24/06/2020
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பழைய பாலம் மற்றும் புதிய பாலம் போக்குவரத்து துண்டிப்பு. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் மாலைக்குள் மாவட்ட எல்லையில் போக்குவரத்து நிறுத்தம். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை. நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லைகள் இரண்டாவது முறையாக மூடப்படுகிறது.