Mathura Calendar

Mathura Calendar Updates Daily -- Tamil Calendar Digital Version Updates Daily -- Tamil Calandar Digital Version
(3)

ஒரு நிமிடம் படித்துப் பாருங்களேன் #ஒரு_குட்டி_நீதிக்கதை..!!ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொ...
10/10/2025

ஒரு நிமிடம் படித்துப் பாருங்களேன்
#ஒரு_குட்டி_நீதிக்கதை..!!
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .
அடிக்கடி கோவிலுக்கு போவார்.
கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .
ஓரளவுக்கு வருமானம் வந்தது .
அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .
ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !
அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..
அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்
"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..
அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்
அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...
அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...
புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியா போய்ட்டது !
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்
இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...
தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..
நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?r
எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சார் .
அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,
கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்......
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....!
நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..
விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும் , உயர்விலும் கடவுளின் வழிகாட்டுதல் உள்ளது .

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.இந்தப் பள்ளியி...
09/10/2025

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩
தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡
வகுப்புல பாடம் நடத்தும் போது நீ
என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு
கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭
அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? 🤔
என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄
ஒரு புதிய சிந்தனை உருவானது.
தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.
ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
அதன் பெயர் *இயர் மஃப் (Ear muff)*
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்
இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.
ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.
அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என
அதிகாரி உத்தரவிட்டார்.
போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.
கோடீஸ்வரனானான்.
அவர்தான்
*செஸ்டர் கீரின் வுட்*😊
*சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்* 👍🏻👍🏻👍🏻

ந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..2. தந்தையின் கண்டிப்பை பொறுத்த...
08/10/2025

ந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின் கண்டிப்பை பொறுத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது..
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியமாக காட்சியளிப்பீர்கள்..
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!1. த
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்து கொள்ளுங்கள்..
தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
அவரின் காலத்திலேயே அவருக்கு மரியாதை செய்வோம்...
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்..
அவர் உன்னுடன் அருகில்
இருக்கும்போது அவருடைய
அருமை உனக்கு தெரியப்போவதுமில்லை.

1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லா...
07/10/2025

1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!
✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...
வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!
✅ 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!
✅ 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே...அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!
✅ 5) வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!
✅ 6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை
விட்டு கொடுக்காதே... அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!
✅ 7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்... நீயும் உண்மையாய் இரு...!!
✅ 8)அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...அதுவே உனக்கு
வரும் போது தான், அதன் வலியும் வேதனையும்
புரியும்...!!
✅ 9) உன் மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்... நீயும் உண் மனைவிக்கு
உண்மையாய் இரு, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே, அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு...!!
✅ 10) ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்... அவனை விட்டு விலகியே இரு...!!
✅ 11) எல்லோரிடமும் நட்பாய் இரு... நமக்கும் நாலு
பேர் தேவை...!!
✅ 12) நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை
சேர்க்க வேண்டும் என்பதில்லை... யாருக்கும் தீங்கு
செய்யாமல் இருந்தாலே...நீ கோவில் சென்றதற்கு
சமம்...!!
✅ 13) நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும் நினை... நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!
✅ 14) எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!
✅ 15) அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட
வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள்
என்பதை மனதில் கொள்...!!
✅ 16) பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்,நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்...உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே...!!✍🏼🌹

நான் நல்லவனா ? கெட்டவனா ?? - எல்லார்க்கும் தங்களுக்குள்ளே எழும் கேள்வியே இது ..நம் நல்லவனும் இல்லை !! கெட்டவனும் இல்லை !...
06/10/2025

