21/01/2024
கட்டப்பஞ்சாயத்து பண்ணுவோம் வங்க! தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் நடத்தும் அழகான நியாயமான சூப்பரான போராட்டம் !
அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளருக்கு வருவாய்துறைக்கும் என்ன பிரச்சனை?
பரபரப்பான முழு விவரம் இதோ!
ஒஹோ இதான் பிரச்சனையா ?
தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக இன்று மாலை நான்கு மணிக்கு மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. ஜஸ்டின் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அப்படி என்ன தான் பிரச்சனை என்று களத்தில் இறங்கி அலசி பார்க்க முடிவு செய்தோம், அப்படி அலசி பார்த்தபோது கிடைக்கப்பெற்ற செய்தி சற்று அதிர்ச்சிகரமாகவும் இருந்தது.
குமாரி மாவட்டத்தில் ESI மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் ESI மருத்துவமனை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முயற்ச்சிகளையும் எடுத்தார். இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தகுந்த இடத்தை கண்டுபிடிக்குமாறு தன்னுடைய நேர்முக உதவியாளர் ஜஸ்டின் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திரு. ஜஸ்டின் அவர்களும் அரசு அதிகாரிகளுடன் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இடம் கண்டுபிடிக்க களத்தில் இறங்கியுள்ளார். முதலில் கிள்ளியூர் தாலுகாவில் ஒரு இடம் கண்டறியப்பட்டது, பின்னர் அந்த இடம் மலை மற்றும் மேடும் பள்ளவுமாக இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் இடம் தேடும் பணி ஆரம்பமானது, இதற்காக அப்போதைய சார் ஆட்சியர் திரு கௌஷிக் அவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அதனை மாண்பு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களை அழைத்து நேரில் காண்பிக்கலாம் என்று ஜஸ்டின் அவர்களிடம் தெரிவிக்க, இதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர் சென்னையில் இருந்து துறை ரீதியான பணிகளை முடித்து விட்டு குமரி மாவட்டம் வந்த போது 23/0ct/2023 அன்று அழைத்து சென்று இடத்தை காண்பித்தனர். இந்த இடம் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட மணக்காவிளை என்னும் இடம் என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்து REGIONAL DIRECTOR ESI அவர்களுக்கு கடிதம் அனுப்ப மாவட்ட ஆட்சியரை கேட்டு கொண்டார், மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அலுவலர்களை கடிதம் எழுத ஆணையிட்டார். ஆய்வு செய்து ஆணையிட்ட பின்னர் ஒரு மாதம் கடந்தது இது குறித்து அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் திரு ஜஸ்டின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்களை அழைத்து கடிதம் எழுத அமைச்சர் கூறியிருந்தாரே, என்ன ஆனது என்று கேட்டபோது எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, இறுதியாக அந்த கடிதத்தை கையாண்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் M Section அதிகாரி திரு மகேஷ் மாரியப்பன் என்று தெரிய வர , திரு ஜஸ்டின் அவர்கள் மாரியப்பனை தொடர்பு கொண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மருத்துவமனை கடித்த விவகாரம் என்ன ஆனது என்று கேட்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்துள்ளார், உதவியாளர் ஜஸ்டின் குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ESI மருத்துவமனை வருவது தொடர்பாக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுக்கிறார்கள் அவர்களின் உத்தரவை உதாசீனப்படுத்தி தனக்கு தெரியாது என்று கூறுவது அரசு அதிகாரிக்கு ஒரு அழகா என்று வினவியுள்ளார், இதனை கேட்ட அந்த அதிகாரி என்னை கேள்வி கேட்க நீ யார் என்று முறைப்பான பதிலை கூறி இணைப்பை துண்டித்துள்ளார், இதனை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்தில் கொண்டு செல்லவே கடிதம் என்ன ஆனது என்று மீண்டும் கேட்க, கடிதம் அனுப்பிவிட்டேன் என்று மாரியப்பன் கூற, அந்த கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி ஜஸ்டின் ராஜ் கேட்க கடிதத்தை அனுப்பாமல் இழுத்தடித்துள்ளார் மாரியப்பன், மீண்டும் மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி கேட்டு கொண்டதன் விளைவாக கடிதத்தின் நகலை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார் மாரியப்பன், கடிதத்தை திறந்து படித்து பார்த்த ஜஸ்டின் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மணக்காவிளை பகுதியை மாரியப்பன் நிராகரித்து விட்டு தனக்கு தோன்றிய இடமான அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள ஏற்கனவே ஒரு நிராகரிக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து எழுதி கடிதம் அனுப்பியது தெரியவந்துள்ளது, இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல் , மக்கள் பணியை ஏன் நீங்கள் ஒழுங்காக செய்யாமல் உங்களுக்கு தோன்றியவற்றை செய்கிறீர்கள் ? