Theekkathir Puducherry

Theekkathir Puducherry Official page of Theekkathir News Puducherry

10/05/2025
காரைக்கால் NIT
01/04/2025

காரைக்கால் NIT

காரைக்கால் திருநள்ளாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கிளை மாநாடு 27.09.2024  நடைபெற்றது.கட்சி கொடியை மூத்த தோ...
28/09/2024

காரைக்கால் திருநள்ளாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கிளை மாநாடு 27.09.2024 நடைபெற்றது.

கட்சி கொடியை மூத்த தோழர் N.ராமர் ஏற்றி வைத்தார். மாநாட்டு தலைமை தோழர் T. அடைக்கலசாமி
வரவேற்புரை தோழர் M.தனசேகரன் மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர்
தோழர் S.M.தமீம் பேசினார். கிளைச் செயலாளர் தோழர் K.பிரேம்குமார் நடைபெற்ற பணிகள் குறித்த வேலை அறிக்கை முன்மொழிந்தார். தோழர்களின் விவாதத்திற்கு பிறகு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தீர்மானங்கள் முன்மொழிந்து மூத்த
தோழர் வே.கு.நிலவழகன் பேசினார் . மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாநில குழு தோழர் அ.வின்சென்ட் மற்றும் மூத்த தோழர் N.M.கலியபெருமாள்
பேசினார்கள்.மீண்டும் செயலாளராக தோழர் K.பிரேம்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநில செயற்குழு தோழர் த.தமிழ்ச்செல்வன் பேசினார். நன்றியுரை தோழர் C.மகிமைதாஸ் கூறினார்.

#மின்துறையைவிற்காதே #புதுச்சேரியைஅழிக்காதே #திருநள்ளாறு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருமலைநாயன்பட்டினம்(TR பட்டினம்) பகுதியில் உள்ள ஐந்து கிராம பஞ்சாயத்தை சார்ந...
25/08/2024

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருமலைநாயன்பட்டினம்
(TR பட்டினம்) பகுதியில் உள்ள ஐந்து கிராம பஞ்சாயத்தை சார்ந்த 100 நாள் பயனாளிகள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து 100 நாள் வேலை செய்து 3 மாதம் கடந்தும் சம்பளம் வழங்காத BDO அதிகாரியை கண்டித்து பேரணியாக வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு தோழர் தமிழரசி தலைமை தாங்கினார் .

போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் அ.வின்சென்ட் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்
தோழர் த. தமிழ்ச்செல்வன் மாநில பொருளாளர் வழக்கறிஞர் தோழர்
மா. தக்ஷிணாமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர்
தோழர் எஸ் .எம் .தமீம் விவசாய சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் பழனிவேலு மாநில குழு உறுப்பினர் துரைசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் பிரேம்குமார் தோழர் ராஜேந்திரன் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மகிமை தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட 100 நாள் பயனாளிகள் கலந்து கொண்டனர். BDO அலுவலகத்தில் இருந்து உதவிபொறியாளர் அவர்கள் போராட்ட களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் இன்னும் 15 தினங்களில் அனைவருக்கும் சம்பளத்தை வழங்குகிறோம் .என்று உறுதி அளித்தின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

#100வேலை #விவசாயதொழிலாளர்கள் #புதுச்சேரி #கிராமபுறதொழிலாளர்கள்

புதுச்சேரி செய்திகள் உணவு உரிமை பாதுகாப்பு,மது- போதை எதிர்ப்பு மாநாடு மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி வணக்கம்...
18/07/2024

புதுச்சேரி செய்திகள்

உணவு உரிமை பாதுகாப்பு,
மது- போதை எதிர்ப்பு மாநாடு மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

வணக்கம்!!
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கிட கோரி மக்களை வஞ்சிக்கும் என். ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசிடம் கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டங்களை நமது கட்சி நடத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ரேஷன் கடை கோரிக்கை பொதுமக்களின் கோரிக்கையாக பிரதிபலிக்க நமது போராட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தது. இதனால் தற்போது முதலமைச்சர் விரைவில் ரேஷன் கடைகளை திறப்போம் என்று கூறுகிறார். ஆனால் எப்பொழுது என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில் உணவு உரிமைக்கான இந்த சிறப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

புதுவையில் எப்போதும் இல்லாத வகையில் மது வணிகம் தீவிரம் அடைந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் நிம்மதி இழந்து காணப்படுகிறது.

