28/08/2025
📌சற்று முன்...
📢என் இனிய இனிப்பு நண்பர்களே ...
😊முகத்தைப் பராமரிப்பது போல, உங்கள் கால்களையும் பராமரியுங்கள்.
📌50 வயது நபர், குதிகாலில் கடுமையான வலி, வீக்கம் மற்றும் துர்நாற்றம் மிகுந்த சலம் வழிந்த நிலையில் வந்தார்.
10 நாட்களாக இந்தப் பிரச்சனை உள்ளதாகவும்,எப்படி சலம் வந்தது என்றே தெரியவில்லை. காலில் எதுவும் குத்தவில்லை என்று கூறினார்.
"சரி வாங்க பார்ப்போம் " என்று dressing room இற்கு அழைத்துச் சென்று , அவரது காலை சுத்தம் செய்து பார்த்தால், உள்ளே சதைகள் அழுகிய நிலையில் இருந்தன. உள்ளே கருப்பாக ஏதோ இருந்தது. எடுத்து பார்த்தால் இந்த காட்டு கருவை முள் .
"இந்தாங்க , இதுதான் உங்கள் வலிக்கும், bad smell வந்ததுக்கும் காரணம்" என்று அந்த முள்ளை எடுத்து அவரது கையில் கொடுத்து விட்டேன்.
📢டயாபடீஸ் உள்ளவர்களுக்கு பாதங்களில் உணர்ச்சி குறைவாக இருப்பதால், கல், முள் குத்தினாலோ, சூடான தரையில் வெறும் காலோடு நடந்தாலோ சுடும் உணர்வு இல்லாமல், இது போன்ற காயம் ஏற்படுகிறது.
📢எனவே முகத்தைப் பராமரிப்பது போல் உங்களது பாதங்களையும் பராமரியுங்கள்.
This முள் made my day !