Munnar Talkies

Munnar Talkies Simplicity is the best attitude

படத்தில் குறிப்பிட்ட இதனை மூணாறு தேயிலைத்தோட்ட பகுதிகளில்  #காட்டு  #கம்பளி என்று சொல்லுவோம். கிட்ட தட்ட, 80 ஆண்களாக எங்...
22/09/2025

படத்தில் குறிப்பிட்ட இதனை மூணாறு தேயிலைத்தோட்ட பகுதிகளில் #காட்டு #கம்பளி என்று சொல்லுவோம். கிட்ட தட்ட, 80 ஆண்களாக எங்களது பாட்டனும், பூட்டனும், பயன்படுத்திய போர்வை..., கடும் குளிருக்கும், கொட்டித்தீர்த்த பேய்மழைக்கும், பயன்படுத்தப்பட்ட இந்த, #காட்டு #கம்பளி முள் போன்று குத்தும் தன்மையுடையது, வருடத்திற்கு ஒருமுறை தேயிலைத்தோட்ட நிர்வாகத்தால் குடும்பத்திற்கு ஒன்று மட்டும், அதுவும்கூட நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே...
உடல் வலிமையும், மனவலிமையும், சகிப்புத்தன்மையும் இருந்திருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்கையை அவர்களால் வாழ்ந்திருக்க முடியும்..

இதனை பற்றி தெரிந்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே....

10/09/2025

மூணாறுக்கு #ஆயிரம் #ஆண்டுகளுக்கு, முன்பே வந்த தமிழ் குடிகள்..

மூணாறு மட்டுமல்ல #கேரளத்தில், வாழும் மலைவாழ் மக்கள் அனைவருமே, #பூர்வீக #தமிழ் #குடிகள்..
ஆனால் தற்போது இந்த மலைமக்கள் #மலையாள #மக்களாக #மாற்றப்பட்டு, மாறிவிட்டனர்...

கேரளத்தில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கேரள அரசு பலதரப்பட்ட சேவைகளும், சலுகைகளையும், மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது..,

#காரணம் ஒன்றே.. மலைவாழ் மக்களிடம் உள்ள #தமிழர் என்ற பூர்வீக #முகத்திறையை #கிழிப்பதற்கு..

கேரளத்தில் நூற்றாண்டுகளாக வாழும் மக்கள், எந்த மொழி பேசினாலும் அனைவருமே கேரள மக்கள் என்ற மனபக்குவத்தை அரசுகள் கருதினால்.. கடவுளின் தேசம் கேரளத்தில் நாங்களும் பெருமை கொள்வோம்...

மூணாறு எஸ்டேட் பகுதிகளில் தாய் மொழி கல்வி தமிழைக்கற்க 60% பெற்றோர்கள் விருப்ப படுவதில்லை.. இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் மூணாறில் தமிழ் கல்விக்கூடங்கள் காலியாகிவிடும்...

(இங்கு மொழி பிரிவினை பற்றி பேசப்படவில்லை.. மொழியும், மொழி பற்றுமே.
யாராக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் தங்களது தாய்மொழியை பெற்ற தாய்க்கு நிகராக போற்றுவது அம்மொழி பேசுபவர்களின் சிறப்பு )

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
09/09/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

05/09/2025

இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் — மூன்றிலும் அடிப்படையில் பொதுவான மனிதநேயம், ஒற்றுமை, அன்பு, சமத்துவம் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. மதம் வேறானாலும், பொதுவான பொன்மொழிகள் ஒரே சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. சில முக்கியமானவை:
1. அன்பு / கருணை
இந்து மதம் – “அஹிம்சா பரமோ தர்மம்” (அன்பு, கருணை, பிறருக்கு தீங்கு செய்யாமை உயர்ந்த தர்மம்).
கிறிஸ்தவம் – “உன் அயலானைப் உன்னைப்போல் நேசி” (மத்தேயு 22:39).
இஸ்லாம் – நபி முஹம்மது (ஸல்) : “நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை உங்கள் சகோதரருக்கும் விரும்பும்வரை, உங்களில் எவருக்கும் உண்மையான ஈமான் இல்லை” (ஹதீஸ்).
பொதுவான கருத்து: அன்பும், கருணையும் எல்லா மதங்களின் அடிப்படை.