நான் நல்லவனா ? கெட்டவனா ?? - எல்லார்க்கும் தங்களுக்குள்ளே எழும் கேள்வியே இது ..
நம் நல்லவனும் இல்லை !! கெட்டவனும் இல்லை !! என்பதே இங்கு நிதர்சனம் ..
பிறக்கும்போது இல்லாத ஒன்றை !!
வளரும் சூழல் !!
வளர்ந்த விதம் !!
திணிக்கப்பட்டது !!
எற்றுகொள்ளபட்டது !!
நீ இப்படிதான் என்று யாரோ சொல்வது !!
நான் இப்படித்தான் என்று நீயே ஏற்றுக்கொண்டது !!
அவரை போல ?? இவரை போல ?? என்று யாரோ / நாமோ பொருத்தி பார்ப்பது ??
யாரோ இப்படி என்று சொன்னால் நான் அப்படி இல்லை என்று உங்களுக்கே தெரியும் ??
நீங்களே நான் இப்படித்தான் என்று அறுதியிட்டு கூற முடியாது தானே ..
சூழல் ? சூழ்நிலை ? சுற்றி இருப்பது ? எதிர்பார்ப்பது ? ..
போன்றவை அமையும் பொருட்டே நீங்கள் ..
அப்போது
உங்களை கையாள்பவன் கருணையின் வெளிப்பாடே நீங்கள் ..
யாரிடம் உன்னை எப்படி காட்டவேண்டுமோ அப்படி காட்டுகிறான் ..
உன்னிடம் எது ? எப்போது ? எப்படி வெளிபட்டால் ?? உன்னை யார் எப்படி கருதுவார்கள் என்று
உன்னை மீறி உன்னை காட்டும் அற்புதன் உன்னை உள்ளும் வெளியும் கையாளுகிறான் ..
பொதுவாய் சொன்னால்
ஈர மண் நாம் எப்போது உன்னுள் எதை பிசைந்து என்ன வடிவாய் எப்படி வெளி காட்டுகிறானோ அப்படி தெரியும் நீ ??
நல்லவன் கெட்டவன் என்று உன்னை நினைப்பது ஒரு மாயை தான் ..
இவை இரண்டுமற்ற நிலையில் நம்மை வைத்திருப்பதாலேயே எப்படியும் இறைவன் உன்னை கையாள முடிகிறது ..
இந்த நல்லவன் / கெட்டவன் ?? என்ற எண்ணத்துள் சுற்றிக்கொண்டு இருப்பவன் ??
தன்னை எங்கே ? எப்படி ? இருத்தி ?? எதை வெளிப்பட வைத்து கொண்டு இருக்கிறான் என்று நம்மை அவன் கையாளும் கருணையை அனுபவிக்க தொடங்கினால் ??
பிரபஞ்சத்தையே இயக்கி ஆளும் பேரருட் கருணையாகிய இறைவன் நம்மையும் மதித்து இறங்கிவந்து !!
உள்ளிருந்து !! வெளியும் இருந்து !! இந்த பிரபஞ்சத்தையே என்னோடு எனக்காகவும் இயக்கி ..
என்னை எப்படியெல்லாம் கையாளுகிறான் என்று கவனித்து அனுபவித்து உணர தொடங்கி விட்டால் ..
இந்த நல்லவன் / கேட்டவன் செத்துபோவன் ..
அதுவரையில் இப்படியும் / அப்படியும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்போம் ..
அவனை தவிர்த்து ?? அவனால் .................
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா— at திண்டுக்கல்.

06/10/2025

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின் கண்டிப்பை பொறுத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது..
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியமாக காட்சியளிப்பீர்கள்..
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்து கொள்ளுங்கள்..
தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
அவரின் காலத்திலேயே அவருக்கு மரியாதை செய்வோம்...
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்..
அவர் உன்னுடன் அருகில்
இருக்கும்போது அவருடைய
அருமை உனக்கு தெரியப்போவதுமில்லை.

ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான...
05/10/2025

ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல.
அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.
ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது. ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது. ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது. இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும்.
நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பது தான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.
நம்மை "நல்வழி" நடத்திட நாலு பேரின் அறிவுரைகள் தேவையில்லை
நமக்குள் நற்சிந்தனைகள் இருந்தால் போதும் அதுவே நம்மை "நல்வழி" படுத்தி விடும். தீய சிந்தனைகளை தவிர்த்து நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
#வாழ்த்துகள்.
#வாழ்க_வளத்துடன்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க 10 வழிகள்... குடும்பம் என்பது ஒரு வரம். மகிழ்ச்சியான, நிம்மதியான குடும்ப வாழ்க்கை எல்...
04/10/2025

