13/11/2025
கன்னியாகுமரியில் செய்தி வெளியான சில மணி நேரத்தில் நகராட்சி அதிரடி — நரிக்குறவர் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது; பொதுமக்கள் பாராட்டு*
கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மண்டபம் முன்பு நரிக்குறவர் சமூகத்தினரின் ஆக்ரமிப்பு காரணமாக நீண்ட நாட்களாக நிலவி வந்த சுகாதார சீர்கேடு குறித்து வலைதள செய்திகள் வெளியான சில மணி நேரங்களிலேயே நகராட்சி பலத்த நடவடிக்கையில் இறங்கியது. மண்டபம் முன்பாக நடைபாதைகளில் அமைக்கப்பட்ட டாட்டூ கடைகள், கைக்கடிகாரம், சங்கிலி விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து தற்காலிக ஆக்ரமிப்புகளும் நகராட்சி அதிகாரிகளால் உடனடியாக அகற்றப்பட்டன.
உணவு பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்பட்டிருந்த சாலைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. குடி போதையில் தகராறு, சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் கோருதல் போன்ற புகார்களும் அதிகாரிகளின் கவனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா தளத்தின் ஒழுங்கை மீட்டெடுத்த நகராட்சியின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. “நகராட்சி உடனடியாகச் செயல்பட்டது வரவேற்கத்தக்கது; கன்னியாகுமரியின் மரியாதை காக்கப்பட்டுள்ளது,” என மக்கள் தெரிவித்துள்ளனர்.