Christian Irai Padalgal.

Christian Irai Padalgal. ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. Holy Family Pray for us
(5)

🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌼🌼*இன்றைய நாள் சிந்தனை*🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼*⚜️நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியும்.!⚜️*இயேசுவில் இனியவர்களே,இயேசுவின் சீடர...
21/10/2025

🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌼🌼

*இன்றைய நாள் சிந்தனை*

🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼

*⚜️நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியும்.!⚜️*

இயேசுவில் இனியவர்களே,

இயேசுவின் சீடரிடம் இருக்கவேண்டிய இரு முக்கியமான பண்புகளை இன்றைய வாசகம் சுட்டிக்காட்டுகிறது: அவர்கள் நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியுமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஆண்டவர். இயேசு தம் சீடரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். நற்செய்தி அறிவித்தல், சான்றுகளாய் வாழ்தல், நலப்படுத்துதல் போன்ற பணிகளே அவை. இப்பணிகளை நாம் நம்பிக்கைக்குரிய விதத்தில் ஆற்றவேண்டு;ம் என எதிர்பார்க்கிறார் இயேசு. யாரெல்லாம் இப்பணிகளை நம்பிக்கைக்குரிய விதத்தில் நிறைவேற்றுகிறார்களோ, அவர்களே திருச்சபையால் புனிதர்கள் என்று ஏற்பிசைவு செய்யப்படுகிறார்கள். இரண்டாவது பண்பு: அறிவாற்றல். அறிவுக் கூர்மையுடன் காலத்தின் தேவைகளை அறிந்து, செயல்படுபரே நல்ல சீடர். இந்த அறிவு மறையறிவு, இறைமொழி அறிவு, பொது அறிவு, உளவியல் அறிவு என முழமையான அறிவாற்றலாக இருத்தல் வேண்டும்.

இயேசு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். தந்தை இறைவன் அவரிடம் ஒப்படைத்த பணியை இயேசு நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் செயல்படுத்திக்காட்டினார். தந்தையின் பாராட்டைப் பெற்றார். இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகிறேன் என்று வாழ்த்தினார். நாமும் நமது கடமைகளை, பொறுப்புகளை நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் ஆற்றி, இயேசுவின் பாராட்டை, திருச்சபையின் ஏற்பிசைவைப் பெறுவோமா!

*✝️மன்றாடுவோம் :🛐*

எங்களைப் பெயர் சொல்லி அழைத்த அன்பின் தெய்வமே, இயேசுவே. உம்மைப் போற்றுகிறோம். நீர்; எங்களுக்குத் தந்த அழைத்தலின்படி, நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் பணி செய்ய எங்களுக்கு உமது தூய ஆவியை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼

👑🌹👑🌹👑🌹👑🌹👑*செபமாலை மாதாவின்**வணக்க மாதம் - நாள்-16*👑🌹👑🌹👑🌹👑🌹👑*கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார்* இந்த இரக...
16/10/2025

👑🌹👑🌹👑🌹👑🌹👑

*செபமாலை மாதாவின்*
*வணக்க மாதம் - நாள்-16*

👑🌹👑🌹👑🌹👑🌹👑

*கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார்*

இந்த இரகசியத்தில் ஆண்டவர் வேதனை சாகரத்தில் மூழ்குகிறார். மரணமட்டும் அது நீடிக்கும் . பாடுகளின் ஒவ்வொரு சிறு அம்சமும் எப்போதும் அவர் வாழ்நாள் முழுவதுமே அவர் நினைவில் நின்றது . எனினும் நமது படிப்பினைக்கும் நலனுக்கும் அக்கசப்பான பாத்திரத்தின் சகிக்கொணாத தன்மையை முதல் முதல் கண்டது போல நமக்கு இங்கு காட்டச் சித்தமானார் . இயற்கையாய் எழும்பும் பயத்தையும் , நடுக்கத்தையும் தம் மனித சுபாவம் உணரச் சம்மதித்து , அதன் கோரத்தை விம்மலிலும் வேண்டுதலிலும் வெளிப்படுத்துகிறார் ; என்ன மனோ வேதனை !