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இருக்க 10 வழிகள்...
குடும்பம் என்பது ஒரு வரம். மகிழ்ச்சியான, நிம்மதியான குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. அமைந்து விடுவதில்லை என சொல்வதை காட்டிலும் அமைத்துக் கொள்வதில்லை என்று கூறலாம்.
நம் பெற்றோர், பிள்ளை, சகோதரிகள் நம் குடும்பம் தான் நம் முதல் சொத்து. அவர்களுக்கு ஏதாவது என்றால், அழுகிறோம், மனம் உடைந்து போகிறோம்.
அவர்களுக்காக உழைக்கிறோம். தியாகங்கள் செய்கிறோம். சிலர் தன் குடும்பத்தை எப்படியாவது வறுமையிலிருந்து மீட்டு கரை சேர்த்து விட வேண்டும் என பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, போராடி உழைத்து சொந்தமாக வீடு கட்டி தான் திருமணம் செய்யாமல் தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கின்றனர்.
இன்றைய காலத்தில் அதிகமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. பல காரணங்கள் இருந்தாலும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இல்லாமையே பிரதான காரணமாகும்.
1) வேலை வேறு, குடும்பம் வேறு
வேலை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் பாதணிகளைக் கழட்டுவீர்கள் தானே ? அக்கணமே உங்கள் வேலையினையும் சேர்த்து வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு செல்லுங்கள். அதாவது, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு, கோபம், பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு செல்லாதீர்கள்.
2) நேரம் ஒதுக்குங்கள்
நீங்கள் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
3) கலந்துரையாடுங்கள்
உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளை பற்றி கதையுங்கள். கலந்துரையாடுங்கள். குடும்ப உறுப்பினர்களின் கதைகளைக் கேட்டு பரிமாறிக் கொள்ளுங்கள்.
4) நகைச்சுவை உணர்வு
இடைக்கிடையான நகைச்சுவையும் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், முகம் சுளிக்காதவாறு இருத்தல் வேண்டும்.
5) பாராட்டுக்கள்
பெயர், முகம் தெரியாத பலரை பேஸ்புக்கிளும் வாட்ஸ்அப்பிலும் புகழ்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால், ஒரே வீட்டில் உண்டு வாழும் குடும்பத்தினரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
” குழம்புக் கறி நல்லா இருந்தது “
” இந்த சாரியில் நீ நல்லா இருக்க “
” இந்த முறை உங்கள் புள்ளிகள் நல்லா இருக்கின்றன ” என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுங்கள்.
6) குறைகளை ஏற்று வாழுங்கள்
கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் மனிதர்களே !
மனிதர்கள் என்றாலே எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தானே செய்யும்.
” குறைகளை ஏற்று வாழுங்கள். இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை “
ஆனால், குறைகளை விட நல்ல விடயங்கள் அதிகமாகவே இருக்கும். அதனை புகழுங்கள்.
7) சுற்றுப்பயணங்கள்
எந்நேரமும் வேலை என சுற்றிக் கொண்டிருப்பவர்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக, மகிழ்ச்சியாக சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
அல்லது வீட்டிற்கு அருகிலுள்ள தளங்களை பார்வையிடலாம். மற்றும் குடும்பத்தினரை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்.
😎 சேர்ந்து உணவருந்துங்கள்
இப்போதெல்லாம் தாய் நாடகம் பார்த்துக்கொண்டு உணவருந்த, பிள்ளைகளோ மொபைல்போன் பாவித்துக்கொண்டு உணவு அருந்துவது வழமையாகிவிட்டது.
இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.
எல்லோரும் ஒரே மேசையில், பாயில் சேர்ந்து உணவருந்தலாம். ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாறி கொள்ளலாம்.
9) செவிமடுங்கள்
குடும்பத்தினருக்கு மத்தியில் பிரச்சினைகள் வருவதற்கான காரணங்களில் ஒழுங்காக செவிமடுக்காமையும் ஒரு காரணமே. கணவன் செல்வதை மனைவியும்,
மனைவி சொல்வதை கணவனும், பெற்றோர், பிள்ளைகள் பிள்ளைகள், பெற்றோர் என ஒருவர் சொல்வதை மற்றவர் அமைதியாக செவிமடுத்தாலே போதும்
பாத்திரங்கள் காற்றில் பறக்காது.
10) பரிசளித்துக் கொள்ளல்
இடைக்கிடை குடும்பத்தினர் மத்தியில் போட்டிகளை நடத்தலாம். பரிசளித்துக்கொள்ளலாம். மனைவியின் சுவையான உணவிற்கு ஓர் பரிசு , பிள்ளைகளின் நன்னடத்தைகளை பாராட்டி பரிசு என ஒருவரை ஒருவர் பரிசளித்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி நீடிக்கும்..

