timesofpalani

timesofpalani Palani news & memes connected with u in 24×7

01/09/2023

17/08/2023
17/08/2023

சோதனை ஓட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.

பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

பழனி:

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார், படிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.

குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் தலா 3.6 டன் எடையுடையது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பெட்டிகளை இணைத்து சோதனை செய்யப்பட்ட நிலையில் முதல் பெட்டியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது சோதனை செய்ய ப்பட்டது. புதிய பெட்டி களுக்கு ஏற்றாற்போல் பிளாட்பாரமும் மாற்றிய மைக்கப்படுகிறது. இதன் பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு முன் படிப்படி யாக எடை அதிகரித்து மின் இழுவை ரெயிலை இயக்கி சரிபார்க்கப்படும். சோதனை ஓட்டத்துக்கு பின்பு நிபுணர்கள் ஒப்புதல் பெற்று பக்தர்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

சிவகிரிப்பட்டி மற்றும் பாப்பம்பட்டி ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிகளுக்காக டிராக்டர்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் பழனி...
16/08/2023

சிவகிரிப்பட்டி மற்றும் பாப்பம்பட்டி ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிகளுக்காக டிராக்டர்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமிருந்து சிறந்த நிர்வாக திறமைக்கான சான்றிதழும் பதக்கமும் பழனி, வட்டாரக்கல்வி அல...
16/08/2023

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமிருந்து சிறந்த நிர்வாக திறமைக்கான சான்றிதழும் பதக்கமும் பழனி, வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ரமேஷ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது

பழனி நகராட்சி
16/08/2023

பழனி நகராட்சி

பழனியில் பல்வேறு குற்ற சம்பவகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் பழனி நகர் க...
16/08/2023

பழனியில் பல்வேறு குற்ற சம்பவகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் பழனி நகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி சிறப்பு விருதினை வழங்கினார் 💐

12/08/2023

⛈️

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனிபத்திரிக்கை செய்தி" 0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முரு...
05/08/2023

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி

பத்திரிக்கை செய்தி

" 0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள்/ பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருக்கோயில் நிர்வாகம்

Address

Palani

Website

Alerts

Be the first to know and let us send you an email when timesofpalani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to timesofpalani:

Share