ஒரு பெரிய கத்தோலிக்கரல்லாத உத்தியோகஸ்தர் புத்திக்கூர்மையுள்ளவர்; நேர்மையாளர் ; ஒரு நாள் கடின வியாதிக்கு ஆளானார் . சரீர வாதனையை விட இந்நோயால் அவருக்கு ஏற்பட்ட மனோவாதனை அதிகம் . இதை எழுதுகிற ஒருவரிடம் ," சுவாமி இந்த தாங்கொணா மனோவேதனையால் என்ன இலாபம் ?" என்று கேட்டார். அவர் கத்தோலிக்கராக இருந்தால் எவ்விதம் கடவுள் இவ்வாதனையை மனிதனுடைய ஈடேற்றத்திற்குப் பயன்படுத்துகிறார் என்று இக்காட்சியைச் சித்தரித்திருக்கலாம் . மனோ வாதனையின் இலாபத்தை இயேசு இங்கு காட்டுகிறார் . கிறிஸ்தவர்கள் அதை அறிய வேண்டும்
"இயேசு நமக்காகப் பாவம் ஆனார் " என்று துணிந்து புனித சின்னப்பர் கூறினார் . நாம் ஆராய்ந்தும் கண்டுபிடிக்க அரிதான விதத்தில் நமது பாவங்களின் பாரத்தை அவர் சுமந்து , அதன் வாதனையால் இரத்த வியர்வை சிந்தினார் . ஆறுதலைத் தேடி வந்த அவர் தூங்கும் அப்போஸ்தலர்களைக் கண்டார். விழிப்புள்ளவர்கள் பின் வந்த புனிதர்கள்; இயேசுவின் மனோ வாதனையில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்.

கிறிஸ்து எம்மனிதனும் பாடுபட்டதற்கு மேல் பாடுபடுகிறார் என்பதும், கிறிஸ்து கடவுள் என்பதும் இவ்விரு எண்ணமும் பாடுகளின் தியானங்களில் நம் உள்ளம் உலவ வேண்டும். இயேசுவைப் போல இப்பெரிய மனோ வாதனையை வேறொருவர் அனுபவித்ததாக எந்த வரலாற்று ஏட்டிலும் நாம் வாசித்தது கிடையாது . நம்மில் ஒவ்வொருவரும் உடலிலும் மனதிலும் வாதனையை அனுபவிக்க வேண்டும் . அதைத் தவிர்ப்பதற்காக உல்லாசங்களைத் தேடலாகாது . சோதனையில் விழாதபடி விழித்திருந்து செபம் செய்யுங்கள் . சிலர் மருந்திலும், மதுபானத்திலும் மனோவாதனையை மாய்க்கத் தேடுகிறார்கள் . இது ஒரு சோதனை . வேறு பெரிய சோதனை ஆண்டவரது அன்பின் மேல் ஐயம். மேற்சொன்ன உத்தியோகஸ்தரின் மனைவி அடிக்கடி சொல்லுவாள் " சுவாமி , கடவுள் நல்லவர் நல்லவர் என்கிறீர்களே , ஏன் எங்கள் எல்லாரையும் இவ்விதம் வாதிக்கின்றார் ?"

வாதனைக்குள்ள காரணங்கள் உண்மையா என்ற சந்தேகம் வேறொரு சோதனை . வாதனைக்குக் காரணங்கள் நான்கு..