நட்பு என்பது நல்ல உறவுதான், நட்புக்கு ஈடான உறவு வேறு எதுவுமில்லை என்று நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொள்வது வழக்கம்தானே! ந...
03/10/2025

நட்பு என்பது நல்ல உறவுதான், நட்புக்கு ஈடான உறவு வேறு எதுவுமில்லை என்று நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொள்வது வழக்கம்தானே! நீங்கள் நிச்சயமாக சில நட்பிலிருந்து விலகத்தான் வேண்டும். (What is true friendship?) இப்படியாகப்பட்ட நட்புகள் என்ன என்று பார்க்கலாமே!
நமது சக்தியை இழக்கச் செய்பவர்கள்
சில நண்பர்களிடம் உரையாடும்பொழுது உற்சாகமாக இருக்கும். தன்னம்பிக்கை வளரும், மகிழ்ச்சி மனநிலை உருவாகும். ஆனால் சில நண்பர்களிடம் பேசும்பொழுது, நமது உரையாடல்களில் அவர்களது கவனம் இருக்காது. வேறு எங்கோ அவர்களின் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். நம்மை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள். உங்களின் சிந்தனைகளுக்கு பேச்சுகளுக்கு எதிர் மறையாக இருப்பார்கள். உங்களிம் இனிமையாக பேசிவிட்டு உங்களுக்கு பின்னால் உங்களைப்பற்றி வதந்தி அல்லது புகார் வாசிப்பார்கள். ஆக, இந்த நட்பினை விலக்க வேண்டும்.
நட்பு என்னும் முகமூடி அணிபவர்கள்
இவர்கள் நட்பு என்னும் முகமூடியோடு திரிபவர்கள். உங்கள் முகத்தைப் பார்த்து புன்னகை செய்பவார்கள். ஆனால் உங்களுக்கு எதிராக வேலை புரிந்து உங்களை பள்ளத்தில் தள்ளுபவர்கள். உங்களின் இக்கட்டான சூழலைக்கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்பவர்கள். ஆகவே, இவர்களை விலக்கிவிடுவது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மகத்தான செயலாகும்.

எது ரசிக்கப் பட்டதோ அதுவே ஒரு நாள் சலிப்பாகும்.எது பிரமிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கப்படும்..எது அற்புதமானது என்று போற்றப்ப...
02/10/2025