இளம் வயதில் கணவனை இழந்த தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இளைஞர்களை, மாணவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்கள் பலர் தவறான திசை வழிக்குத தள்ளப்படுகிறார்கள். இளைஞர்கள் சுய சிந்தனை இன்றி இருப்பது தங்களுக்கு தேவை என்கிற முறையில் ஆட்சியாளர்கள் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். ஆகவே இளைஞர்களை சிந்திக்க வைக்க போதை ஒழிப்பு என்கிற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது .

இந்த இரண்டு அம்சங்களை முன்வைத்து இன்று 18.07.2024 மாலை5.30 மணிக்கு நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில் நமது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் உ வாசுகி அவர்கள்பங்கேற்க உள்ளார்.

எனவே புதுச்சேரி மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு மாநாட்டில் நாட்டில் பங்கேற்க உங்களை அன்போடு அழைக்கிறோம். தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சந்தா அளிக்கும் தோழர்கள் மேடையில் வழங்கலாம்..

நன்றி
தோழமையுடன்
இரா.இராஜாங்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி.

#ஜூலை18 #சிபிஎம் #மார்க்சிஸ்ட் #கம்யூனிஸ்ட்

புதுச்சேரி N.R, பா.ஜ.க கூட்டணி அரசே! மாவட்ட காவல் நிர்வாகமே!பொதுமக்களை அலைகழிக்கும் திருநள்ளார் காவல்நிலைய உதவி ஆய்வாளர்...
28/06/2024

புதுச்சேரி N.R, பா.ஜ.க கூட்டணி அரசே! மாவட்ட காவல் நிர்வாகமே!

பொதுமக்களை அலைகழிக்கும் திருநள்ளார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ASI செந்தில்குமரன் மீது நடவடிக்கை எடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருநள்ளார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (ASI) பணிபுரிந்து வரும் R.செந்தில்குமரன் (HC2349) என்பவர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தால் புகாரை பெறுவதற்கு மாறாக, பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில். நான் ஒன்றும் வேலை செய்யவில்லை. எனக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோலி வாட்டர் ரமேஷ் அவர்களிடத்தில்தான் நான் சம்பளம் வாங்கி வருகின்றேன் என்று மார்தட்டி கூறும் ASI செந்தில்குமரனிடத்தில் எப்படி நியாயம் கிடைக்கும்?

சமீபகாலமாகவே திருநள்ளார் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தால் அந்த மனு காணாமல் போவது என்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது. அதன் மர்மம் என்ன? காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று கூறுவது எதற்காக? பொதுமக்களுக்கு சேவையாற்றுவதுதான் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இதனை மறந்து ASI செந்தில்குமரன் போன்ற சிலகருப்பு ஆடுகளால் காவல்துறைக்கும். பொதுமக்களுக்கும் களங்கம் ஏற்பட்டு வருகின்றது.

திருநள்ளார் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கவில்லையென்று கூறமுடியுமா? இதனை தடுக்க வேண்டிய மாவட்ட காவல் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்றால் பொதுமக்களிடத்தில் எப்படி நம்பிக்கை பெறுவார்கள்? பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு லஞ்சம் கொத்தால்தான் ரசீது வழங்கப்படுகிறது என்ற கொள்கை முடிவினை மாற்ற வேண்டும்.

எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்களை அலட்சியப்படுத்துவது, அலையவிடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ASI செந்தில்குமரன் மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்திற்கு
தலைமை தோழர் S.M. தமீம்
காரைக்கால் வட்டச் செயலாளர்.
கண்டன உரை
தோழர் த.தமிழ்ச்செல்வன்
புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் .
தோழர்கள் A. வின்சென்ட்
G. துரைசாமி மாநில குழு உறுப்பினர்கள்.
காரைக்கால் வட்டக்குழு தோழர்கள் பிரேம்குமார் ராஜேந்திரன் பால்ராஜ் பழனிவேல் பிரகாஷ்
மூத்த தோழர்கள்
N.M.கலியபெருமாள்
வே.கு.நிலவழகன் ராமர்
திவ்வியநாதன் ராதாகிருஷ்ணன்
உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்து கொண்டனர்.

