பழநி-The Temple City

பழநி-The Temple City நினைத்ததை அருளும் பழனி முருகன்...
(3)

பழனி தேர்வு நிலை நகராட்சியாக விளங்குகிறது. பழனி மலைத் தொடர்களின் அடிவாரத்தி லிருந்து 10கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திற்கும் மேல் 350 மீட்டர் உயரத்திலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இருபது சதுர கி.மீ பரப்புக்கு மலைகளையும் குன்றுகளை யும், ஆறுகளையும் காணலாம். இரயில் நிலையம், பேருந்து வசதி சிறப்பாக உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிகின்றன காரணத்தால் தமிழ்நாட்டிலேயே வருவாய் மிகுந்த கோ

யிலாகப் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது.











இளைஞர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளை சீரழிக்கும் !!!                                                                     ...
11/04/2025

இளைஞர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளை சீரழிக்கும் !!! போதை கலாச்சாரத்தை வேரறுப்போம் !!! இளைஞர் நலன் பாதுகாப்போம் !!! - நடத்தும் #மினி_மாரத்தான் விரைவில் பழனியில்

 #இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம் சார்பில் பழனி நகரில்  #வேண்டாம்_போதை!! #வேண்டும்_வேலை!! என்னும் இளைஞர்களுக்கான விழிப்புணர...
09/04/2025

#இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம் சார்பில் பழனி நகரில் #வேண்டாம்_போதை!! #வேண்டும்_வேலை!! என்னும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கோசத்தை முன்னிறுத்தி #மினி_மாரத்தான் நிகழ்ச்சி விரைவில் நடைபெறுகிறது
confident

விற்பனை!!!! 📢சிறந்த முதலீட்டு வாய்ப்பு பழனி நகரில் புதுநகர் பகுதியில் மிக குறைந்த விலையில் 4.25 சென்ட் அமைந்துள்ளது.தொடர...
14/02/2025

விற்பனை!!!! 📢

சிறந்த முதலீட்டு வாய்ப்பு பழனி நகரில் புதுநகர் பகுதியில் மிக குறைந்த விலையில் 4.25 சென்ட் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: +91 84386 25009 📞

11/02/2025

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா 2025 முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் மலர் அலங்காரம் திருப்பூரை சேர்ந்த கோபி என்பவர் ஆறு லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள்....

11/02/2025

தைப்பூச தேரோட்டம்...

11/02/2025

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக் கோயில் சென்ற பக்தர்கள் கூட்டம்....

தைப்பூசம் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயில் வெள்ளி தேரோட்டம்....
10/02/2025

தைப்பூசம் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயில் வெள்ளி தேரோட்டம்....

பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அனைவரும் வருக!!
10/02/2025

பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அனைவரும் வருக!!

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்:வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து...
04/02/2025

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்:

வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து விட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி வைக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில கோணங்கள் உண்டு. சிலர் இந்த ஆவணங்கள்மீதும் வேறு பல பொருட்களை அடுக்கி விடுவர். இதன் காரணமாக அந்த ஆவணங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டுவிட வாய்ப்புண்டு. அதுவும் வீட்டின் தாய்ப்பத்திரம் மிகவும் பழமையானதாக இருந்தால் இது மேலும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு சிலர் இந்த ஆவணங்களை லாமினேட் செய்து விடுகிறார்கள். இதனால் ஆவணங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம். ஆனால் பின்னர் ஏதாவது சட்டச் சிக்கல் வந்தாலோ, வீட்டை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற நினைத்தாலோ அப்போது சிக்கல் ஏற்படலாம்.
வங்கி லாக்கரில் வீடு தொடர்பான ஆவணங்களை வைப்பது நல்லது. அப்படி வைக்கும்போது லாக்கரில் பல பொருள்களை வைக்க வேண்டியிருந்தால் வீட்டு ஆவணங்களை மடித்து வைக்கக் கூடாது.
பரிந்துரைக்கத்தக்க இன்னொன்று, வீட்டு ஆவணங்களை ஸ்கேன்செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலப்போக்கில் ஆவணங்களில் உள்ள எழுத்துகள் மங்கிக் காணப் பட்டால் ஸ்கேன் பிரதி உதவும். இப்படி ஸ்கேன் செய்த ஆவணங்களை உங்களுக்கு நம்பகமான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு (அது உங்கள் வாழ்க்கைத் துணைவ ரோ, மகன், மகளாகவோ இருக்கலாம்) மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள்.

வீட்டில் மரப் பெட்டிகளில் ஆவணங்களை வைக்க வேண்டாம். எளிதில் தீப்பற்றக் கூடிய எதற்குள்ளும் ஆவணங்களை வைக்காதீர்கள். இந்த ஆவணங்களை நாம் கையாளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால் கரையான் அரிக்க முடியாத இடங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஸ்டீல் பீரோவுக்குள் வைத்தால்கூட பாச்சா உருண்டைகளை அவற்றின் அருகே போடுவது நல்லது. வீடு தொடர்பான விற்பனைப் பத்திரம், வில்லங்கமில்லா சான்றிதழ், தாய்ப்பத்திரம் போன்ற அடிப்படையான முக்கிய ஆவணங்களை ஒரு பகுதியாகவும், வீடு தொடர் பான இதர ஆவணங்களை (செலவு செய்த பட்டியல், வழக்கமான ரசீதுகள்) போன்ற வற்றை தனித்தனியாகப் பிரித்தும் பாதுகாக்கலாம். முதலில் கூறிப்பிட்டவற்றுக்கு மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.

என்ன காரணத்திற்காகவோ வீட்டு ஆவணங்களில் ஒன்றிரண்டை வெளியே எடுக்க நேர்ந்தால் மீண்டும் அதை அதற்கான இடத்தில் வைத்துவிட வேண்டும். வங்கி லாக்கரில் இந்த ஆவணங்களை வைத்தால் அந்த லாக்கர் தொடர்பான அடிப்படை விஷயங்களை (லாக்கர்எண் உட்பட) நெருங்கிய உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி விடுங்கள்.

எங்கே வைக்கிறோம், எந்நிலையில் பராமரிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வில்லை என்றால் தேவைப்படும் சமயத்தில் ‘‘அந்த முக்கியமான ஆவணம் எங்கே போய்த் தொலைந்தது?’’ என்று பற்களை நரநரக்கும் நிலை தோன்றுவதைத் தவர்க் கலாம். “ஐயோ கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஆவணங்களுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காதே’’ என்று வருத்தப்படும் நிலையையும் தவிர்க்கலாம்.

Address

Palani

Website

Alerts

Be the first to know and let us send you an email when பழநி-The Temple City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பழநி-The Temple City:

Share