
31/03/2025
கஞ்சா போதையில் கார் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் கைது!
விழுப்புரம் பகுதியில் நேற்று மாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் திண்டுக்கல் செல்ல சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் காரை முந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை பின் தொடர்ந்து காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். காரின் ஓட்டுனர் சஞ்சீவி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகில் போலீசார் வாகன தணிக்கையின் செய்தபோது நிறுத்தி மேற்கண்ட விவரத்தை தெரிவித்த உடன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சஞ்சீவி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்து காரின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து
1.ராஜேஷ்(24)
s/o சங்கர்
காணை குப்பம்,
2.ராஜா(25)
s/o குமார் மற்றும்
காணை
3.வினோத்(22)
s/o ஜெயச்சந்திரன்
முண்டியம்பாக்கம்
ஆகிய
மூன்று நபர்கள் *உடனடியாக கைது* செய்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக காணை கிராமத்துக்கு கஞ்சா கடத்தல் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.