16/02/2025
விகடன் இணையதளத்தை முடக்கம் செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றியதை ஒன்றிணைத்து, கார்டூன் ஒன்றை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அரசியல் நிகழ்வுகள், தேசத்தின் முக்கிய பிரச்சனைகளை எளியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் கார்ட்டூன்கள் வெளியிடுவது, ஊடகத்துறையில் காலம், காலமாக இருந்து வருகிறது.
மக்களுக்கு பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற கருத்துப்படங்களை வெளியிடுவதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறது.
அந்த வகையிலே இந்த கருத்துப்படமும் வெளியாகியுள்ளது என்பதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள மறுப்பதோடு,
தங்களுக்கு எதிரானதாக கருதிக்கொள்கின்றனர்.
தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களில், விகடன் இணையதளத்தை மத்திய சட்ட அமைச்சகம் முடக்கியுள்ளது.
இது ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதோடு, ஊடகங்கள் மீதான அடக்குமுறை என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கருதுவதோடு, கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
உடனடியாக, விகடன் இணையதளத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்த கருத்து சுதந்திரத்துக்குப் எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.
இப்படிக்கு
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம்.