எது ரசிக்கப் பட்டதோ அதுவே ஒரு நாள் சலிப்பாகும்.
எது பிரமிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கப்படும்..
எது அற்புதமானது என்று போற்றப்படுகிறதோ...
அதுவே ஒரு நாள் குப்பையாகவும் போகும்....
மனித மனங்கள் அவ்வளவு தான்...!!
மாறவேண்டியஇடங்கள்...
மாற்றவேண்டியஇடங்கள்...
உங்கள் வாழ்வில் மாற்றங்களை எங்கே ஏற்றுக்கொள்ள வேண்டும்? எங்கே உங்களால் மாற்றம் செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்த பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிலையும் சந்தோஷம், சோகம், வெற்றி, தோல்வி ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. சில நேரங்களில் நாம் ஒரு சூழ்நிலையை மாற்ற முயற்சிக்கிறோம்.
ஆனால் அது நம்மால் மாற்ற இயலாத ஒன்று. சில நேரங்களில் நாம்தான் மாற வேண்டும், ஆனால் அதை புரியாமல் வெளியில் மாற்றங்களை தேடுகிறோம்.
உண்மையான அறிவு என்பது "நாம் மாறவேண்டிய இடங்கள் எவை? நாம் மாற்றவேண்டிய இடங்கள் எவை?" என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது.
முக்கிய பத்து வாழ்வியல் உண்மைகள்.
1.மாற்றத்தை ஏற்கும் திறமை மிக முக்கியம்
ஒவ்வொரு மாற்றமும் ஒரு நன்மைக்கான வாய்ப்பாக இருக்கலாம். அதை எதிர்க்காமல், புரிந்து கொண்டு ஏற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
2.சில சூழ்நிலைகள் நம்மால் மாற்ற முடியாது.
நாம் பிறந்த குடும்பம், சமூக கட்டமைப்பு, சில பயணிகள் இவை சில நேரங்களில் நம் கட்டுப்பாட்டிற்கு வெளியிலிருக்கலாம்.
3.நம் பார்வையை மாறவைக்கலாம்
பல சமயங்களில் நிகழ்வுகள் அல்ல, நாம் அவற்றைப் பார்க்கும் விதமே நம் உணர்வுகளை தீர்மானிக்கிறது.
4.நாம் மாற தயாராக இருக்க வேண்டும்
உண்மையான முன்னேற்றம் என்பது தனக்கு தேவையான மாற்றங்களை ஏற்க தயாராக இருப்பதில்தான் உள்ளது.
5.மாற்றத்தை நாமே உருவாக்க வேண்டும்.
சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால், அதை நாமே முதலில் தொடங்க வேண்டும்.
6.தவறுகளை ஏற்பதாக ஏற்றுக்கொள்வது வளர்ச்சியின் அடையாளம்
“நான் சரியாக இல்லை” என்று கூறும் தைரியம், “நான் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்” என்பதற்கான ஆரம்பமே.
7.சில நேரங்களில் நிறுத்ததலும் தேவை
தவறான உறவுகள், பாதிப்பான சூழ்நிலைகள், நமக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் இவையெல்லாம் விலகவேண்டியவை.
8.நம் எண்ணங்களை மாற்றும் திறன் நம் வாழ்க்கையை மாற்றும்
"நான் முடியாது" என்பதிலிருந்து "நான் முயற்சிக்கிறேன்" என்று மாற்றம் வந்தவுடன் வாழ்க்கையின் பாதை மாற ஆரம்பிக்கிறது.
9.எதையும் சாதிக்க முடியும் என்பது உண்மை
உனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும்போது, வெளியில் நடக்கும் நிகழ்வுகள் உன்னை வியக்க வைக்கும்.
10.மாற்றங்கள் நேரம் எடுத்துக்கொள்கின்றன
இன்று விதைக்கும் மாற்றம், நாளை ஒளிரும் வெற்றியின் விதையாக மாறும்.
நாம் மாறவேண்டிய இடங்களை உணர்ந்தால், நம்மிடம் அமைதி இருக்கும். நாம் மாற்றவேண்டிய இடங்களை உணர்ந்தால், நம்மிடம் ஆற்றல் இருக்கும். இவை இரண்டும் சேரும் போது வாழ்க்கை சீரானது, அமைதியானது, வளர்ச்சியடைந்தது என்பதற்கான பாதை தெளிவாகும்.
மாற்றங்களை எதிர்நோக்குங்கள், ஆனால் அதற்குள் உங்கள் மாறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

காரணமின்றி இந்த உலகில் எதுவும் நடக்காது.!!!*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கைதான் என்பதை உண...
02/10/2025