#காரைக்கால் #காவல்துறை #திருநள்ளார் #புதுச்சேரி

தமிழகத்தில் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் நாளேடான தீக்கதிர் தினசரி நாளிதழ்க்கு   வரும் ஜூலை 1 – 10  வரை சிறப்பு சந்தா ...
25/06/2024

தமிழகத்தில் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் நாளேடான தீக்கதிர் தினசரி நாளிதழ்க்கு வரும் ஜூலை 1 – 10 வரை சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மக்களுக்கான செய்திதாளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.


#செய்தி #நாளேடு #தீக்கதிர் #பத்திரிக்கை

தேர்தலில் தோல்வி அடைந்தும் திருந்தாத புதுச்சேரி இரட்டை எஞ்சின் ஆட்சி. மின் துறையை தனியார்மய  நடவடிக்கையை கைவிடாத அதே நேர...
15/06/2024

தேர்தலில் தோல்வி அடைந்தும் திருந்தாத புதுச்சேரி இரட்டை எஞ்சின் ஆட்சி.

மின் துறையை தனியார்மய நடவடிக்கையை கைவிடாத அதே நேரத்தில் மின்கட்டணத்தை பல மடங்கு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கும் புதுச்சேரி என். ஆர் காங்கிரஸ் - பாஜக மக்கள் வருவதை ஆட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டம்.

உயர்த்தப்பட்ட அநியாய மின் கட்டணத்தை திரும்ப பெறு.
மின்துறையை படிப்படியாக அழித்து தனியாருக்கு விற்பனை செய்ய துடிக்கும் எண்ணத்தை கைவிடு.

#பாண்டிச்சேரி #மின்துறையைஅழிக்காதே

தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு நாள் கருத்தரங்கம்நாள்: 21-01-2024 மாலை 4.30 இடம் : CPI (M) அலுவலகம் அஜீஸ் நகர், ரெட்டியார...
20/01/2024

தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

நாள்: 21-01-2024 மாலை 4.30
இடம் : CPI (M) அலுவலகம் அஜீஸ் நகர், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி

தலைமை :
தோழர். N.கொளஞ்சியப்பன்
முன்னிலை :
தோழர்கள்.
R. அன்புமணி, P. சரவணன், S.ராமமூர்த்தி, R.M. ராம்ஜி

வரவேற்புரை : தோழர். M.P. மதிவாணன்

'லெனினும் - புரட்சிகர கட்சியும்'
தோழர். அன்வர் உசேன்,
தோழர்கள். V. பெருமாள், R.ராஜாங்கம்

நன்றியுரை:
தோழர். முனியம்மாள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி.

உலகம் முதல் உள்ளூர் வரை  அரசியல் தெளிவு பெற..!தினமும் படியுங்கள் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு நடைபெறுகிறது..!  #செய்...
04/01/2024

உலகம் முதல் உள்ளூர் வரை அரசியல் தெளிவு பெற..!
தினமும் படியுங்கள்
தீக்கதிர் நாளிதழ்
சந்தா சேர்ப்பு நடைபெறுகிறது..! #செய்தி #நாளேடு #தீக்கதிர்

மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது? - ஹரிலால் நாத்தமிழில்: ஞா.சதிஸ்வரன்வெளியீடு: தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம...
30/12/2023

மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது? - ஹரிலால் நாத்

தமிழில்: ஞா.சதிஸ்வரன்
வெளியீடு: தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம்

ஆய்வெனும் பெயரிலான அவதூறுகளுக்கு பதிலடி

புத்தகம் வாங்க 👇👇

Journalist Harilal Nath has found the answer to this question. Written with painstaking evidence, this book will surely give the readers a proper understanding of the events of the day.

Address

Pondicherry
605001

Alerts

Be the first to know and let us send you an email when Theekkathir Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Theekkathir Puducherry:

Share