முத்துப்பேட்டை பிபிசி

முத்துப்பேட்டை பிபிசி முத்துப்பேட்டை பிபிசி

அன்பார்ந்த முத்துப்பேட்டை வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முத்துப்பேட்டை மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.

இந்த இணைய தளத்தில் நீங்கள் இதுவரை உறுப்பினராகப் பதிவு செய்யவில்லையெனில், உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.

முத்துப்பேட்டை மக்கள் அனைவரின் ஒத்

துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்கியுள்ளோம்.

எனவே, இந்த இணையத் தளத்தில் வெளியிடும் தகவல்களுக்குக் கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.

* தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது
* அனைத்து ஜமாத்தினருக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது
* கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது
* பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது
* நம்பத்தகுந்த உண்மையான செய்திகளைப் பெறும் பொருட்டு, இந்த இணைய தளத்தில் பதிவு செய்துள்ள முத்துப்பேட்டை உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் செய்திகள் மட்டுமே ஏற்றுக் கொள்வது ,
* இந்த இணைய தளத்தில் முத்துப்பேட்டை யின் அனைத்து விவரங்களையும் வெளியிட முயன்று வருகிறோம். எனவே செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப் படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் என அனைத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஏனெனில், நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள், பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.

உங்கள் படைப்புகள்…

* ஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும். தமிழில் தகவல்கள் அனுப்பும் போது, பயன்படுத்துங்கள்
* எந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது.
* பொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக் கூடாது.

நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பிபற்கு மிக்க நன்றி.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து இன்ஷா அல்லாஹ்... இன்று(01-02-2021) காலை 10:30 மண...
01/02/2021

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து இன்ஷா அல்லாஹ்... இன்று(01-02-2021) காலை 10:30 மணி அளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து இயக்கம் அனைத்து ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை அனைத்து இயக்கம், அனைத்து ஜமாத் (கூட்டமைப்பு)

01/10/2020

*முத்துப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக,
*பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களை விடுதலை செய்த நீதிமன்ற உத்தரவை மீளாய்வு செய்யக்கோரி*

*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

இன்ஷா அல்லாஹ்
*நாள்: 03.10.2020*
*நேரம்: மாலை 4:30 மணி*
*இடம்: பேரூராட்சி அருகில்*

*நீதியை வென்றெடுக்க அனைவரையும் அழைக்கின்றது*

அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு (AJAMF), முத்துப்பேட்டை.

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புக்குரிய சகோதரர்களே புதுப்பள்ளி வாசல் கட்டிவரும் சமுதாயக்கூடம் கட்டிமுடிக்க நிறைவு பெறாமல் இருக்க...
26/09/2020

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புக்குரிய சகோதரர்களே புதுப்பள்ளி வாசல்
கட்டிவரும் சமுதாயக்கூடம்
கட்டிமுடிக்க நிறைவு பெறாமல் இருக்கிறது இந்த சமுதாய கூடதினால் என்ன பலன்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
பெண்களுக்காக தராவிஹ்
தொழுகை பெருநாள் தொழுகை நடைபெறும் அடுத்து நம் சமுதாய பிள்ளைகளுக்கு மார்க்கக்கல்வி மிக அவசியம் மார்க்க கல்வி கற்றுக்கொடுக்கப்படும் நம்ம ஊர் பெண்களுக்கு மார்க்க விளக்க உரை நடத்தப்படும் அடுத்து நம்ம சமுதாய நடுத்தர மக்கள் வசதி இல்லாதவர்கள் அவர்களுக்கு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள்
நடத்துவதற்க்கும் மிக குறைந்த கட்டணத்தில் நடத்துவதற்கு நிகழ்ச்சி நடத்த பயன்படுத்துவது மிக முக்கியமாக அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் நம் சமுதாய மாணவர் மாணவிகளுக்கு
மேல்நிலை படிப்புக்கு குறிப்பாக NEET போன்ற மேல் படிப்புகளுக்கு நம் சமுதாய மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து ஆலோசனை வழங்குவது இது நம் சமுதாய மாணவ மாணவிகளுக்கு மிகவும் அவசியமானது இது சமுதாய பிள்ளைகளுக்கு நாம் செய்யும் பெரும் கடமையாகும் ஆகவே இந்த சமுதாய கூடத்தை கட்டி முடிக்க நிதி தேவை படுகிறது ஆகையால் தாங்கள் நம் சமுதாய மக்களுக்காக நம்மளுடைய கடைமையாகும.தாங்கள் இதற்கு முன் நிதி உதவி செய்திருந்தாலும் கட்டிடம் கட்டி முடிக்க நிதி உதவி செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் செய்வானாகவும் இது சம்மந்தமான தொடர்புக்கு புதுப்பள்ளி வாசல் முஹல்லா தலைவர் ஜெர்மன் J.முஹம்மது அலி
9444454755 அவர்களிடம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்
மு.முஹம்மது முஹைதீன்
பேரூராட்சி EX. கவுன்சிலர் முத்துப்பேட்டை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மொளத் அறிவிப்பு முத்துப்பேட்டை. ரஹ்ம்மத் நகர், பரக்கத் அலி , மீரா உசேன், நவாஸ்கான்  ஆகியோரின் தக...
31/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மொளத் அறிவிப்பு முத்துப்பேட்டை. ரஹ்ம்மத் நகர், பரக்கத் அலி , மீரா உசேன், நவாஸ்கான் ஆகியோரின் தகப்பானாரும் & பேட்டை புன்னாக்கு ஹாஜாமைதீன் இவருடைய மாமனாருமாகிய N. பாருக் அவர்கள் இன்று மதியம் 1.15 மணி அளவில் மொளத்தாகிவிட்டர்கள் இன்னா லில்லாஹு வாஇன்னா இலைஹீ ராஜீவூன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எல்லோறும் துவா செய்யவும்.