1. இறைவனுடைய நீதி
2. உலகத்தின் ஒழுங்கு
3. மனிதனுடைய பாவம்
4. பாவப் பரிகாரம்

இவைகளை நம்பாவிடில் வாதனையின் காரணங்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்? மேற்சொன்ன உத்தியோகஸ்தரும் அவரது மனைவியும் அடிக்கடி கேட்பார்கள் :" சுவாமி , வாதனை பாவத்திற்குத் தண்டனை என்கிறீர்களே , நாங்கள் அவ்வளவு பெரிய அக்கிரமிகளா ?" அவர்கள் கிறிஸ்துவர்கள் அல்லாதபடியினால் இவைகளைக் கண்டுபிடிப்பது சிரமம் . சிறு பாவம் எனினும் பெரும் பொல்லாப்பு , கடவுளுக்கு துரோகம் , உலக ஒழுங்கின் நிலையைக் குலைக்கிறது . நீதியுள்ள இறைவன் அதைத் தண்டிக்க வேண்டும் . உலக ஒழுங்கின் நிலையைச் சரிப்படுத்தவேண்டும் . ஆதலால் பாவப் பரிகாரத்தை விதிக்க வேண்டும் . துன்ப சமயத்தில் சோதனைக்கு ஆளாகாவண்ணம் விழித்திருந்து செபிக்க வேண்டும் .
கடவுள் மனிதருடைய பாவங்களுக்காக , மனிதர்களை ஈடேற்றப் பாடுபடுகிறார் . நாம் அவருடைய ஞான சரீரத்தின் அவயங்கள் . அவரோடு பாடுபட வேண்டும். நமது துன்பத்தை அவருடைய பாடுகளோடு ஒன்றிப்போமேயாகில் நாமும் உலக ஈடேற்றத்தில் பெரும் பங்கு அடைவோம்
பாடுகளின் பூங்காவில் ஆண்டவர் அக்கிரமத்தோடு மல்யுத்தம் புரிந்து வெற்றிமாலை சூடுகிறார். பயத்தை ஊட்டும் இரா நேரத்தில் மகா வாதனைக்கு ஆளாகிறார் . இன்றிரவு ஒரு நேரம் தான் - தம் வாதனையின் குரூரத்தைத் தாங்க முடியாமல் " என் ஆத்துமம் மரணமட்டும் வேதனையாயிருக்கிறது " என்றார்.

இத்துன்ப நேரத்தில் மனிதர்களுடைய தோழமையையும் துணையையும் ஆறுதலையும் தேடுகிறார். அவ்வாறுதலை அச்சமயம் கொடுத்தவர் இலர். சில அறிஞர்களின் எண்ணப் பிரகாரம் அமலனின் கன்னித்தாய் அசன சாலையின் ஓர் அறையில் தனிமையில் செபத்தில் இருக்கிறார். தம் மகனின் துன்ப வாதனையை எல்லாம் காட்சியில் கண்டு பயம் , கலக்கம் , துன்பம் என்னும் வாதனைகளைஎல்லாம் இயேசுவோடு அவரும் அனுபவிக்கிறார் . எத்தனையோ புண்ணியவான் புண்ணியவதிகளுக்கு காட்சியில் தம் பாடுகளைக் காட்டிய ஆண்டவர் அக்கிருபையைத் தன் அன்னைக்கு அளிக்காமல் இருப்பாரா ? அப்போஸ்தலர்கள் தூங்கி விட்டனர்.

உலக முடியுமட்டும் ஞான சரீரத்தில் இயேசுநாதர் ஆயாசப்படுவார் .அக்காலமெல்லாம் நாம் தூங்கலாகாது.

*செபம்:*

ஜெத்சமெனியில் உமக்கிருந்த ஆயாசத்தையும் ,அச்சத்தையும் கொண்டு இக்கட்டில் உள்ளோரையும் , பயந்தோரையும் திவ்விய இயேசுவே , தேற்றியருளும் . அப்போஸ்தலர்கள் தூங்கி விழ , உம் பாடுகளைக் கண்டு நீர் தனிமையில் ஏங்கியதை நினைத்து உலகமானது நித்திரையில் ஆழ்ந்திருக்கத் தனித்து தின்மையை எதிர்த்து நிற்பவர்களைத் தேற்றியருளும் . வரப்போகும் தீமையையும் ,சங்கடத்தையும் எதிர்நோக்கி அவதிப்பட்டு நீர் செபத்தில் நிலைத்திருந்ததை நினைவு கூர்ந்து , எதிர்பாராமல் வரப்போகும் தின்மையை எண்ணி நடுங்குகிறவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும் . வானதூதரின் தாழ்ச்சியை ஏற்றுக் கொண்ட உம் தாழ்ச்சியை கண்டு பிறருக்கு உதவி செய்யவும் , பிறர் உதவியைப் பெறவும் , மற்ற ஒவ்வொருவரிலும் உம்மைக் கண்டு உமக்கு ஆறுதலளிக்கவும் வேண்டிய அருளை எங்களுக்குத் தந்தருளும் . திவ்விய இயேசுவே , செபமாலை இராக்கினியே , இவ்வுலகம் துன்பம், கஷ்டம், தோல்வி ,ஏமாற்றம் , வாதனை நிறைந்தது . இவைகள் மோட்ச மாணிக்கங்கள் . நாங்கள் இவைகளை இழந்து போகாமல் பயனடையும்படி இயேசுவின் பாடுகளிலிருந்து தைரியம் பெற்று , அவைகளைப் பொறுமையாகவாவது இயேசுவின் பாடுகளோடு சேர்ந்து அனுபவிக்க கிருபை செய்யும் .செபமாலை இராக்கினியே துன்பப்படுவோருக்கு நீரே ஆறுதல். ஆமென்.

