10/03/2023
#அயோத்தி #சசிகுமார்
#மாபெரும் வெற்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிக்குமார் அவர்களின் ஒரு சிறந்த படம் அல்ல பாடம்...
அயோத்தியிலிருந்து தீபாவளியன்று புனித யாத்திரையாக தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் வருகிறார் ஒருவர். மதுரை டு ராமேஸ்வரம் டாக்ஸி பயணத்தின்போது அவரின் பொறுப்பில்லாத தனத்தால் பெரும் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் அவரின் மனைவி இறந்துவிட, மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கிறது குடும்பம்.
மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். தன் நண்பர்களின் ஆதரவுடன் சசிகுமார் அந்தக் குடும்பத்துக்கு எப்படி உதவுகிறார், அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் என்ன , பொது மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சட்டம் சமயத்தில் எளியவனை எப்படியெல்லாம் நொருக்குகிறது, ஒரு சூழல் மனுதனை எப்படி மாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதைய
சசிக்குமாருக்கு அளவெடுத்து செய்தது போலவே ஒரு பாத்திரம். வேறு ஒரு நாயகனாக இருந்திருந்தால் அவரின் உதவும் குணத்திற்கு என்று பல காட்சிகள் வைத்திருக்க வேண்டும்... ஆனால் இவருக்கு தான் அது தேவையே இல்லையே... நட்பு, காதல் , துரோகம் என பாத்திரங்களை தேர்வு செய்து கொண்டிருந்த சசிக்குமார்.... மனிதத்தை கையிலெடுத்தது அவருக்கு கைகொடுத்துள்ளது.. நாயக பிம்பம் இல்லாமல் யதார்த்தமாக செல்வதே அவருடன் நம்மை ஒன்ற வைக்கிறது...
நாயகியாக வருபவர் செம்மையாக நடித்துள்ளார் .. கை கூப்பி சசிக்குமாரிடம் உதவி கேட்கும் காட்சியாகட்டும், தந்தையின் ஒடுக்குமுறையை எதிர்த்து வெடிக்கும் காட்சியாகட்டும், தாயைக் கண்டு கதறுவதும், தம்பியை அணைப்பதாகட்டும் அனைத்தும் கச்சிதம்...
ஒரு வில்லத்தனம் கலந்த மனிதனாக தந்தை பாத்திரத்தில் வருபவர்... நமக்கே அவரைப் பார்த்ததும் வரும் வெறுப்பின் மூலம்.... அவரின் நடிப்பு வெற்றி பெற்றுள்ளது..
புகழ் காமெடி என்றில்லாமல் ஒரு நல்ல பாத்திரம். இப்படியே போனால் கூட சிறந்த நிலையை அடையலாம் போல...
தம்பியாக வரும் சிறுவன் , தாயாக வருபவர், போஸ் வெங்கட் உட்பட அனைவரும் சிறந்த நடிப்பையே கொடுத்துள்ளனர்...
என்.ஆர். ரகுனந்தனின் இசையில் "காற்றோடு பட்டம்போலே" உருக வைத்த பாடல், பின்னணி இசை கதையோடு இணைகிறது ... ஒளிப்பதிவாளர் தேவையான அளவிற்க்கு கொடுக்க, எடிட்டர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பர பர தொகுப்பை கொடுத்துத்துள்ளார்...
அயோத்தி இது மனிதம் பற்றிய எமோஷனல் படமாக மாற்றியதிலேயே இயக்குனரின் முத்திரை தெரிகிறது... எளிய மக்களின் போராட்டம், அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள், அதை கடந்து நிற்கும் மனிதம் என மனுசன் கண்கலங்க வைத்து அனுப்புகிறார்... இயக்குனருக்கு நிச்சயம் ஒரு எதிர்காலம் உண்டு..
அயோத்தி -
மனிதத்தை கற்றுக்கொடுக்கும் ஒரு படம் 👌👌👌
ராதை மீடியா