Vanakam Pudhuvai

Vanakam Pudhuvai we are doing weekly newspaper in Puducherry

புதுச்சேரி: இந்தியாவில் தற்போது பருவகால இன்புளுயன்சா A(H1N1) / பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொத...
05/10/2026

புதுச்சேரி: இந்தியாவில் தற்போது பருவகால இன்புளுயன்சா A(H1N1) / பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்டு வரும் கண்காணிப்பின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் பருவகால இன்புளுயன்சா A(H1N1) வைரசாகவே உள்ளது. புதிய அல்லது அசாதாரண மரபணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பெரும்பாலான தொற்றுகள் லேசானவையாகவும், தானாகவே குணமடையக்கூடியவையாகவும் உள்ளன.

முக்கிய அறிகுறிகள்

இன்புளுயன்சா A(H1N1) தொற்று பொதுவாக திடீரென கீழ்க்கண்ட அறிகுறிகளுடன் தொடங்கலாம்:

அதிக காய்ச்சல், குளிர் மற்றும் நடுக்கம்

தொடர்ந்து காணப்படும் வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி

கடுமையான தசை வலி மற்றும் உடல் சோர்வு

தலைவலி

மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு

குறிப்பாக குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுயமாக பயன்படுத்த வேண்டாம்

இன்புளுயன்சா A(H1N1) என்பது வைரஸ் தொற்று என்பதால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வைரஸ்களை அழிக்காது. எனவே, மருத்துவரின் ஆலோசனை இன்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தேவையின்றி பயன்படுத்துவது உடலில் உள்ள பயனுள்ள நுண்ணுயிரிகளை பாதிப்பதுடன், ஆன்ட்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (Antimicrobial Resistance) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

தகுதியான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிகுறிகள் மற்றும் தேவையான ஆய்வகப் பரிசோதனைகளின் அடிப்படையில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் – மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே

ஒசல்டமிவீர் (Oseltamivir) போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் குறிப்பிட்ட மருத்துவ நிலைகளில், மருத்துவரின் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சுயமாக உட்கொள்ளக் கூடாது.

ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ உதவி பெறவும்

கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்:

சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல் அல்லது மிக வேகமாக சுவாசித்தல்

மார்பு வலி அல்லது தொடர்ந்து மார்பில் அழுத்தம் ஏற்படுதல்

உதடுகள் அல்லது விரல்கள் நீல நிறமாக மாறுதல்

இருமும்போது ரத்தம் கலந்த சளி வெளியேறுதல்

அதிக தூக்கநிலை, குழப்பம் அல்லது இயல்புக்கு மாறான ஆழ்ந்த மயக்கம்

வலிப்பு

தொடர்ந்து வாந்தி ஏற்பட்டு, வாய்வழியாக திரவங்களை உட்கொள்ள முடியாத நிலை

குழந்தைகளிடம் உணவு அல்லது பால் உட்கொள்ள முடியாமை, அதிக சோர்வு அல்லது மந்தநிலை, மூச்சுவிடும்போது அசாதாரண சத்தம், மார்பு பகுதி கடுமையாக உள்இழுக்கப்படுதல் அல்லது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

தொற்று தடுப்பு நடவடிக்கைகள்

பொதுமக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது:

சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குறைந்தது 20 வினாடிகள் கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.

சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை (Sanitizer) பயன்படுத்தலாம்.

இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.

டிஷ்யூ கிடைக்காதபோது முழங்கையின் உட்புறப் பகுதியைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.

அதிக மக்கள் கூடும் மற்றும் காற்றோட்டம் குறைந்த மூடிய இடங்களில் முறையாகப் பொருத்தக்கூடிய முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.

காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தாமல் குறைந்தது 24 மணி நேரம் காய்ச்சல் இல்லாத நிலை ஏற்பட்ட பின்னரே பள்ளி, பணியிடம் மற்றும் சமூகக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.

உடல்நிலை சரியில்லாதபோது மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது தொற்று பரவலைக் குறைக்க உதவும்.

இன்புளுயன்சா A(H1N1) தொற்றின் பெரும்பாலான நிலைகள் லேசானவை மற்றும் குணமடையக்கூடியவை. இருப்பினும், ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

IEC, சுகாதாரத்துறை, புதுச்சேரி

புதுச்சேரி: இந்தியாவில் தற்போது பருவகால இன்புளுயன்சா A(H1N1) / பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில...

புதுச்சேரி: குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செப். 28 ம...
27/09/2026

புதுச்சேரி: குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செப். 28 முதல் 30-ம் தேதி வரை சேவா சேது சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டை e-KYC, மொபைல் எண் இணைத்தல், தகுதியுள்ள PMGKAY பயனாளிகளுக்கான White-listing உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என துறை தெரிவித்துள்ளது. e-KYC செய்யாதவர்கள், மொபைல் எண் இணைக்காதவர்கள் மற்றும் தகுதியுள்ள PMGKAY பயனாளிகள் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். e-KYC செய்யாத ரேஷன் அட்டை உறுப்பினர்கள், ரேஷன் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் மற்றும் White-listing செய்யாத தகுதியுடைய PMGKAY பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது

புதுச்சேரி: குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில...

புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு புதுச்சேர...
21/09/2026

புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 60 வயது நிறைவு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2025-26 ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை ரூ.5,000/- வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுசம்பந்தமாக பயனாளிகள் இதுவரை வழங்கிய அசல் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரத்துடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வந்து 24/09/2026 முதல் 15/10/2026க்குள் கையொப்பமிட்டு, அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதியையும் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டலொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மேற்கூறிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது பற்றிய விவரங்கள் அறிய புதுச்சேரி முப்படை நலத்துறை தொலைபேசி எண்ணில் (0413-2253107 / 2250575) தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். — இயக்குநர், முப்படை நலத்துறை, புதுச்சேரி

புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக....

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக நட...
20/09/2026

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏழை மக்கள் கழகம் செயல்பாடுகள் வளர்ச்சிகள் குறித்தும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் கூட்டனி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது அதில் அனைவரின் கருத்துகளின்படி 2026 ல் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடுத்த அதே நிலைப்பாட்டை இந்த இடைத்தேர்தலிலும் எடுக்கப்பட்டு புதுச்சேரி யில் ஆளும் அரசு என் ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமீகு N.ரங்கசாமி ஐயா அவர்களுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் முழு ஆதரவு என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து புதியதாக பதவிகள் வழங்கப்பட்டது கேரளா மாநில தலைவராக சினோஜ் குமார் கேரளா மாநில பொதுச்செயலாளராக .முகமது அசரப் மற்றும் புதுச்சேரி மாநில கவுரவ தலைவராக பழனிவேல் நேட்டப்பாக்கம் தொகுதி தலைவராக .கலியப்பெருமாள் உப்பளம் தொகுதி தலைவராக தாஸ் ஆகியோர்களுக்கு பதவி வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் அதனை தொடர்ந்து ஏழை மக்கள் கழகம் துணை செயலாளர் சுந்தராஜன் அவரககளுக்கு மிக சிறப்பாக பிறந்தநாள் நடைபெற்றது அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவைக்குமார் கழக அவை தலைவர் சார்லஸ் கழக தொகுதி தலைவர் நாகப்பன் கழக தொகுதி தலைவர் புதுவை இலங்குயில் கழக செயல் தலைவர் அண்ணாமலை கழக வழக்கறிஞர் அண்பழகன் கழக ஆன்மீக அணி தலைவி ஜெய்சாந்தி கழக துணை தலைவி லலிதாம்பிகை கழக இணை செயலாளர் ஜெய்சங்கர் கழக பொருளாலர் தேன்மொழி கழக கழக துணை செயலாளர் த சுந்தராஜன் தொகுதி தலைவர் கலைச்செல்வம் கழக துணை அமைப்பாளர் ராஜாமனி என் ஆர் விஜயலட்சுமி தேன்மொழி அன்பு மகள் மற்றும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக ...

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக நட...
20/09/2026

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏழை மக்கள் கழகம் செயல்பாடுகள் வளர்ச்சிகள் குறித்தும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் கூட்டனி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது அதில் அனைவரின் கருத்துகளின்படி 2026 ல் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடுத்த அதே நிலைப்பாட்டை இந்த இடைத்தேர்தலிலும் எடுக்கப்பட்டு புதுச்சேரி யில் ஆளும் அரசு என் ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமீகு N.ரங்கசாமி ஐயா அவர்களுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் முழு ஆதரவு என்று ஒரு மணதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது அதனை தொடர்ந்து புதியதாக பதவிகள் வழங்கப்பட்டது கேரளா மாநில தலைவராக திரு சினோஜ் குமார் கேரளா மாநில பொதுச்செயலாளராக திரு.முகமது அசரப் மற்றும் புதுச்சேரி மாநில கவுரவ தலைவராக திரு பழனிவேல் நேட்டப்பாக்கம் தொகுதி தலைவராக திரு.கலியப்பெருமாள் உப்பளம் தொகுதி தலைவராக திரு தாஸ் ஆகியோர்களுக்கு பதவி வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் அதனை தொடர்ந்து ஏழை மக்கள் கழகம் துணை செயலாளர் திரு சுந்தராஜன் அவரககளுக்கு மிக சிறப்பாக பிறந்தநாள் நடைபெற்றது அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெறிவித்தனர் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவைக்குமார் கழக அவை தலைவர் சார்லஸ் கழக தொகுதி தலைவர் நாகப்பன் கழக தொகுதி தலைவர் புதுவை இலங்குயில் கழக செயல் தலைவர் அண்ணாமலை கழக வழக்கறிஞர் அண்பழகன் கழக ஆண்மீக அணி தலைவி திருமதி ஜெய்சாந்தி கழக துணை தலைவி திருமதி லலிதாம்பிகை கழக இணை செயலாளர் ஜெய்சங்கர் கழக பொருளாலர் திருமதி தேன்மொழி கழக கழக துணை செயலாளர் த சுந்தராஜன்தொகுதி தலைவர் கலைச்செல்வம் கழக துணை அமைப்பாளர் ராஜாமனி என் ஆர் திருமதி விஜயலட்சுமி தேன்மொழி அன்பு மகள் மற்றும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக ...