*சரிதை:*

1482 ஆம் ஆண்டில் ஜெர்மனி தேசத்தில் கோலோஞ் என்ற நகரில் முத் ஜேம்ஸ் ஸ்பெரெங்கன் செபமாலையை பற்றி மகா சாதுரியமாகப் போதித்தார். செபமாலை மாதா சபை ஒன்றை நிறுவ எத்தனம் செய்தார். இதுவரையில் பெரிய பிரசங்கிகள் என்ற பேர் வாங்கிய இரு குருக்களுக்குப் பொறாமைத் தீ பிடித்தது . தேவதாசன் மேல் உள்ள பொறாமையினால் செபமாலை செய்வதற்கு விரோதமாய்ப் பேசத்தொடங்கினர். தங்கள் வாய்ச் சாலகத்தால் செபமாலை மாதா சபையில் பலர் சேராவண்ணம் தடுத்தனர்
இருவரில் ஒருவர் செபமாலைக்கு விரோதமாய் ஒரு தனிப்பட்ட பிரசங்கம் தயாரித்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை செய்வதற்குத் தயாராக இருந்தார் . ஞாயிறு வந்தது . பிரசங்கம் செய்ய ஆளைக் காணோம் . சபையோர் வெகுநேரம் காத்திருந்து பின்னர் , பிரசங்கியாரை அழைத்து வர ஆள் அனுப்பினர் . பிரசங்கியார் செத்துக் கிடந்தார். கடைசி நேரத்தில் யார் உதவியும் இன்ற மரித்திருக்க வேண்டும்.

மற்றொரு குருவுக்கு உள்ளத்தில் திகில் . ஆகிலும் வைத்தியர்கள் பிரேதத்தைப் பரிசோதித்து அது இயற்கையான சாவு என்றதும் துணிவு ஏற்பட்டது . தன் ஸ்நேகிதனுக்குப் பதிலாக தான் பிரசங்கம் செய்வதாகவும் செபமாலை மாதா சபை முனையாமல் தடுக்கப் போவதாகவும் திட்டமிட்டிருந்தார் . பிரசங்கம் செய்யும் நாள் வந்தது . நாழிகையாயிற்று . அந்நேரம் பிரசங்கியாருக்கு பச்சைவாதம் , கை கால் விளங்கவில்லை . நாவிலும் அசைவில்லை. இவர் தன் குற்றத்தை ஏற்று கொண்டு தனக்கு உதவி செய்ய தேவதாயை நோக்கி வேண்டிக் கொண்டார் . மரியன்னை தனக்குச் சுகத்தை கொடுப்பாரேயாகில் செபமாலை பக்தியைப் பரப்ப அதிகம் உழைப்பதாக தாய்க்கு நேர்ந்து கொண்டார் . தாய் இவருக்கு சுகத்தை அளித்தார் . அதிசயமாகத் திடீரென வேத விரோதியான சவுல் மனந்திரும்பி எவ்வளவு ஊக்கமாய் சத்திய வேதத்தை போதித்தாரோ அதே போல் இவரும் அதிக வாய் சாலகத்தோடு செபமாலை பக்தியை பரப்பினார் .

செபமாலை கிழவிகளுக்குத் தான் என்று வேடிக்கையாய்ப் பேசுகிறவர்கள் அங்கும் இங்கும் சிலர் இருக்கலாம் அவர்கள் எச்சரிக்கையாய் இருப்பார்களாக .

