Cafekanyakumari

Cafekanyakumari Cafekk.com is Nagercoil's online magazine. We are on a mission to explore, evoke our generation.

Join us as we sail through time on a journey of events taking place in and around Kanyakumari District.

16/10/2024

கன்னியாகுமரி மாவட்டம் - கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் வீடுகளில் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

கடல் நீரோடு மணலும் இழுத்துவரப்பட்டதால் பல பகுதிகள் மணலால் சூழப்பட்டுள்ளன.

16/10/2024

பீகார் மாநிலம் பாகல்பூரில் - கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததால்,

கடித்த பாம்பை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு..

16/10/2024

ஆந்திரா மாநிலம் - கர்னூல் மாவட்டம், லாரி டிரைவர் ஒருவர் அதிகளவில் மது அருந்தி வீட்டிற்கு செல்ல இயலாமல் போதையில் இருந்துள்ளார்.

அருகிலுள்ள புதரில் இருந்து மலைப்பாம்பு ஒன்று அவர் மீது ஏறி உடலை சுற்றியதை கண்ட அப்பகுதி மக்கள் பாம்பை விரட்டி டிரைவரை காப்பாற்றினர்.

பணிகள் கை கொடுத்தது...முதல்வர் மகிழ்ச்சி...கடந்த 3 மாதங்களாகவே மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டோம்; அது கைகொடுத்துள்ளது...
16/10/2024

பணிகள் கை கொடுத்தது...
முதல்வர் மகிழ்ச்சி...

கடந்த 3 மாதங்களாகவே மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டோம்; அது கைகொடுத்துள்ளது.

திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி.

கலெக்டர் திடீர் ஆய்வு  தோவாளை பெரியகுளம் மதகுகளை மாவட்ட கலெக்டர் அழகு மீனா திடீர் ஆய்வு.
16/10/2024

கலெக்டர் திடீர் ஆய்வு

தோவாளை பெரியகுளம் மதகுகளை மாவட்ட கலெக்டர் அழகு மீனா திடீர் ஆய்வு.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு சார்...
16/10/2024

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு சார்பில் கல்லூரியில் இணைய வழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது கல்லூரி முதல்வர் பொறுப்பு ஜெயந்தி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .கல்லூரி துறை தலைவர்கள் பேராசிரியர் டி. சி. மகேஷ் பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்தி பேசினர் ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை கப்பல் பிரிவு அதிகாரி ஆ. பிரபுமாறச்சன் செய்திருந்தார்.

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கைகட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்ப...
16/10/2024

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை

கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதல் நாள் ஆட்டம் ரத்துபெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் துவங்க இருந்த இந்தியா-நியூ., இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முத...
16/10/2024

முதல் நாள் ஆட்டம் ரத்து

பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் துவங்க இருந்த இந்தியா-நியூ., இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடாமலேயே ரத்து.

ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தா...
16/10/2024

ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அ.தி.மு.க., ஆட்சியில் இவ்வளவு தான்!குறுகிய நேரத்தில் 20 செ.மீ., மழை பெய்தும், நீர் வடிந்துள்ளது; அதிமுக ஆட்சியில் 400 கி...
16/10/2024

அ.தி.மு.க., ஆட்சியில் இவ்வளவு தான்!

குறுகிய நேரத்தில் 20 செ.மீ., மழை பெய்தும், நீர் வடிந்துள்ளது; அதிமுக ஆட்சியில் 400 கி.மீ., மட்டுமே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இப்போது 1,135 கி.மீ., வடிகால் அமைக்கப்படுகிறது; இதில் 781 கி.மீ., பணிகள் முழுமையாக நிறைவு.

குப்பைகளைச் சேகரிக்க தடுப்புகள் இருப்பதாலேயே சில இடங்களில் நீர் மெதுவாக வடிகிறது: அமைச்சர் கே.என்.நேரு.

சென்னைக்கு 280 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
16/10/2024

சென்னைக்கு 280 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு!* ஜார்க்கண்ட்டில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில...
15/10/2024

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு!

* ஜார்க்கண்ட்டில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

* இரு மாநிலங்களிலும் நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

மழை முன்னெச்சரிக்கை கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  ஹணிஷ் சாப்ரோ, கன்னியாகுமரி மாவட்ட கலெக்ட...
15/10/2024

மழை முன்னெச்சரிக்கை கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹணிஷ் சாப்ரோ, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது...

பாதுகாப்பா இருங்க மக்களே!பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாக மழை எச்சரிக்கையை அனுப்பி வரும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம...
15/10/2024

பாதுகாப்பா இருங்க மக்களே!

பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாக மழை எச்சரிக்கையை அனுப்பி வரும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை திறக்கப்பட...
15/10/2024

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறக்கிறார்.

நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த நாட்களில் காலையில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும்.

21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்; அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும்.

15/10/2024

பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

SCO கூட்டமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை,

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் இலியாஸ் நிஜாமி வரவேற்றார்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவ. 13ல் வாக்குப்பதிவு  -  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
15/10/2024

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவ. 13ல் வாக்குப்பதிவு

- தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு

திரைப்பட இயக்குனரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் எழுதிய வாகைசூடவா நண்பா என்ற புத்தகம் முன்னாள் அமைச்...
15/10/2024

திரைப்பட இயக்குனரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் எழுதிய வாகைசூடவா நண்பா என்ற புத்தகம் முன்னாள் அமைச்சர் பச்சைமாலிடம் வழங்கப்பட்டது.அருகில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் அழகேசன்.

Address

Neela Tower, WCC College Road
Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Cafekanyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cafekanyakumari:

Share