28/08/2026
தலைவலி எங்கு வருகிறது என்பதை வைத்தே காரணத்தை கண்டுபிடிக்கலாம் தெரியுமா?
எல்லா தலைவலியும் ஒன்றல்ல. வலி வரும் இடத்தை வைத்து உடல் நமக்கு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது.
1. நெற்றி மற்றும் முன் தலை வலி:
• காரணம்: கண் அழுத்தம் (Eye Strain), தூக்கமின்மை, நீண்ட நேரம் போன் / கம்ப்யூட்டர் பார்ப்பது.
• சைனஸ் பிரச்சனை இருந்தாலும் முன் தலை கனமாக வலிக்கும்.
2. தலைக்கு பின்புறம் மற்றும் கழுத்து பகுதி வலி:
• காரணம்: இது 90% STRESS தலைவலி. அதிக மன அழுத்தம், தவறான தூங்கும் முறை, நீண்ட நேரம் குனிந்து வேலை செய்வது, கழுத்து எலும்பு இறுக்கம்.
3. தலை முழுவதும் இறுக்கமாக, கனமாக வலிப்பது:
• காரணம்: Dehydration - நீர்ச்சத்து குறைபாடு. தண்ணீர் குறைவாக குடிப்பது, அதிக டீ / காபி, வெயிலில் அலைவது. மூளைக்கு போதுமான தண்ணீர் இல்லாத போது இப்படி வலிக்கும்.
4. ஒரு பக்கம் மட்டும் துடிப்பது போல் வலி:
• காரணம்: Migraine - ஒற்றை தலைவலி. வெளிச்சம், சத்தம் பிடிக்காது, குமட்டல் வரும். தூக்கம் கெடுவது, பட்டினி கிடப்பது இதை தூண்டும்.
உடனடியாக என்ன செய்யலாம்?
• தினமும் 2.5 - 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். • ஒரே இடத்தில் 30 நிமிடத்திற்கு மேல் குனிந்து இருக்காதீர்கள். • தூக்கத்தை சரி செய்யுங்கள் - 6-7 மணி நேரம் அவசியம். •
தலைவலி மாத்திரையை மட்டும் தேடாமல், காரணத்தை சரி செய்யுங்கள்.
அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதியில் தலைவலிக்கான வேர்க் காரணத்தை சரி செய்து நிரந்தர தீர்வு காண முடியும்.
உங்களுக்கு அடிக்கடி எங்கு தலை வலிக்கிறது? கமெண்டில் சொல்லுங்கள்.