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 – ஆவது பிறந்த நாளான முன்னிட்டு இன்று காலை 10.00 மணிக்கு காமராஜர் சாலையி...
17/09/2026

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 – ஆவது பிறந்த நாளான முன்னிட்டு இன்று காலை 10.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் மாநில கழக செயலாளர், தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, முன்னாள் மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, தொகுதி கழக செயலாளர்கள் ஆறுமுகம், டாக்டர் கணேஷ், கமல்தாஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜானிபாய் முன்னாள் தொகுதி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 – ஆவது பிறந்த நாளான முன்னிட்டு இன்று காலை 10.00 மணிக்கு காமராஜர் சா...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆசிபெ...
15/09/2026

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிக்கும் பணிக்காக தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அவரவர் வாக்குச்சாவடியில் எவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, திமுக வேட்பாளரின் வெற்றிக்கு எப்படி பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம். லோகையன், டி. அருட்செல்வி, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், கோ. தியாகராஜன், ப. வடிவேல், க.ர.ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுமதி, வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, மகளிர் துணைத் தலைவர் பிரியதர்ஷினி உள்ளிட கழகத்தினார் உடனிருந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா.....

புதுச்சேரி: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக ...
15/09/2026

புதுச்சேரி: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேதுசெல்வம், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில....

புதுச்சேரி, செப்.15: 2026–27 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்மு...
15/09/2026

புதுச்சேரி, செப்.15: 2026–27 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
முதல் முறையாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களும், 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கான பதிவு 15.09.2026 முதல் 30.09.2026 வரை நடைபெறும். தகுதியான தனித்தேர்வர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சேவை மையத்தில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சிக்குப் பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணை பயன்படுத்தி, ஹால் டிக்கெட் தேர்வர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விண்ணப்பிப்பவர்கள், பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் சம்பந்தப்பட்ட மையத்தில் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். 80% வருகைப் பதிவு பெற்ற தனித்தேர்வர்கள் மட்டுமே 2026–27ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026–27 கல்வியாண்டு 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கான பதிவு தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு.

புதுச்சேரி, செப்.15: 2026–27 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செ...

புதுச்சேரி: 6.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் பதவிகள் விருதுகள் மற்றும் ஆசிரியர் தின விழாவும் மிக சிற...
07/09/2026

புதுச்சேரி: 6.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் பதவிகள் விருதுகள் மற்றும் ஆசிரியர் தின விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு புதியதாக பதவிகள் விருதுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர், அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தின விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது.

பதவிகள் ஏற்றவர்கள் விபரம் வருமாறு ஏழை மக்கள் கழகம் மாநில இணை செயலாளராக ஜெய்சங்கர் மாநில பொருளாளராக தேன்மொழி மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கிரிஜா ஊசுடு தொகுதி தலைவராக சந்திரசேகர், வில்லியனுர் தொகுதி தலைவியாக அன்பரசி, ஊசுடு தொகுதி பொதுச் செயலாளராக கோகுல் நாத், ஊசுடு தொகுதி பொருளாளர் பரமேஸ்வரி, ஏம்பலம் தொகுதி தலைவராக லூர்து நாதன் ஆகியோர்கள் மிக சிறப்பாக அனைவரும் பதவி ஏற்றனர் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவைக்குமார் மற்றும் ஏழை மக்கள் கழகம் மாநில அவை தலைவர் சார்லஸ் லாஸ்பேட்டை தொகுதி தலைவர் நாகப்பன், இந்திரா நகர் தொகுதி தலைவர் மணிவண்ணன், மாநில துணை பொருளாளர் ரமேஷ், மாநில ஆண்மீக அணி தலைவி ஜெய்சாந்தி, மாநில மகளிர் அணி துணை தலைவி லலிதாம்பிகை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முத்தையன், மாநில துணை அமைப்பாளர் ராஜாமனி, பாகூர் தொகுதி தலைவர் இலையராஜா, அரியாங்குப்ம தொகுதி சமூக சேவகர்கள் கண்ணன், செல்வராசு மற்றும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி: 6.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் பதவிகள் விருதுகள் மற்றும் ஆசிரியர் தின விழாவும் மிக ச...

Address

01, First Main Road, Mahaveer Nagar, Lawspet
Pondicherry
605008

Alerts

Be the first to know and let us send you an email when Vanakam Pudhuvai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share