காரணமின்றி இந்த உலகில் எதுவும் நடக்காது.!!!
*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கைதான் என்பதை உணரவேண்டும்
*ஒரு பெரிய வீட்டில் ஆடு , மாடு, நாய்கள் , இருப்பதை அருகில் சிறிய வீட்டில் இருக்கும் ஒரு குட்டி எலி கவனித்து வந்தது அதற்கு நீண்ட நாட்கள் ஆசை
*அதாவது இந்த விலங்குகள் எல்லாம் பெரிய வீட்டில் வசதியாக ஆடி பாடி திரிகிறதே ஆனால் நமக்கு மட்டும் வீடு அப்படி இல்லாமல் மிகவும் சிறியதாக இருக்கிறதே என்று
*இங்கே நம் வீட்டில் ஓடி, ஆட இடமே இல்லையே என்று மிகவும் வருத்தம் , உடனே ஒரு நாள் தன்னுடைய தாயிடம் கேட்டது இந்த குட்டி எலி
*அம்மா ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு படைப்பு நமக்கும் பெரிய வீடு இருந்தால் நாமும் மற்ற விலங்குகள் போல சந்தோசமாக இருக்கலாம் அல்லவா என்று கேட்க
*அதற்கு தாய் எலி அமைதியாக இதற்கான காரணத்தை நீயே விரைவில் உணர்ந்துகொள்வாய் என்று கூறியது, இப்படியே சில நாட்கள் போனது
*ஒருநாள் அந்த குட்டி எலி வெளியே சுற்றி திரியும்போது அந்த வழியாக வந்த பூனை அதை பார்த்து துரத்த ஆரம்பித்தது , உடனே உயிர் பயத்தில் அந்த குட்டி எலி அந்த பெரிய பங்களாவின் தோட்டத்தில் போனது அங்கேயும் அந்த பூனை விடவில்லை
*மீண்டும் விடாப்பிடியாக துரத்தியது கடைசியில் அந்த குட்டி எலி தன்னுடைய சிறிய வீட்டிற்குள்ளே புகுந்தது.
*இப்போது அந்த பூனையால் உள்ளே நுழைய முடியாமல் ஏமாந்து விட்டு சென்றது
*இதை கண்ட அந்த தாய் எலி கூறியது , இப்போது இந்த சிறிய வீட்டின் அருமை புரிகிறதா ? எதையும் அதன் அருமை புரியாமல் ஏளனமாக பார்க்கக்கூடாது , இந்த சிறிய வீடு இல்லையென்றால் இன்று நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறி அந்த குட்டி எலிக்கு புரியவைத்தது .
*இதை உணர்ந்த அந்த குட்டி எலியும் தன் ஆசைகளை குறைத்து சிறிய வீட்டிலே மகிழ்ச்சியோடு வாழ்ந்தது.
*இப்படித்தான் நண்பர்களே நாமும் ,
*இருக்கும் இடத்தில் இருக்கின்ற சிறப்புகளை அறியாமல் எதை எதையோ தேடுகிறோம் மற்றும் இறைவனையும் குறைக்கூறுகிறோம்
*நமக்கு செல்வாக்கு , பணம் ,புகழ் கிடைத்தால் அதோடு நிம்மதி இல்லாத வாழ்க்கை அமையும் என்பதை உணரவேண்டும்.
*நமக்கு இறைவன் கொடுக்காத ஒன்றை பற்றி கவலைப்படவேண்டாம் , ஒருவேளை நாம் கேட்கும் ஒன்று கிடைத்தால் அதனால் நமது உயிருக்கே ஆபத்து கூட இருக்கலாம் ( அது காதல் , பணம் , நண்பர்கள் , சொத்து , சொந்தம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் )
*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கைதான் என்பதை உணரவேண்டும்
*சிலர் சொல்லுவாங்க தனியாக இருக்கிறன் யாரும் இல்லை என்று ஒருவேளை நிறைய நண்பர்கள் இருந்து அவர்கள் உங்களை மதிக்காமல் , அவர்களால் உங்கள் வாழ்க்கையே சீரழிந்தால் என்ன செய்யமுடியும் ??
*எனவே சிலநேரத்தில் சிலர் இல்லாமல் இருப்பதும் நன்மைக்கே என்று தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
*எல்லாத்துக்கும் மிகப்பெரிய காரணம் இருக்கலாம் , நாம் இப்போது அனுபவிக்கும் சிறிய வலிகளுக்கு பின்னால் இறைவன் மிகப்பெரிய நம்மால் தாங்கமுடியாத வலிகளை மறைத்துக்கூட வைக்கலாம் .
*எனவே எதையும் ஏற்றுக்கொண்டு இருப்பதை வைத்து சிறப்போடு வாழ கற்றுக்கொள்வோம் , நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறந்த ஒன்றுதான் என்பதை உணர்வோம் ...
*நல்லதே நினை*
*நல்லதே நடக்கும்*

நம்மில் யாருமே   75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை.⚡போகும் போது எதையும் எடுத்துக் கொண்டு போக...
01/10/2025

நம்மில் யாருமே 75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை.
⚡போகும் போது எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை
⚡ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.
⚡செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.
⚡ மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
⚡உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
⚡எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
⚡நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள்.
⚡அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
⚡நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும்.
⚡உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
⚡ நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் என்ன பெரிய பதவியில் இருந்தாலும் நமது மகன் / மகள் தலைவிதிப்படியே நடக்கும், நாம் ஒரு வழி காட்டியே
⚡சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
⚡பணம் ஆரோக்கியத்தை மீட்டு தராது!
⚡ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
⚡அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமேபோதும்.
ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
⚡ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
⚡பணம், புகழ்,சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
⚡யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும் தான் கெடும்.
⚡மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை ! உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
⚡நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் - இவைகள் இன்னும் சில ஆண்டுகள் உங்களை வாழவைக்கும்!!

Address

12/1, Ahimshapuram 2nd Street Extension, SELLUR
Madurai
625002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 2pm

Telephone

9944274992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathura Calendar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathura Calendar:

Share