09/10/2025
*நீலகிரி மாவட்டம் உதகை(RTO) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான் உயிர் காவலன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.*
நீலகிரி மாவட்டம் உதகை எனது நகரம். அதில் நான் பெருமை கொள்கிறேன்.
சாலையில் அனைவரும் பாதுகாப்பாக இருந்தால், சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
நான் வாகனத்தை இயக்கும் பொழுது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவேன், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவேன், அலைபேசி (மொபைல் போன்) பயன்படுத்த மாட்டேன். சாலை விதிகளைப் பின்பற்றுவேன்.
நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்
சாலையில் செல்லும் ஒவ்வொரு உயிரையும் என்னுடையதாக மதிப்பேன்.
சாலைப் பாதுகாப்பு எனது உரிமை மற்றும் எனது கடமை என்பதை நான் அறிவேன்.
எனது நகரத்தை விபத்தில்லா நகரமாக மாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.நான் உயிர் காவலனாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்🪶🌿