29/08/2026
"கயத்தாறு இளவேலங்கால் போரில் விஜயநகர வடுகர் படை தலைவனான வெண்கல ராஜனை வீழ்த்தி-கொலை செய்த குண்டையன்கோட்டை மறவர்கள்"
போர்த்துகீசிய மிஷனரி பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இதை உறுதி செய்ய முடிகிறது. அதில் "Pate 378" என்பது HR Pate ICS என்பவர் எழுதிய Madras District Gazetteers Tinnevelly Volume 1 என்ற புத்தகத்தின் 378 வது பக்கத்தை மேற்கோள் காட்டுகிறது. அதில் கயத்தாறு இளவேலங்கால் போரின் முடிவு மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் எதிர்பாராத வகையில் வெட்டும் பெருமாள் ராஜா தரப்பினர் வடுகர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போகிறது. ஆனால் சுதாரித்துக் கொண்ட குண்டையன்கோட்டை மறவர்கள் எல்லோரும் சமயோசிதமாக வியூகம் அமைத்து வடுகர் படையின் குதிரைகளின் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டதால். குதிரைமேல் இருக்கும் வடுகப்படை வீரன் தன் ஈட்டியை செலுத்தத் தயாராகும் போது மறவர்கள் தாக்குதலை லாவகமாக தவிர்த்து கொண்டனர்.
மேலும் குதிரைகளை மட்டுமல்லாது வெண்கல ராஜனின் வடுகப்படை வீரர்களையும் குத்திக்கொன்றனர் குண்டையன்கோட்டை மறவர்கள். அதன் காரணமாகவே இந்த போரில் உயிரிழந்த குண்டையன்கோட்டை மறவர்களை "குதிரைக்குத்திபட்டான்" என இந்த நடுகல் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது.
இந்த போரில் விஜயநகர வடுக தளபதி வெண்கல ராஜனை பாண்டியர் தரப்பில் போர் செய்த குண்டையன்கோட்டை மறவர்கள் கொலை செய்ததாக பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம்பெற்ற குறிப்புகள் உறுதி செய்கிறது.
அடுத்ததாக ARE [1939-1943] nn. 300-309, and p. 253 என்பது Annual Report on Indian Epigraphy 1939-1943 கல்வெட்டு தொகுப்பு 300-309 வரை பக்கம் 253 எனும் தொல்லியல் துறை வெளியிட்ட கயத்தாறு இளவேலங்கால் போர் மற்றும் நடுகல் கல்வெட்டு சான்றுகளை குறிக்கிறது.
அதில் பாண்டியர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த விஜயநகர வடுகப்படை தளபதி வெங்கலராஜனின் படைக்கு எதிராக, திருநெல்வேலிப் பெருமாள் எனப்படும் வெட்டும்பெருமாளின் தரப்பில் போரிட்ட குண்டையங்கோட்டை மறவர்களில் சிலர் எதிரியின் குதிரைகளை குத்தி வீரர்களை வீழ்த்தி தானும் உயிரிழந்ததை "குதிரைக்குத்திபட்டான்" என பதிவு செய்கிறது.
மேலும் "Q 5742" என்பது Georg Schurhammer, S.J., எனும் ஜெர்மனிய வரலாற்று அறிஞர் எழுதிய Gesammelte Studien, Vol. XX: Die zeitgenössischen Quellen zur Geschichte Portugiesisch-Asiens und seiner Nachbarländer zur Zeit des Hl. Franz Xaver, Institutum Historicum S.I., Rome, 1962. எனும் வரலாற்று குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறது.
வெட்டும்பெருமாள் என்கிற திருநெல்வேலி பெருமாள் தரப்பில் தரப்பில் குண்டையன்கோட்டை மறவர்களும் விஜயநகர அரசின் தளபதியான வெண்கல ராஜன் தரப்பில் வடுகர் படையினரும் மோதிய கயத்தாறு இளவேலங்கால் போரை ஆண்டு, தேதி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், குதிரைகள், உயிரிழந்த குண்டையங்கோட்டை மறவர்களின் தேவர், பாண்டியன் போன்ற அரசகுல பெயர்கள், பட்டங்கள், குடும்ப பெயர்கள், என அனைத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
மேலும் பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை குறிப்புகளில் வரும் "Pulas" என்பதற்கு பொருள் திருநெல்வேலி சைவ வெள்ளாளர்களான "பிள்ளைமார்" என்பதாகும். அது பள்ளர் சமுதாயத்தை குறிக்கும் சொல் அல்ல. பள்ளர் சமுதாயத்தை இதே பிரான்சிஸ் சேவியர் வரலாற்று குறிப்புகளில் "Pallas" என குறிப்பிடுகிறது.