*செபமாலை செபிப்போம்...🤝🙏🏻*

Christianiraipadalgal.blogspot.com
13/10/2025

Christianiraipadalgal.blogspot.com

07/10/2025
பைபிள் மாந்தர்கள் *"தோமா"*இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் தான் தோமா.இயேசுவின் ந‌ண்ப‌ர் லாச‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்து விட்டார்....
06/10/2025

பைபிள் மாந்தர்கள்

*"தோமா"*

இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் தான் தோமா.

இயேசுவின் ந‌ண்ப‌ர் லாச‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்து விட்டார். இயேசுவும் சீடர்களும் வேறோரு இடத்தில் இருந்தார்கள். அங்கிருந்து பெத்தானியாவுக்குச் செல்ல‌ வேண்டும். பெத்தானியா யூதேயாவில் இருந்த‌து. அங்கே இரண்டு முறை இயேசுவைக் க‌ல்லால் எறிந்து கொல்ல‌ முய‌ன்றார்க‌ள். எனவே சீடர்கள் அங்கே செல்ல‌ அஞ்சினார்கள்.

தோமா மட்டும் அஞ்சவில்லை.” நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என இயேசுவோடு பெத்தானியா செல்ல ஆயத்தமானார். இதனால் இயேசு லாசரை உயிர்ப்பித்த மாபெரும் நிகழ்வை சீடர்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

தோமாவுக்கு சந்தேகத் தோமா என்றொரு பெயர் உண்டு. அத‌ற்கான‌ கார‌ண‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.

இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த பிறகு சீடர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது தோமா அங்கே இல்லை. சீடர்கள் பரவசமாய் அந்த நிகழ்ச்சியை தோமாவிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை. “நான் நம்ப மாட்டேன். அவரோட கையில ஆணி அடித்த துளை இருந்துதா ? அதுல நான் விரலை போட்டுப் பாக்கணும். அவரை ஈட்டியால குத்தின விலாவில என் கையைப் போட்டுப் பாக்கணும். அப்போ தான் நம்புவேன்” என்றார்

இயேசு லாசரை எழுப்பினார். இப்போது இயேசுவே இறந்திருக்கிறார். யார் அவரை எழுப்பமுடியும் என்பதே அவருடைய சந்தேகம்.

இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமாவும் உடனிருந்தார். இயேசு தோமாவிடம் கைகளை நீட்டினார்,

“இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து ந‌ம்பிக்கைகொள்” என்றார்.

உடனே தோமா “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று த‌ன‌து ந‌ம்பிக்கையை வெளிப்ப‌டுத்தினார்.

இயேசு அவ‌ரிட‌ம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். ந‌ம்பிக்கை இழ‌ப்போருக்கு மிக‌வும் ஊக்க‌மூட்ட‌க்கூடிய‌ ஒரு இறைவார்த்தை இது. இந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ருக்கு “ச‌ந்தேக‌ தோமா” எனும் பெய‌ரைத் த‌ந்த‌து.

அவநம்பிக்கைக் காரரான‌ தோமா, நம்பிக்கையில் நிறைவானவராக அந்தக் கணம் முதல் மாறினார். அந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ரைப் ப‌ணிவாழ்வில் தீவிர‌மாய் ஈடுப‌ட‌ உந்துத‌ல் அளித்த‌து. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டார் என்பது வரலாறாகப் பதிவு செய்யப்படலாம். ஆனால் ‘எனக்காக’ அவர் உயிர்விட்டார் என நம்புவதே ஒரு மனிதனை மீட்புக்குள் வழிநடத்தும். அந்த அனுபவத்தைத் தான் தோமா அந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கு வ‌ந்து இறைப‌ணியாற்றிய‌வ‌ர் எனும் பெருமை தோமாவுக்கு உண்டு. இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியான கெரங்கனூர் எனும் இடத்தில் கிபி 52ல் வ‌ந்தார். அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவின் ந‌ற்செய்தியை அறிவிப்ப‌தே அவ‌ருடைய‌ நோக்க‌மாக‌ இருந்த‌து.

தென் கேர‌ளாவின் மேற்குக் க‌ரையோர‌ம் ஏழு திருச்ச‌பைக‌ளை தோமா நிறுவி வ‌ழி ந‌ட‌த்தி வ‌ந்தார். மார்த்தோமா எனும் பெய‌ர் இன்றும் கேர‌ளாவில் மிக‌ப் பிர‌சித்த‌ம். மலியங்கர, பாலயூர், பாரூர், கோகமங்ஙலம், நிராணம், சாயல், கொல்லம் ஆகியவையே அந்த ஏழு திருச்சபை நிறுவப்பட்ட இடங்கள். அந்த ஏழு திருச்சபைகளில் நான்கு திருச்சபைகள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நிலைபெற்றிருக்கின்றன.

