08/10/2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் மற்றும் தோட்டப்பயிர் சாகுபடிக்கு நீரை சிக்கனமாக பயன்படுத்த குறு, சிறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் திட்டத்தில் 100 சதவீதம் மானியம் பெற வேளாண் தோட்டக்கலை துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய் மற்றும் தோட்டப்பயிர் போன்ற சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் கிணறு மற்றும் போர்வெல் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்தி விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் லாபம் பெற நுண்ணீர் பாசனம் பயன்படுத்த வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நுண்ணீர் பாசன திட்டத்தில் இரண்டு முறைகள் உள்ளன. இதில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய இரண்டு முறைகள் உள்ளன.
இந்த நுண்ணீர் பாசனம் அமைக்க பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
இதில் விண்ணப்பித்து பயன்பெற ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, போட்டோ, சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், சிறு, குறு விவசாயிக்கான சான்று ஆகியவற்றுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் சென்று விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.