10/11/2025
நாசரேத் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்நிலைகளுள் ஒன்றான 1835 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடம்பா குளத்தை சீரமைக்கும் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
40 கிராமங்களினால் சூழப்பட்டுள்ள இந்த குளம் தூர் வாரி பல ஆண்டு காலம் ஆகிறதால் கடம்பா குளம் தற்போது, மிக குறைந்த அளவே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது.
இந்த கடம்பா குளத்தின் நீரானது பெரிய நீர் நிலைகளுக்கும், நூற்றுக்கணக்கான சிறு குளங்களுக்கும் இந்த தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடம்பா குளத்தினை தூர்வாரி, கரைகள் அமைத்து, குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, கலப்படத் தண்ணீராக இருக்கும் இந்த குளத்தின் நீரினை நன்னீராக்க பிரபல நீர் மேலாண்மை நிபுணர் நிமல் ராகவன் அவர்கள் குழுவினர், மற்றும் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்யும் Tekion corp நிறுவனத்தாரும் இணைந்து கடம்பாகுளத்தை சீரமைத்து விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரபோகின்றனர்.
ஆகாயத்தாமரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 8 கிமீ நீள கிழ வாய்க்காலினை சீரமைக்கும் பணிகள் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகைய பெரிய நீர்நிலைகள் நல்லபடியாக தூர்வாறப்படுவது ,
விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும்.
இதற்கான அனைத்து முயற்சிகளை செய்தவர்களுக்கு நன்றிகள்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
"கடலில் பாதி கடம்பா குளம்”