22/07/2026
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பரிந்துரை: சபரிவர்மன் காவல் மரண வழக்கு CB-CIDக்கு மாற்றம் - DGP உத்தரவு
* நாகர்கோவில் மாவட்ட சிறையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், 35, காவலில் உயிரிழந்த வழக்கின் விசாரணையை தமிழ்நாடு DGP மகேஷ் குமார் அகர்வால் CB-CID-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
- ஜூலை 9: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை வழக்கில் சபரிவர்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஜூலை 13: சிறையில் சபரிவர்மன் உயிரிழந்தார். அவர் கடைக்காரராகவும், மாற்றுத்திறனாளியாகவும் இருந்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை:
* உடலில் 19 வெளிக்காயங்கள் இருந்ததாகவும், மூர்க்கமான தாக்குதல் மற்றும் வலது கை எலும்பு முறிவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தாக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் - 11 பேர்:
1. சிறை அதிகாரிகள் - 3 பேர்: தலைமை தலைமை காவலர் என். சுரேஷ், காவலர்கள் என். ஜெகன், ஜே. சிபகுமார்
2. கைதிகள் - 8 பேர்: விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரிய பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த்
* கைது செய்யப்பட்ட 8 கைதிகளும் நாகர்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போராட்டம் மற்றும் இழப்பீடு:
* இந்த மரணத்தை தொடர்ந்து சபரிவர்மனின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை மற்றும் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை அறிவித்ததை தொடர்ந்து உடலை ஏற்றுக்கொண்டனர்.
அடுத்த கட்டம் :
* CB-CID தற்போது இந்த காவல் மரணம் நடந்த சூழ்நிலை, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பங்கு, சிறை நிர்வாக குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணையை நடத்தும்.
பரிந்துரை :
* கன்னியாகுமரி மாவட்ட எஸ் பி ஸ்டாலின் அவர்கள் பரிந்துரையில், சபரிவர்மன் வழக்கு CBCID க்கு மாற்றம் செய்து காவல்துறை இயக்குனர் அவர்கள் உத்தரவு