பொன்னேரி செய்திகள்

பொன்னேரி செய்திகள் Welcome to பொன்னேரி செய்திகள், The latest news and updates about Ponneri. Join our community and never miss out on what's happening in Ponneri!

Stay informed with daily updates on local events, community highlights, and important announcements.

19/07/2025
நாளை மின்தடைபொன்னேரி துணைமின் நிலையத் தில் நாளை 19/07/2025 (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உ...
18/07/2025

நாளை மின்தடை

பொன்னேரி துணைமின் நிலையத் தில் நாளை 19/07/2025 (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவல்பட்டிநகர், பொன்னேரி டி.வி.பாடி, பாலாஜிநகர், பெரியகாவனம், சின்னகாவனம், உப்பளம், பரிக்கப்பட்டு, மூகாம்பிகைநகர், என்.ஜி.ஒ. நகர், திருவேங்கடபுரம், சக்திநகர், அனுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, தடம்பெரும்பாக்கம், மேட்டுப்பா ளையம், இளவம்பேடு, ஆலாடு, கொளத்தூர், பெரும்பேடு, கம்மவார்பாளையம், மடிமைகண்டிகை, வேண்பாக்கம், கொக்குமேடு, கந்தன்பாளையம், முறிச்சம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

வழக்கம்போல கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் சில புறநகர் இரயில்கள் ரத்து...
17/07/2025

வழக்கம்போல கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் சில புறநகர் இரயில்கள் ரத்து...

கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு:கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் புறநகர ரயில்கள் தாமதம்....
16/07/2025

கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு:
கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் புறநகர ரயில்கள் தாமதம். சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மாலை 3:40 மணிக்கு பொன்னேரியில் இருந்து திருவள்ளூர் புறப்பட்ட ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை மாலை 5:30 மணிக்கு சென்றடைந்தது, இன்னும் அங்கேயேதான் நிற்கிறது. அடுத்தடுத்த நான்கு இரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கத்தில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்பொன்னேரி நகராட்சியில் விடுபட்ட புதிதாக சேர்க்க வேண்டிய அனைத்து குடும்பத் தலைவிகளும் வர...
14/07/2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
பொன்னேரி நகராட்சியில் விடுபட்ட புதிதாக சேர்க்க வேண்டிய அனைத்து குடும்பத் தலைவிகளும் வருகின்ற
*24-07-2025* வியாழக்கிழமை அன்று *NVR* மண்டபத்திலும்,
*25-07-2025* வெள்ளிக்கிழமை அன்று *சங்கரபாண்டியன்* மண்டபத்திலும்,
*29-07-2025* செவ்வாய்க்கிழமை அன்று *தீபன்* மண்டபத்திலும்,
*30-07-2025* புதன் கிழமை அன்று *சங்கரபாண்டியன்* மண்டபத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால் மக்கள் இந்த முகாமில் தவறாமல் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பெற்று பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.

02/07/2025

பொன்னேரி: மாலை 5:40 முதல் மழை பெய்து வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, தற்போது மழை பெய்து வருகிறது.

20/06/2025

பொன்னேரி SBI வங்கி எதிரில் கடந்த நான்கு நாட்களாக சாக்கடை நிரம்பி வழிகிறது. இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொன்னேரி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.

20/06/2025

பொன்னேரி அண்ணா சிலை அருகில் விபத்துக்குள்ளான கனரக வாகனம்...

17/06/2025

பொன்னேரி: சாக்கடை நிரம்பி வழிகிறது.

பொன்னேரி SBI வங்கிக்கு எதிரில் இருக்கும் சாக்கடை பல இடங்களில் நிரம்பி வழிகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது.

Address

Ponneri

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொன்னேரி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பொன்னேரி செய்திகள்:

Share

Category