
11/08/2024
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பார்வை இழப்பு
விழுப்புரம் ஆகஸ்ட் 11
விழுப்புரம் அருகே கக்கனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மின்னல் தாக்கி பார்வையிழப்பு
விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் இவர் மகள் சன்மதி வயது 14 இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது தாயுடன் உறங்க சென்றிருந்தார் இந்நிலையில் நேற்று இரவு மின்னல் இடியுடன் கனத்த மழை பெய்தது.
திடீரென்று இவரது வீட்டின் மீது இடி விழுந்து தாக்கியது.
தூங்கிக் கொண்டிருந்த சன்மதி திடீரென்று எழுந்து மின்னலை பார்த்தபொழுது திடீரென்று கண் பார்வை மங்கியது சன்மதியை உடனடியாக இவரது தாயார் மற்றும் உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சன்மதியை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனாலும் மின்னல் ஒளியின் காரணமாக பார்வை நரம்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்....!