
05/01/2025
பேரன்பும் பாசமும் நிறைந்த எனது அருமை பண்டாரவாடை ஊராட்சி மன்ற பொதுமக்களே அனைத்து கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் அமைப்புசாரா நலன் விரும்பிகள் உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
கடந்த ஐந்து வருடங்களாக பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பினை எங்களுக்கு தாங்கள் வழங்கி இருந்தீர்கள்..
இந்த 1825 நாட்களில் முழுமையாக நமது ஊராட்சிக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ...
என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் முழுமையாக செய்து முடித்தோம் பண்டாரவாடை முழுவதும் புதிய பைப் லைன்கள் மாற்றப்பட்டுள்ளது ஒரு சில பகுதிகளை தவிர .. குப்பைகளை முழுமையாக அகற்றுவதற்கு முழுமையாக பாடுபட்டோம். தெருவிளக்கு இல்லாத தெருக்களாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் அமைத்தோம் ..
இதுவரை போட்ட சாலைகள் இல்லாமல் இன்னும் பாக்கி உள்ள தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் நிச்சயமாக வரும் நாட்களில் வேலைகள் தொடங்கியுள்ளது இன்னும் நாம் பல புதிய தார்சசாலைகளை எழுதி கொடுத்துள்ளோம் ..
வருகின்ற நிதியாண்டுகளில் அந்த வேலைகள் நிச்சயமாக நடைபெறும் ...
இந்த 1825 நாட்களில் என்னிடம் அலைபேசியின் வாயிலாகவும் நேரடியாகவும் பொது தளத்திலும் பலர் பலவிதமான விஷயங்களுக்கு தொடர்பு கொண்டனர் நான் யாரிடமும் கடிந்தோ கோபமாகவோ பேசியதில்லை ...
என் மீது அவதூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் கோபங்களை தூண்டும் அளவிற்கு பேசியும் ஒரு சிலர் உள்ளனர் ..
நான் முழுமையாக நமது ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக ஆக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலே முழுமையாக செயல்பட்டேன். பல சவால்களை எதிர்கொண்டேன் பல வருடங்களாக மாற்ற முடியாத சில செயல்பாடுகளை செய்தேன்.. ஆனால் அனைத்தும் இந்த ஐந்து வருடத்தில் செய்ய முடியவில்லை கொரோனா என்ற நோயினால் ஒரு வருட காலம் பல விதமான எண்களை சந்தித்தோம் பிறகு ஆட்சி மாற்றம் ..
இருப்பினும் நமது ஊராட்சிக்காக பல செயல்பாடுகளை செய்வதற்கு கீழ்க்கண்ட மரியாதைக்குரிய
ஒன்றிய கவுன்சிலர்கள் ரெஜியா பேகம் முகமது அவர்களும் மணிமொழி தமிழ்வாணன் அவர்களும்
மரியாதைக்குரிய கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி அவர்களும்
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் M.H. ஜவாஹிருல்லா அவர்களும்
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் அவர்களும் மரியாதைக்குரிய பாபநாசம் ஒன்றிய சேர்மன் சுமதி கண்ணதாசன் அவர்களும் மரியாதைக்குரிய திமுக ஒன்றிய செயலாளர் முகமது நாசர் அவர்களும் நமது ஊராட்சிக்காக நாம் கேட்டதை எல்லாம் சிறப்பான முறையில் செய்து கொடுத்தார்கள் இன்னும் செய்து கொடுப்பதற்கு பாக்கி உள்ள வேலைகளையும் செய்து கொடுப்பார்கள் .. அனைவர்களுக்கும் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றும் சார்பாக பொதுமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
என்னை தேர்ந்தெடுத்த தங்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த மனமார்ந்த மனமார்ந்த நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு இறைவன் நாடினால் மீண்டும் ஊராட்சி மன்ற பொறுப்பிற்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ....தற்போது உங்களோடு நானாக விடைபெறுகிறேன் ......
நிச்சயமாக நமது ஊரின் மீது மேன்மேலும் அக்கறை கொண்டவனாக இருப்பேன் என்று என்னால் முடிந்த வரை நற்செயல்களை செய்வேன் என்று வாய்ப்பளித்த உங்களுக்கெல்லாம் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன் ...
இப்படிக்கு
அ.முஹம்மது மஃரூப்
பண்டாரவாடை
#பண்டாரவாடை
Mohamed Mehruf Mehruf