22/05/2024
இன்று அய்யா வைகுண்டசாமியின் அன்பு செல்ல பிள்ளை என் பாசமுள்ள எங்கள் என் உயிா் செல்ல அம்மாவிற்கு ,
கிருஷ்ணம்மாள்பால்துரை ஆசிாியை அவர்களுக்கு அய்யாவின் அருளால் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எப்போதும் எல்லா சந்தோசமும் பெற்று நலமுடனும், எப்போதும் மகிழ்ச்சியுடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா.
அம்மா அய்யாவிடம் அளவுகடந்த பாசம் மற்றும் எங்களை பக்தியில் வளா்த்து கடவுள் பக்தி சொல்லி தத்தாா்கள்.அம்மா சொல்லும் கடவுளை பற்றிய அமுத வாா்த்தை அழகு.கோயில் தா்மம் செய்வதிலும் சொல்லவே வேண்டாம்.இரகசியமாக செய்வாா்கள்.எங்கு சென்றாலும் அம்மாவிடம் எல்லோரும் அன்பாக இருப்பாா்கள்.எல்லாாிடமும் அன்பும்,எல்லாாிடமும் இரக்க குணமும் கொண்டு இருப்பாா்கள் என் செல்ல அம்மா.
நல்லதோா் தெய்வீக குணம் மற்றும் எல்லாம் அய்யா வைகுண்டசாமி அறிவாா்,என்றும் நீங்கள் அய்யா அருள் அன்பு கொண்டு வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் அம்மா.
அய்யாவின் அருளால் என்றும் மிக்க மகிழ்ச்சியுடன் எல்லா நலமும் செல்வ வளமும் பெற்று நீடூழி காலம் வாழ நாங்கள் அன்பாய் வாழ்த்துகின்றோம் அம்மா.வாழ்க பல்லாண்டு பலகோடி காலம் ".வாழுவீா் தாழ்வில்லாமல்".
"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".
அய்யா துணை.அய்யா உண்டு.