20/03/2025
எந்தவொரு நீதிமன்ற உத்தரவு அல்லது தீர்ப்புகளையும் நமது ஊடகங்கள் ஒரு வரி செய்தியில் மக்களுக்கு எளிதாக புரிய வைத்துவிட முடியாது. நாம் அந்த ஒரு வரி செய்தியை வாசித்து உடனே உணர்ச்சி வசப்பட்டு நமது கருத்துக்களை பகிர்வதும் முறையல்ல. நமது ஊடகங்களும் செய்தி வாசிப்பவர்களை உணர்ச்சி வசப்பட வைக்க வேண்டும் என ஒரு யுக்தியாக தான் செய்கிறது. அப்போது தானே வாசகர்களை ஈர்க்க முடியும். செய்திகளை சுருக்கமாகவும் சர்ச்சையாகும் விதத்திலும் தலைப்புகள் கொடுத்து நம்மை ஈர்க்கிறது.
உண்மையில் நடந்த சம்பவம் என்ன ? ஏற்கனவே அறிமுகமும், முன்பகையும், வேறொரு வழக்கும் கொண்ட இருவேறு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு இது. சம்பவம் நடந்தது 2021. மஹாதேவன் என்பவரது மனைவி ஆஷாதேவி, குழந்தைகளுக்கான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை 2022 ஜனவரி 12 அன்று தாக்கல் செய்தார்.
2021 நவம்பர் 10 அன்று, மாலை 5 மணியளவில், தாயும் மகளும் சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த பவன், ஆகாஷ் இருவரும். சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக இருப்பதால சிறுமியை மட்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூற, ஆஷாதேவி ஒப்புக் கொள்கிறார். ஆனால், பவன் மற்றும் ஆகாஷ், ஒரு பாலம் அருகே வாகனத்தை நிறுத்தி, சிறுமியின் மார்பகங்களை தொட்டதாகவும், ஆகாஷ் சிறுமியை கீழே இழுக்க முயன்று சிறுமியின் ஆடை கயிற்றை அவிழ்க்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சத்தம் கேட்டு வந்தனர். டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த சதீஷ் மற்றும் புரே என்ற இருநபர்கள் வந்து தலையிட, குற்றவாளிகள் நாட்டுப்பட்டாக்கியுடன் மிரட்டி தப்பித்து சென்றதகா தெரிகிறது. பின்னர் ஆஷாதேவி பவனின் தந்தை அஷோக்கை அவரது வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டபோது, அவர் ஆஷாதேவி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. போலீசில் தரப்பில் புகார் பதிவு செய்ய மறுத்ததால், ரெண்டும் மாதம் கழித்து ஆஷாதேவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என தெரிகிறது. இதில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவர் பவன் மற்றும் ஆகாஷ். மேலும் ஆஷாதேவி பவனின் தந்தை அஷோக்கிடம் முறையிட்ட போது அவரும் மிரட்டியதால் அவரது பெயரும் சேர்த்தே புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவானது.
இந்த மனுவை பெற்ற போக்சோ சிறப்பு நீதிமன்றம் , ஆஷாதேவி மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர் சதீஷின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. 2023 ஜூன் 23 அன்று, ஆகாஷ் மற்றும் பவன் மீது சம்மன் அனுப்பியது, அதில் பவன் மற்றும் ஆகாஷ் மீது பாலியல் வழக்கும், அஷோக் மீது அவமரியாதை செய்ததாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கடிந்து பேசியதாகவும், மிரட்டியதாகவும் வழக்கு பதிவானது. இதை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த பிறகு இந்த வழக்கில் நீதிபதி சொல்வது என்ன ? சம்மன் திருத்தி எழுதும் போது கற்பழிப்பு முயற்சி என குறிப்பட வேண்டாம். ஏற்கனவே அறிமுகமும் முன்பகையும் கொண்ட இரு வேறு குடும்ப தகராறு இது. பவன் ஆகாஷ் இருவரும் அந்த குழந்தையிடம் அத்து மீறியது உண்மை. அந்த 11 வயது குழந்தையின் மார்பகங்களை தொட்டதும் கட்டாயப்படுத்தி தூக்கி சென்ற போத ஆடை கிழியும் அளவுக்கு பிடித்து இழுத்ததும் தான் இதில் நடந்த பாலியல் குற்றாமாகும். இதை பாலியல் குற்றங்களில் கற்பழிப்பு முயற்சி (attempt to r**e) என பதிவு செய்ய கூடாது. பாலியல் குற்றங்களில் "மானபங்கம் செய்யும் முயற்சி" (Outraging modesty) என சம்மன் திருத்தி எழுதப்பட வேண்டும் மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதமன்ற நீதிபதி ராம் மனோஹர் நாராயண மிஸ்ரா அறிவுறுத்தி ஆணை பிறப்பித்து இருக்கிறார்.
இதை மேலோட்டமாக நாம் ஒரு வரி செய்தியாக வாசித்து பார்த்தால், குழந்தையின் மார்பகங்களை தொட்டதும், ஆடையை கிழித்ததும் கற்பழிக்க நடந்த முயற்சியல்ல என குழந்தையை பாலியல் ரீதியாக தொட்ட அயோக்கியர்களுக்கு சாதகமாக நீதிபதி தவறாக தீர்ப்பளித்து இருக்கிறார் என தவறாக புரிந்து கொள்ளும் அளவுக்கு தான் இந்த ஒரு வரி செய்தி இருக்கிறது. அதனால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.