பொன்னமராவதி செய்திகள்

பொன்னமராவதி செய்திகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பொன்னமராவதி செய்திகள், News & Media Website, PONNAMARAVATHY PUDUKOTTAI-DIST, TAMILNADU, Pudukkottai.
(1)

பொன்னமராவதி செய்திகள்
[email protected]
தங்களது ஊர் செய்திகளை உடனுக்குடன் செய்திகள் சேகரித்து வழங்குவதும் பொது நலன் கருதி மக்களுக்கான விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்வதே மக்களுக்கான சேவை! இப்பகுதி மக்களுக்காக இந்த ஒரு நல்ல ஒரு சேவையை செய்து வருகிறோம் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து இன்னும் அதிக அளவில் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

பொன்னமராவதி செய்திகள்

06/09/2025

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பான்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது-முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததாலும் காவல்துறை அலட்சியத்தினால் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்

நன்றி- சிவராமகிருஷ்ணன்

05/09/2025
வருகின்ற 09/09/2025 தேதி கொன்னையூர் மற்றும் நகரப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக மின் வினியோகம் இர...
04/09/2025

வருகின்ற 09/09/2025 தேதி கொன்னையூர் மற்றும் நகரப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக மின் வினியோகம் இருக்காது

02/09/2025

நீயா நானா கடுமையான விவாதத்தின்போது, எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல், ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் தனது உயிரை லாவகமாக பாதுகாத்துக்கொண்டார் நீயா நானா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத். நேற்றைய விவாத நிகழ்ச்சியின்போது, கோபிநாத் தனது புத்திசாலித்தனத்தாலும், சமயோசிதத்தாலும், எந்தவொரு ஆபத்துமின்றி தன்னை பாதுகாத்துக்கொண்டார். இந்தச் செயல் பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

02/09/2025

பொன்னமராவதி தீயணைப்புத் துறை சார்பில் நீர்நிலைகளில் சிக்கி தவிப்பவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்த போலி ஒத்தியை பயிற்சி.

எதிர்வரும் பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது மேலும் நீர்நிலை மற்றும் வெள்ளங்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக பொன்னமராவதி வருவாய் வட்டாட்சியர் சாந்தா அவர்கள் தலைமையில் பொன்னமராவதி தாலுகா வலையப்பட்டி அடைக்கண் ஊரணியில் பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது ... மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்து தீயணைப்புத்துறை அலுவலர் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டு அறிந்தனர்..

நன்றி-செய்தியாளர் அழகு இளையராஜா

இன்று கோவிலாபட்டியில் கோர விபத்து..  குழந்தைகள் உட்பட இரண்டு பேர் பலி..   #சிவகங்கை மாவட்டம்  #திருப்பத்தூர்  #சிங்கம்பு...
02/09/2025

இன்று கோவிலாபட்டியில் கோர விபத்து.. குழந்தைகள் உட்பட இரண்டு பேர் பலி..

#சிவகங்கை மாவட்டம் #திருப்பத்தூர் #சிங்கம்புணரி #பொன்னமராவதி விலக்கு பிரிவு சாலையில் உள்ள #கோவிலாபட்டி விலக்கில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனங்களும் மோதி கொண்ட விபத்து..

பலி எண்ணிக்கை இரண்டு. பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் விசாரணை..

02/09/2025

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வாசலை முற்றுகையிட்ட விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் அகில இந்திய விவசாயிகள் மகா சபை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் இணைந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சத்தியமூர்த்தி சாலை வழியாக மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றனர்

ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் அனைவரையும் உள்ளே அனுப்புவதற்கு அனுமதி இல்லை ஐந்து நபர்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறினர் போராட்டக்காரர்கள் அனைவரும் உள்ளே செல்வோம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதற்குப் பிறகு அனைவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர்

மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு திருமயத்தில் 21.09.2025 அன்றுநடைபெற உள்ள மாட்டுவண்டி எல்கைப...
02/09/2025

மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு திருமயத்தில் 21.09.2025 அன்றுநடைபெற உள்ள மாட்டுவண்டி எல்கைப்பந்தயம்

திருமயம் தொகுதி காங்கிரஸ்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

02/09/2025

இந்த பஸ் பயணம் 🤣🤣🤣

31/08/2025

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் கோலாகலம்

நன்றி- palaniyandimurugesan

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் கோலாகலம்புதுக்கோட்டை மாவ...
31/08/2025

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் கோலாகலம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், அம்மன்குறிச்சி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டைத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரட்டைத் தேரோட்டத்தில், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் என இரண்டு தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திருவிழாவையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு,தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இந்தத் தேரோட்டமானது, அம்மன்குறிச்சி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
இந்த திருவிழா, அம்மன்குறிச்சி மற்றும் ஆலவயல் சுற்றியுள்ள கிராம மக்களின் பாரம்பரியப் பெருமையையும், சமய நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.

Address

PONNAMARAVATHY PUDUKOTTAI-DIST, TAMILNADU
Pudukkottai
622407

Alerts

Be the first to know and let us send you an email when பொன்னமராவதி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பொன்னமராவதி செய்திகள்:

Share