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய இடத்தை தேர்வு செய்யாமல் மாரியப்பன் தனக்கு தோன்றிய இடத்தை தேர்வு செய்தது ஏன் ? மாவட்ட ஆட்சியர் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றி கடிதத்தில் கையெழுத்து போட வைத்து அனுப்ப யார் அதிகாரம் கொடுத்தது ? மாரியப்பன் மாவட்ட ஆட்சியரா? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றும் அளவிற்கு வல்லமை படைத்தவரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். மிகவும் அலட்சியமாக பேசிய மாரியப்பன் என்னை ஒன்றும் செய்ய முடியாது சங்கத்தை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் ஜஸ்டின் அவர்களை தர குறைவாக பேசி மிரட்டியுள்ளார். ஜஸ்டின் என்பவர் பற்றி கூற வேண்டுமானால்! இயற்கை சமூகம் மீதான அக்கரை கொண்டவர். மரம் நடுதல், குளங்கள் சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருபவர், ஒரு துளி லஞ்சம் வாங்காதவர் இது அங்கு அமைச்சர் அலுவலகம் வரும் அனைவருக்கும் தெரியும். நிறைய மக்கள் கொண்டு வரும் நியாயமான பிரச்சனைகளுக்கு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு நியாயத்தை கேட்டு கண்டித்து ஏழைகளுக்கு நியாயத்தை செய்து கொடுத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான எந்த விஷயங்களிலும் தலை இட மாட்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே ! ஒரு அதிகாரி தனக்கென்று கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யாமல் அமைச்சர் அலுவலகத்தையே மிரட்டி சங்கத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பார் என்பதை பொதுமக்கள் சிந்தித்து பாருங்கள். இது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையோ, கட்ட பஞ்சாயத்து பிரச்சனையோ இல்லை வேறு ஏதோ ஒரு பிரச்சனையோ கிடையாது. முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த ஒரு பிரச்சனை, குமரி மக்கள் நீண்ட காலமாக கேட்டு கொண்டிருக்கும் ஒரு மகத்தான திட்டம், இதனை ஒரு அதிகாரி முழு மனதோடு மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறியபடி கேட்டு செய்யாமல் தான் தோன்றி தனமாக செய்ததன் விளைவாக ESI மருத்துவமனை திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டு திட்டம் தள்ளி போகியுள்ளது. இதனை தட்டி கேட்ட அமைச்சரின் உதவியாளருக்கு சங்கத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நேரடியாக மிரட்டல் அளித்துள்ளார் மாரியப்பன். ஒரு VAO அலுவலகத்தில் மக்கள் சென்றால் தெரியும், எவ்வளவு நேரம் வயதானவர்களை காக்க வைக்கிறார்கள் என்று, 100 ரூபாய்க்காக திருப்பி வீட்டிற்கு அனுப்புவது அவர்களை அலைய வைப்பது போன்ற பல வேலைகளில் ஈடுபடுவது தொடர்ந்து தொடர் கதையாகி வருகிறது, ஜாதி , பிறப்பு , இறப்பு , போன்ற சான்றிதழ்கள் கூட தராமல் அலைக்கழித்து அது அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பார்வைக்கு வந்து அதனை சரி செய்து கொடுக்கும் படலம் தினம் தினம் நடைபெறுகிறது. ஒரு சான்றிதழ் வழங்க அமைச்சர் அலுவலகம் நேரடியாக தலையிட வேண்டிய நிலை இருக்கிறது என்றால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யும் அதிகாரிகள் என்ன லட்சணத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அமைச்சர் அலுவலகத்தையே சங்கத்தை வைத்து மிரட்டி பார்க்கும் துணிச்சல் உடைய மாரியப்பன் போன்ற அரசு அதிகாரிகள் பொதுமக்களை என்ன பாடு படுத்துவார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ? வருவாய் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து பல அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது மாரியப்பன் போன்றவர்களுக்கு நினைவில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மாரியப்பன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுகள் சமூதாயத்தில் பேச வைப்பதற்கு நேரம் ஆகாது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகம் தொடர்ந்து அநியாயங்களை தட்டி கேட்கும், சட்டத்திற்கு உட்பட்டு ஊழல் அதிகாரிகளிடம் சண்டையிட்டு பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்கும், தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு செல்லலாம், “Illegal” பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை என்று அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எத்தன்னை போராட்டம் செய்தாலும், எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும் சரி, பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.