24/02/2022
நண்பர் பாரதி கனகராஜ் பதிவிலிருந்து ..
ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது, நம் இயல்வாகை அரங்கம் நுழையும்போது மட்டும் இனிமையாய், இயற்கையாய் உணர்வோம். இதயம் நிறைவாய் உணரும் தருணங்கள் அவை. இந்த ஆண்டு கண்காட்சிக்குச் செல்லும் நண்பர்கள் தவறாமல் அரங்கு எண் 468 ஐ பார்த்துவிட்டு ஒரு நம்மாழ்வார் நூலையும், ஒரு ஜோல்னா பையையும் வாங்கிக் கொண்டு வாருங்கள்...
நம்மாழ்வார் ஐயாவின் அனைத்து நூல்களும், இயற்கை வாழ்வியல், ஆரோக்கியமான உணவு முறைகள், தாய்மைப் பொருளாதாரம், உள்ளிட்ட நூல்களும், கோவை சதாசிவம் ஐயா எழுதிய நூல்களும், இயற்கை சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஐயா அவர்களின் காடோடி, நீர் எழுத்து ஆகிய நூல்களும் இயல்வாகை அரங்கில் கிடைக்கும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், மறக்காமல் சுட்டி யானை சிறுவர் மாத இதழை சப்ஸ்க்ரைப் பண்ணீருங்க...அதற்கும் கண்காட்சி அரங்கில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இயல் வாகை, இயற்கை சூடிய வாகை....