கறம்பக்குடி இணையதளம்

கறம்பக்குடி இணையதளம் People heart I love my Karambakkudi

கறம்பக்குடி அருகே நெய்வேலியில் வெடிவிபத்தில் ரியாஸ் மற்றும் ராஜேந்திரன் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
18/05/2025

கறம்பக்குடி அருகே
நெய்வேலியில் வெடிவிபத்தில்
ரியாஸ் மற்றும்
ராஜேந்திரன் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கறம்பக்குடி - திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுகந்த பரமளேஸ்வரர் கோயிலில் ந...
27/04/2025

கறம்பக்குடி - திருமணஞ்சேரியில்

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுகந்த பரமளேஸ்வரர் கோயிலில் நள்ளிரவில் பூட்டப்பட்ட கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி, சுதாரித்துக் கொண்ட பூசாரி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம், கோயில் வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றதால் பரபரப்பு
காவல்துறையினர் விசாரணை!

கறம்பக்குடி ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக இன்று (7.04.2025)  வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர...
07/04/2025

கறம்பக்குடி ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக இன்று (7.04.2025) வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோருடன் தோழர் திரு. Selvaraj அவர்களும் கலந்துகொண்டு
வக்ஃப் மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கறம்பக்குடி- மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ்(20) என்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை. உறவினர்கள் சாலை மறியல்.
04/04/2025

கறம்பக்குடி- மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ்(20) என்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை.

உறவினர்கள் சாலை மறியல்.

28/02/2025

கறம்பக்குடி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த மாணவி தன் தந்தையின் இறப்பு குறித்த நிலையை பேசும் போது அன்று கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் அவலநிலை ..

இன்று 2025 ம் வருடம் இன்னும் தொடர்கிறது.

இந்த மாணவி தன் தந்தை இறந்ததாக கூறும் வருடம் மார்ச் மாதம் 2020..

இந்த மாணவி பேசிய வீடியோ அக்டோபர் 2023..
எவ்வளவோ போராட்டங்கள் !

கறம்பக்குடி மருத்துவமனை குறித்து சட்டமன்றத்தில் விவாதம் !

மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சரின் உறுதிமொழியை நம்பி கைவிடப்பட்ட போராட்டங்கள்..
இன்றளவும் நடந்த போராட்டங்கள் என எதற்குமே மதிப்பில்லாத நிலை வேதனைக்குரியது..

இந்த இலட்சணத்தில்

கறம்பக்குடி தி .மு .க வின் கோட்டை 😏😏👎

17/02/2025

கறம்பக்குடி- சுக்கிரன் விடுதி

தண்ணீர் பாட்டில் வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் கடைக்காரரை தாக்கியும் கடையை சூரையாடிய நபர்கள்

காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Courtesy - NewsTamil 24x7

11/02/2025

மெரினா பேஷன்ஸ்
வாணியத் தெரு
கறம்பக்குடி 💐💐💐💐

28/12/2024

நிச்சயமாக நீதி வேண்டும் ..

கறம்பக்குடி கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த புதுக்கோட்டையில் செவிலியருக்கு படித்து கொண்டிருந்த சௌமியா என்ற கல்லூரி மாணவி மூன்று நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ரோட்டில் பொது மக்களால் நீதி கேட்டு ஆர்பாட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது

மர்மமான முறையில் இறந்த நர்சிங் மாணவிக்கு நீதியை பெற்று தரவேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக்கொள்கின்றோம்..

புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் மற்றும் மேயர் அவர்களின் கணவருமான  ஆ.செந்தில் அவர்கள்  இயற்கை எய்தினார் என்ற செய்தி மனவ...
23/12/2024

புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் மற்றும் மேயர் அவர்களின் கணவருமான ஆ.செந்தில் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ..
🙏🏾💐

கறம்பக்குடியில்‌ செயல்பட்டு வரும்‌   தீயணைப்பு நிலையத்தை வேறுபகுதிக்குமாற்றக்‌ கூடாது என பொதுமக்கள்‌கோரிக்கை..கறம்பக்குட...
12/12/2024

கறம்பக்குடியில்‌ செயல்பட்டு வரும்‌
தீயணைப்பு நிலையத்தை வேறுபகுதிக்கு
மாற்றக்‌ கூடாது என பொதுமக்கள்‌
கோரிக்கை..

