
01/05/2024
செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது..
தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட
ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல..
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி,
நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது..
ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்..
பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார்.
நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்..
அவரோட வாய்ப்பு வரும் போது,
அவர் Entry போட்றவர் கிட்ட,
"ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா..
அப்படியே எழுதி குடுங்கய்யா"
ன்னு சொல்ல,
Bank officer,
"350 ரூபா இருக்கு..
இதுக்கு ஒரு entry வேறயா..
போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி"
அனுப்ப,
அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைலசைல வந்து நிக்கிறாரு..
அந்த Employee,
"யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட,
அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப,
Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு..
கஷ்டப்படுறவனுக்கத் தான்
அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல..
அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து,
ஐயா..
"ஏன்யாஎன் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்..
அதுக்கு Manager,
"நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல..
அதான் போட்டுட்டோம்..னு Cool aa பதில் சொன்னாரு.."
அந்த மனுஷன்..எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி
மொத்த கடன் 22000 த்த
மொத்தமா அடச்சிட்டு..
அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது..
(அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு)
Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது,
சர்வர் கிட்ட சவுண்டு விட்றது,
ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது,
நமக்கு கீழ வேலை செய்றவங்கள
ஒருமைல பேசுறது,
இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்..
இங்க யாரும் மேலயும் இல்ல..
கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு
ஏத்த வேலை செய்றாங்க..
மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க..
உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே..
உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை..
உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு
காரணம் பயம்..
உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character.
என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்..
முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்..
நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்..
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..✨