மார்கோ போலோ, நிக்கோலோ டி கான்டி உட்பட பல்வேறு பயணிகளின் குறிப்புகளில் தோமாவின் கிறிஸ்தவப் பணி குறிப்பிடப்பட்டுள்ளது. பிர‌ஞ்ச் நாட்டின் கிரிகோரி கி.பி 590ல் இந்தியாவில் தோமாவின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் ப‌ற்றி எழுதியிருக்கிறார்.

இவை த‌விர‌ வ‌ர‌லாற்று அறிஞ‌ர்க‌ள் அம்புரோஸ், ந‌ச‌னிய‌ன்சுஸ் கிரிகோரி, சிரியாவின் இப்ரிம், ஜெரோம் உட்பட‌ ப‌ல‌ர் தோமாவின் இந்திய‌ ந‌ற்செய்தி அறிவித்த‌லைப் ப‌ற்றி எழுதியிருக்கின்ற‌ன‌ர்.

பின்னர்.தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள‌ சின்ன‌ம‌லை எனும் ம‌லையில் குகை ஒன்றில் தங்கி ந‌ற்செய்திப் ப‌ணியாற்றி வ‌ந்தார் தோமா. கி,பி 72ம் ஆண்டு அவ‌ர் அங்கே ஈட்டியால் குத்த‌ப்ப‌ட்டு இர‌த்த‌சாட்சியாய் ம‌ர‌ண‌ம‌டைந்தார். அவ‌ருடைய‌ உட‌லின் மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் தான் சென்னை சாந்தோமில் கம்பீரமாக‌ இருக்கிற‌து.

வாடிக‌ன் ந‌க‌ரில் பேதுருவின் க‌ல்ல‌றை மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌த்தில் போப் ப‌ணியாற்றுகிறார். அதற்கு இணையான முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தே சாந்தோம் தேவால‌ய‌ம். கார‌ண‌ம் இர‌ண்டுமே இயேசுவோடு ப‌ய‌ணித்த‌ இர‌ண்டு சீட‌ர்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளின் மேல் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து.

தோமாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு ப‌ல‌ ப‌டிப்பினைக‌ளைக் க‌ற்றுத் த‌ருகிற‌து. ச‌ந்தேக‌ம் கொள்வ‌து த‌வ‌ற‌ல்ல‌, ஆனால் அந்த‌ ச‌ந்தேக‌த்தை இயேசுவின் வார்த்தைக‌ளால் தெளிவு பெற்று தொட‌ர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டும். பின்வாங்காமல் இயேசுவைப் பின்செல்லும் பற்றுறுதி கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இயேசுவின் வார்த்தைக‌ளாக‌ ந‌ம்மிட‌ம் பைபிள் இருக்கிற‌து. பைபிளில் இயேசு சொல்லும் வார்த்தைக‌ளில் ந‌ம்பிக்கை கொண்டு வாழ்க்கையைத் தூய்மையாக்க‌ தோமாவின் வாழ்க்கை அழைப்பு விடுக்கிற‌து.

*திருப்பாடல்கள் 118 : 24*✝️🌹 *ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.*🌹✝️🌹 *வாழ்வு ...
02/10/2025

*திருப்பாடல்கள் 118 : 24*

✝️🌹 *ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.*🌹✝️

🌹 *வாழ்வு வழங்கும் கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வாதமான காலை வணக்கம்* ✝️🙏✝️

🌹 *இன்றைய நாள் வெற்றியின் நாளாக வாழ்வு வழங்கும் கிறிஸ்து அருள் புரிவாராக.*✝️💒🧎‍♂️

🌹 *வளமுற வாழ்க..✝️💒🧎‍♂️..ஆமென்* ✝️🙏✝️

Address

Marthandam
629171

Alerts

Be the first to know and let us send you an email when Christian Irai Padalgal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Christian Irai Padalgal.:

Share