கறம்பக்குடி தாலுகாவில் ‌39 ஊராட்சிகள்‌ மற்றும்‌
கறம்பக்குடி பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சில கிராமங்களும் அடங்கிய
பகுதியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த
20 அண்டுகளாக செயல்பட்டு வரும்
தீயணைப்பு நிலையத்தை இடவசதியை காரணம் காட்டி வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியை அரசு கைவிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது…

பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில்‌ தற்போது தீயணைப்பு நிலைய அலுவலகம்‌ செயல்பட்டு
வருகிறது. இங்கு தீயணைப்பு அலுவலர்‌
தீயணைப்பு மற்றும்‌ மீட்பு பணி
வீரர்கள்‌ என 13 பேர் பணியாற்றி வருகின்றனர்‌.
மீட்பு நடவடிக்கைகளில்‌ ஈடுபட
கறம்பக்குடி தாலுகாவில்‌ உள்ள அனைத்து
கிராமங்களின்‌ மையப்‌ பகுதியில்‌ கறம்பக்குடி
உள்ளதால்‌ தீ விபத்து உள்ளிட்ட அசம்பா
வித சம்பவங்கள்‌ நடைபெறும்‌ போது
விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில்‌
ஈடுபட வசதியாக இருக்கும் . அப்படி இடம் மாற்றப்பட்டால் தீயணைப்பு வீரர்கள்‌ பெரும்‌ சேவையை உரிய நேரத்தில்‌ பெற முடியாத நிலை உள்ளது.
எனவே அனைத்து ஊராட்சி மக்களும்‌
பயன்பெறும்‌ வகையில்‌ தீயணைப்பு நிலை
யத்தை இடம்‌ மாற்றாமல்‌ கறம்பக்குடியி
லேயே செயல்பட வேண்டும்‌ என பொது
மக்கள்‌ கோரிக்கை விடுத்து உள்ளனர்‌.

இதுபற்றி கறம்பக்குடி நகர பகுதி மக்கள்‌
ஏற்கனவே இடவசதியை காரணம்‌ காட்டி
அரசு கல்லூரி, குழந்தைகள்‌
வளர்ச்சிதிட்ட அலுவலகம்‌ , மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை
வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்‌டதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் .

கறம்பக்குடிபுளியஞ்சோலை பகுதியைச்‌ சேர்ந்தவர்‌ மைகூர்‌ரகுமான்‌ அவரது மனைவி ஜகுபர்‌ நிஷா (23).இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந...
06/12/2024

கறம்பக்குடி
புளியஞ்சோலை பகுதியைச்‌ சேர்ந்தவர்‌ மைகூர்‌
ரகுமான்‌ அவரது மனைவி ஜகுபர்‌ நிஷா (23).

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில்‌
பிறந்து 45 நாட்களான கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.
மைகூர்‌ ரகுமான்‌ தனது
உறவினர்‌ ஒருவரின் கடையில்‌ வேலை செய்து வருகிறார்‌.
இந்நிலையில்‌ நேற்று இரவு 9.30 க்கு மேல்‌ ஜகுபர்‌ நிஷா
வீட்டிலன் அருகில் இருந்து முனகல்‌ சத்தம்‌ கேட்டஅக்கம்‌
பக்கத்தினர்‌ சென்று பார்த்த போது ஜகுபர்‌ நிஷா
இடூப்பிற்கு மேலே 3 இடங்களுக்கு மேல்‌ கத்திக்குத்து
காயங்களுடன்‌ ரத்த வெள்ளத்தில்‌ உயிருக்குப்‌
போராட்டிக்‌ கொண்டிருப்பதைப்‌ பார்த்து அவரை
மருத்துவமனைக்கு தூக்கிச்‌ சென்றனர்‌. ஆனால்‌ ஜகுபர்‌
நிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து கறம்பக்குடி போலீசார்‌ சம்பவ இடத்திற்கு
வந்துள்ளனர்‌. தனியாக வீட்டில்‌ இருந்த பெண்ணை
கத்தியால்‌ குத்திக்‌ கொன்று விட்டு தப்பிச்‌ சென்றது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
இளம்பெண்‌ கத்தியால்‌ குத்திக்‌ கொல்லப்பட்ட சம்பவம்‌ கறம்பக்குடியில் பெரும்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

04/12/2024

கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது .
தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் கறம்பக்குடி நகர பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

ஒரு சிறுவனை வெறிநாய் கடிக்கும் காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

Address

Karambakkudi Inayathalam
Pudukkottai
622302

Website

Alerts

Be the first to know and let us send you an email when கறம்பக்குடி இணையதளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கறம்பக்குடி இணையதளம்:

Share