23/10/2025
📌♦️🚆அகமதாபாத் - திருச்சி ரயில் முன்மொழிவு படி புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை இயங்குமா?
கடந்த 2022 IRTTC ஆண்டு கூட்டத்தில் அகமதாபாத் - ராமேஸ்வரம் இடையே புனே, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக புதிய வாரந்திர ரயில் ஒன்று மேற்கு ரயில்வே மண்டலத்தால் முன்மொழிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. அப்போதைய சூழலில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாகவும், Secondary Maintenance செய்ய ராமேஸ்வரம் ரயில் நிலைய 2வது பிட் லைன் பழுது காரணமாகவும், அதே ஆண்டில் இந்த ரயில் 09419/20 அகமதாபாத் - திருச்சி இடையே புனே, ரேணிகுண்டா, பெரம்பூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இவ்வாறு இயங்கிவருகிறது. பாம்பன் பாலம் திறக்கப்பட்டப்பின் இந்த ரயில் ராமேஸ்வரத்திற்கு நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
சமீபத்தில் மேற்கு ரயில்வே மண்டலம் அந்த ரயில் ராமேஸ்வரம் நீடிக்க முன்மொழிவு செய்திருந்தும் தென்னக ரயில்வே அதனை நிராகரித்ததாக குறிப்பிடுகிறது.
திருச்சி - மானாமதுரை இடைப்பட்ட காரைக்குடி, புதுக்கோட்டை சிவகங்கை, போன்ற ரயில் நிலையங்களுக்கு திருப்பதி மற்றும் மும்பை, அகமதாபாத் செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது என்பதால் முன்மொழிவுபடி அகமதாபாத் - திருச்சி இடையே இயங்கும் ரயிலை புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.
மேலும் முன்மொழிவு படி இந்த வண்டியை சென்னை எழும்பூர் வழியாக இல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி - ரேணிகுண்டா வழியாக பாதை மாற்றி இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக உள்ளது.
Durai Vaiko
Pudukkottai Railways
எம்.எம்.அப்துல்லா M M Abdulla