2. சமத்துவம் / சகோதரத்துவம்
இந்து மதம் – “வசுதைவ குடும்பகம்” (இந்த உலகமே ஒரு குடும்பம்).
கிறிஸ்தவம் – “அனைவரும் தேவனுடைய பிள்ளைகள்” (கலாத்தியர் 3:28).
இஸ்லாம் – “எல்லா மனிதர்களும் ஒரே ஆதாமும், ஹவ்வாவும் ஆகியோரிடமிருந்து வந்தவர்கள்; உங்களில் யாருக்கும் யாரிடமும் மேன்மை இல்லை, அல்லாஹ்வின் பக்தியில் மட்டுமே மேன்மை உண்டு” (ஹதீஸ்).
பொதுவான கருத்து: எல்லா மனிதரும் சமம்; சகோதரத்துவம்.

3. நேர்மை / நீதிமுறை
இந்து மதம் – “சத்தியமேவ ஜயதே” (உண்மை மட்டுமே வெற்றி பெறும்).
கிறிஸ்தவம் – “உண்மை உங்களை விடுதலை செய்யும்” (யோவான் 8:32).
இஸ்லாம் – “நீங்கள் எங்கு இருந்தாலும், நியாயத்தை நிலைநாட்டுங்கள்; அது உங்கள் பெற்றோருக்கு, உறவினருக்கு எதிராக இருந்தாலும்” (குர்ஆன் 4:135).
பொதுவான கருத்து: உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல்.
4. பிறருக்கு நன்மை செய்வது
இந்து மதம் – “பரோபகாரம் இதம் சரீரம்” (இந்த உடல் பிறருக்கு உதவுவதற்காகவே).
கிறிஸ்தவம் – “நீ விரும்புகிறதை, பிறருக்கும் செய்யும்” (மத்தேயு 7:12).
இஸ்லாம் – “மிகச் சிறந்தவன், பிறருக்கு நன்மை செய்யும் மனிதன்” (ஹதீஸ்).
பொதுவான கருத்து: பிறருக்கு உதவுவது உயர்ந்த நற்குணம்.

05/09/2025

🌸📚
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

நம் வாழ்வில் ஒளி பாய்ச்சும்,
அறிவை விதைக்கும்,
உழைப்பால் மனிதரை உருவாக்கும்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
மனமார்ந்த நன்றியும் வணக்கமும். 🙏✨

இனிய திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌺🌙இந்த சிறப்பு நாளில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு உங்கள் குடும்பத்த...
05/09/2025

இனிய திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌺🌙

இந்த சிறப்பு நாளில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு உங்கள் குடும்பத்தில் தங்கிக் கொள்ளட்டும்! வாழ்க்கையில் சகல வளங்களாலும் நிரம்பட்டதாக இருக்கட்டும். 🎉🙏

மூணார், மற்றும் வால்பாறை தேயிலைத்தோட்ட பகுதிகளில்  #பிரட்டுக்களம் என்ற வார்தையை பயன்படுத்துவோம்.. இது தமிழ் வார்த்தையா, ...
31/08/2025

மூணார், மற்றும் வால்பாறை தேயிலைத்தோட்ட பகுதிகளில் #பிரட்டுக்களம் என்ற வார்தையை பயன்படுத்துவோம்.. இது தமிழ் வார்த்தையா, இல்லை பிறமொழி சொல்லா என்று குறிப்பிடுங்கள் (ஆங்கிலத்தில் MUSTER என்று குறிப்பிடுவார்கள்)

மூணாறு vs மழை
31/08/2025

மூணாறு vs மழை

Address

KANNAN DEVAN HILLS
Munnar
685612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munnar Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munnar Talkies:

Share