04/07/2025
நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில்முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் பல்கலைக்கழகஅரங்கில்,1991–1995 ஆண்டு இங்கு பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு விழா மிகவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழா, பல்கலைக்கழக நிர்வாகம்மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NIAA) இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.விழா காலை 9:45 மணிக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் வருகையுடன்தொடங்கியது. NICE95 மாணவர் குழுவின் சார்பில் திரு.மேசியாதாஸ், Lead Software Engineer, Statefarm Insurance, USA, வரவேற்புரைஆற்றினார். அவரது உரையில், கல்வி பயணத்தின் நினைவுகள்மற்றும் மாணவர்களுக்கு NICHE வழங்கிய வாய்ப்புகள் பற்றி அவர்நினைவுகூர்ந்தார்.தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்பி. திருமால்வளவன், முன்னாள் மாணவர்களின்சாதனைகள் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சியில் அவர்கள் வழங்கும் பங்களிப்பை புகழ்ந்துபாராட்டினார். கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கு முன்னாள் மாணவர்கள் வகிக்கும்பங்கு குறிப்பிடத்தக்கது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்விழாவின் முக்கிய அம்சமாக,தற்போதைய மாணவர்களுடன் இன்றைய தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில்தங்களது துறை சார்ந்த நுண்ணறிவுகளை முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர் .திரு. சையத்கரீமுல்லா, நிர்வாக இயக்குனர் & துறைதலைவர் தரவு தொழில்நுட்பம், Jefferies Financial Group, USA, “தரவு மேலாண்மை மற்றும் AI/ML – நடப்பு போக்குகள்”என்ற தலைப்பில் தகவல்களை வழங்கினார்.திரு.பேட்ரிக்பிச்சப்பா,துணை தலைவர்– Technology Risk andAvailability, First Abu Dhabi Bank, “மெய்நிகர் பாதுகாப்பு”குறித்த தொழில்நுட்ப உரை வழங்கினார்.நிகழ்வு நிறைவு அம்சமாக,Dr. இக்னி செபாஸ்டி பிரபு, தேர்வு கட்டுப்பாட்டாளர், சத்யபாமா பல்கலைக்கழகம்,சென்னை, நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்தஅனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.இந்த சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள்மாணவர்களுடனான உறவினை புதுப்பிக்கும் நிகழ்வாக அமைந்தது. --
கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே
WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral