18/08/2024
நேற்று நடந்த சம்பவம்.
பொதுவாக எனக்கு ஆன்லைனில் உணவு வாங்கி உண்பது பிடிக்காது. தவிர்க்க முடியாத காரணத்தால், நேற்று swiggy யில் இரவு உணவு வாங்கியிருந்தேன்.
எனக்கு உணவு குடுக்க வரும்போது, என் வீட்டின் அருகில், delivery ஊழியரின் bike பஞ்சர் ஆகி விட்டதாகவும், மெக்கானிக் யாராவது தெரியுமா என்று என்னிடம் கேட்டார்.
அது tubeless tyre இல்லாத காரணத்தால் அவரால் வண்டியை இயக்க முடியவில்லை.
நான் மெக்கானிக் ஃபோன் செய்தேன். 15 நிமிடத்தில் வருவதாக கூற, அதுவரை அவருடன் நின்று இருந்தேன்.
ஏதோ , யோசித்துக் கொண்டு இருந்தார்.
என்ன யோசிக்கிறீீங்க என்று கேட்டேன்.
அவர் சொன்னார்..
நான் இன்னைக்கு ஆபீஸ் முடிந்து, இப்போ வர 150rs கிட்டதான் தான் swiggy ல ஒட்டி இருக்கேன். Bike பஞ்சர்கு எப்பிடியும் 200, 300 ஆயிடும் னு சொல்லி வருத்தப்பட்டார்.
நல்ல வேளை 8:30 மணிஅளவில் டயர் பஞ்சர் ஆனதால் தப்பித்தேன். 10 மணிக்கு மேல பஞ்சர் ஆச்சுனா மெக்கானிக் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன் என்றார்.
மேலும் நாங்கள் பேசியதில், நான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டது 👇
அவர் சென்னையில் ஒரு private company ல வேல பார்க்கிறார்.
மனைவி- housewife.
குழந்தைகள் - 2
சென்னையில் வாடகை வீடு.
கடன் பிரச்சனை கொஞ்சம் இருக்கும் என்று நினைகிறேன்.
இரவில் swiggy zomato வில் delivery செய்கிறார்.
மாத சம்பளம் + SWIGGY ஒட்டுவது மூலம் மொத்தம் கிட்டத்தட்ட, மாதம் 50000 to 60000 வருமானம் வரும் என்று நினைக்கிறேன்.
இப்படி நிறைய விஷயம் பேசினோம். அவர் சொன்ன கடைசி விஷயம் மிகவும் வருத்தமளித்தது. 👇
என் வயசு 37, எங்க parents ஊர்ல இருகாங்க. அப்பாக்கு 70 வயசு. இன்னும் உழைச்சுட்டு இருக்கார். கல்யாணத்திற்கு பிறகு, ஒரு மாசம் கூட 3000rs கு மேல என்னால என் Parents கு அனுப்ப முடியல. எங்க அப்பாக்கு எப்படி எப்போ ரெஸ்ட் குடுக்குறது தெரில. என் நிலைமையை நெனச்சா எனக்கே என் மேல கோவம் வருது.
அப்டின்னு சொல்லி வருத்தப்பட்டு பேசினார்.
பைக் மெக்கானிக் வர,
நானும், எல்லாம் சரி ஆகிவிடும். கவலைப் படாதீங்கனு சொல்லிட்டு, அவர் அப்பாவை நினைத்து கொண்டே வீட்டுக்குள் வந்துவிட்டேன்.
தேவையான பணம் நல்லவர்களிடம் இருந்தால், வாழ்க்கை அழகாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்ல?