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்!
19/05/2020

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்!

மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை ஜமாலியா தெரு  ஆள் காட்டி வீடு மர்ஹூம் முகம்மது மீராசா அவர்கள் மகள். மர்ஹூம் முகைதீன் பக்...
17/05/2020

மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை
ஜமாலியா தெரு ஆள் காட்டி வீடு மர்ஹூம் முகம்மது மீராசா அவர்கள் மகள். மர்ஹூம் முகைதீன் பக்கீர் அவர்கள் மனைவி. அடுமை (எ) முகம்மது தாவூது ஹமீது அவர்கள் தாயார் .
" நபீசா அம்மாள் ", அவர்கள் இன்று 17-5-2020 காலை 9-15 மணிக்கு மௌத்தாகி விடட்டார்கள்.
அரபு சாகிப்பள்ளியில் மாலை 3-30 மணிக்கு நல்லடக்கம் .
தகவல் ; " சுனா இனா ", முத்துப்பேட்டை.
********************************************

Flight Plan for Return of Indian Nationals Stranded Abroad-Week 2 (16-May-2020 to 22-May-2020)Frequency  of flights  (Co...
11/05/2020

Flight Plan for Return of Indian Nationals Stranded Abroad-Week 2 (16-May-2020 to 22-May-2020)

Frequency of flights (Country & Sector-wise)

மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை திமிலத்தெரு மர்ஹூம் அப்துல்லா அவர்கள் மகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்கள் மனைவியும், மஜக....
11/05/2020

மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை திமிலத்தெரு மர்ஹூம் அப்துல்லா அவர்கள் மகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்கள் மனைவியும், மஜக. பால் முகைதீன் அவர்களின் தாயார் 11-5-2020 இரவு 1-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அடக்க நேரம் :
அரபு சாகிப் பள்ளியில் காலை 10-30 மணிக்கு நல்லடக்கம்.
தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
**********************************************

06/05/2020

*2020 ரமலான் பிறை 13 🌙*
________________________________________________________
📡⭕Live Stream Ongoing..🎥
________________________________________________________
🎙️உரை: *A.ஹைதர் அலி ஆலிம் பாக்கவி காசிமி*

🗣️தலைப்பு: *(தவக்குல்)-அல்லாஹுவை சார்ந்திருத்தல்*

👉🏼நாளைய தினம் பிறை 14 அன்று *இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?* என்கிற தலைப்பில் இந்த தொடர் சொற்பொழிவு நடைபெறும்..

இந்த 2020 ம் ஆண்டு ரமலான் சிறப்பு சொற்பொழிவை நீங்கள் வீட்டில் இருந்தபடியே மிகத் துல்லியமான ( *🎥HD*) நேரலை.

📍https://www.facebook.com/adiraixpress24x7/videos/720396925396463/

Address

Muthupet

Alerts

Be the first to know and let us send you an email when முத்துப்பேட்டை பிபிசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முத்துப்பேட்டை பிபிசி:

Share