்கம்

நல்லாருக்கு ஞாயம்

ஜெய்பீம் படத்துக்கு பக்க பக்கமா ரைட்டப் எழுதனவனுக, ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலைக்கு தெருவுல இறங்கி போராடுனவங்களும் எங்க போனாங்க

அஜித்குமாரை அடித்த கொலை செஞ்ச காவலர்களை பணி நீக்கம் செய்யனும், வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்படனும்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டபோது.. உருகி உருகி ரைட்டப் எழுதிய கொந்தளித்த திராவிட ...
30/06/2025

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டபோது.. உருகி உருகி ரைட்டப் எழுதிய கொந்தளித்த திராவிட கருத்துருவாக்க வாடகை வாய்கள் எதுவும், திமுக ஆட்சியில் நடக்கும் காவல்நிலையக் கொலைகளுக்கு வாய்த் திறப்பதில்லை..

எல்லாம் தொழில் நேக்கு..

#சிவகங்கை அஜித் கொலைக்கு நீதி வேண்டும்.

25/06/2025

பெரம்பூரில் உள்ள பிஸ்மி என்கிற பால் முகவர் தனக்கு அருகில் உள்ள மற்றொரு பால் முகவருக்கு இன்று (25.06.2025) காலையில் ஆவின் பால் விநியோகம் செய்ய வந்த மொத்த விநியோகஸ்தரின் (தங்கம் ஏஜென்சி, கொளத்தூர்) விநியோக வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துங்க என கூறியதற்காக அந்த விநியோக வாகன ஓட்டுநர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை வீடியோ எடுத்த பால் முகவர் பிஸ்மி அவர்களிடம் அந்த ஓட்டுர் ஆபாசமாக பேசியதோடு, "கால்சட்டையை கழட்டி காட்டுகிறேன் அதனையும் வீடியோ எடு" என அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் இந்த அராஜகத்திற்கு காரணம் ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் நாங்கள் பால்வளத்துறை அமைச்சருக்கும், ஆவின் அதிகாரிகளுக்கும் மாதந்தோறும் தவறாமல் கொடுக்க வேண்டிய கப்பத்தை கொடுத்து விடுவதால் தங்களை எந்த அதிகாரிகளும், பால்வளத்துறை அமைச்சரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணமே ஆணவமாக மாறி ஆவின் விநியோக வாகன ஓட்டுநர்களை இப்படி நடந்து கொள்ளும் தைரியத்தை அளிக்கிறது.

எனவே பால் முகவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, கால்சட்டையை கழட்டி காட்டுகிறேன் அதனையும் வீடியோ எடு என கூறி அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட ஆவின் மொத்த விநியோகஸ்தரின் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆவின் மொத்த விநியோகஸ்தர்களின் அடக்குமுறை, ஆணவப் போக்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
25.06.2025 / காலை 9.30மணி.

25.06.2025புதன்கிழமை=============இன்று ஜுன் 25, நாளை ஜுன் 26, நாளை மறுநாள் ஜுன் 27 மற்றும் ஜுன் 28 அதாவது ஜுன் 25-28 வரை...
25/06/2025

25.06.2025
புதன்கிழமை
=============

இன்று ஜுன் 25, நாளை ஜுன் 26, நாளை மறுநாள் ஜுன் 27 மற்றும் ஜுன் 28 அதாவது ஜுன் 25-28 வரை வடக்கு #கேரளா மற்றும் அதை ஒட்டிய #நீலகிரி மாவட்டம் #கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், #கடலோர கர்நாடகா மற்றும் #தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் தென் மேற்கு பருவமழையின் #தீவிரம் உச்ச பட்சமாக இருக்கும்...

===> ஏற்கனவே விட்டு விட்டு கனமழை பொழிந்து வரும் நிலையில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தொடர் தென் மேற்கு பருவமழை பொழிவு #மிதமானது முதல் கனமழை / #மிகக்கனமழை என்ற வகையில் இருக்கலாம்... நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் சிறுவாணி வெள்ளியங்கிரி மலைப்பகுதிகள் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் பலத்த மழை (15-20++++++ செ.மீ) பொழியும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையிலான தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமானது முதல் மிகக்கனமழை வரை பொழியக்கூடிய வாய்ப்பு உள்ளது..

===> கேரளா ஒட்டிய பாலக்காடு கணவாய் உள்ளிட்ட கணவாய் பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை கனமழை வரை பொழியக்கூடும். கோவை திருப்பூர் மாவட்டங்களின் எல்லையோர பாலக்காடு கணவாய் பகுதிகளிலும் தனித்த ஓரிரு இடங்களில் கனமழை பொழியும் வாய்ப்பு. கணவாய் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தாண்டியும், ஓரிரு முறை நீண்ட தூரம் தென் மேற்கு பருவமழை மேகங்கள் பயணிக்கும் வாய்ப்பு தென் படுகிறது.

===> காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக தீவிர மழை பொழிவு காரணமாக காவிரியில் நீர் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது..

===> மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு விநாடிக்கு சுமார் 50000-100000 கன அடி வரை, இந்த ஜுன் இறுதி நாட்களில் / ஜுலை முதல் வாரத்தில் இருக்கலாம். மழை பொழியும் தீவிரத்தை பொறுத்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது..
கர்நாடகா முதல் வங்கக்கடல் வரை காவிரி ஆறு சுத்தமாகும்..

===> பவானி சாகர் அணைக்கும் கணிசமான அளவிற்கு நீர் வரத்து கிடைக்கும். விநாடிக்கு சுமார் 20-30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான அளவில் நீர் வரத்து ஜுன் இறுதி வரையிலான ஓரிரு நாட்களில் இருக்கலாம்.

===> கோவை மாவட்டத்தின் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் சோலையாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேறும்..

===============
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
=============
===> இன்று காலை/ மதியம் தென் மேற்கு பருவமழை பகுதிகளில் ஓரிரு மணி நேரங்கள் சுளீர் வெய்யில் கிடைக்கும் பட்சத்தில், தமிழகத்தின் கோவை திருப்பூர் மாவட்டங்களின் மேற்கு காற்று மறைவு பகுதிகளில் ஓரிரு இடங்கள், திருப்பூர் மாவட்டத்தின் கரூர் மாவட்டம் ஒட்டிய பகுதிகள், கரூர் திண்டுக்கல் ( கிழக்கு ) ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் திருவள்ளூர் திருச்சி அரியலூர் பெரம்பலூர் சிவகங்கை புதுக்கோட்டை இராமநாதபுரம் டெல்டா மாவட்டங்களின் பகுதிகள் & புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று (25.06.2025) ஒரு நாள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம். தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் காரணத்தால் அனைத்து இடங்களிலும் பரவலான மழை மற்றும் நீண்ட நேர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்பது குறைவு.
மாறாக இன்று வெய்யில் கிடைக்காத பட்சத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே அமையும். இருப்பினும் ஆங்காங்கே சாரல் தூறல் துளி லேசான மழை கிடைக்கும்..

=============

குறிப்பிடத்தக்க அளவில் வானிலை மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் பதிவிடப்படும்.
நன்றி.
=============
ஓடை இரா.மாரிமுத்து

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Kaaritv - காரிடிவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaaritv - காரிடிவி:

Share

“உண்மை உடனுக்குடன்”

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும்