12/01/2024
வட இந்தியா IAS கள் தான் தமிழகத்தில் அதிகம்
அந்த நிலையை போக்க தமிழ் மாணவ மாணவியர்கள் ஐஏஎஸ் என்ற இடத்தை பிடிக்க முன்வர வேண்டும்
பல்லடம் கலை அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது, இதில் பேச்சு போட்டியும் நடைபெற்றன இந்த பேச்சுப்போட்டி முடிவடைந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசும்போது தமிழகத்தில் பெரும்பாலும் வட இந்தியாவில் இருந்து வருகை தந்த ஐஏஎஸ் அதிகாரிகளே அதிகமாக இருப்பதாகவும் அந்த நிலையை போக்க தமிழகத்தில் மாணவ மாணவிகள் ஐஏஎஸ் படித்து முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஆட்சியராக வரவேண்டும் என்றும் மாணவ மாணவியர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார், தொடர்ந்து கலைஞர் கருணாநிதி உடன் தான் பழக இயலவில்லை என்றும் வேதனைப்பட்டார் அதேபோல மாணவர்கள் 2 சக்கர நான்கு பேர் வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பெற்றோர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பேசினார், நிகழ்ச்சியை தலைமை சட்டமன்ற கொறடா மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் iAs கோவி செழியன் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் குமார் , பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் பல்லடம் நகர துணை செயலாளர் வேலுமணி மற்றும் திட்டக்குழு உறுப்பினர் ராஜசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் P.A.சேகர், பாலகிருட்ணன்,தங்கவேல், ஜாஹீர் உசேன், தினேஷ், செளந்தர்ராஜ், மற்றும் கவுன்சிலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்,,
Do follow
🔥 ❤