Tamil Movies World

Tamil Movies World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Movies World, Video Creator, chennai, Ramapuram.

Tamil lady Odia culture 😊😊
Cooking short comedy video valagi 😊😊 சமையல் ஒடிசா பத்தி தெரிஞ்சுக்கலாம் ஒடிசா சமையல் பிளாக்ஸ் காமெடி ஷார்ட்ஸ் ஒடிசா. கல்ச்சர் ட்ரெடிஷனல் ஒடிசா பத்தி தெரிஞ்சிக்கலாம்

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!♥உலகத்தி...
30/03/2025

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -

கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

♥உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

♥வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

♥உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

♥முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்

♥இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

சாப்பிட்டு முடியும் வரை குறை சொல்லாத கணவனும் ,சாப்பாடு முடியும் வரை கேட்பதற்கு முன்னரே அனைத்துமே எடுத்துக்கொடுக்கும் மனை...
30/03/2025

சாப்பிட்டு முடியும் வரை குறை சொல்லாத கணவனும் ,

சாப்பாடு முடியும் வரை கேட்பதற்கு முன்னரே அனைத்துமே எடுத்துக்கொடுக்கும் மனைவியும் கூட நல்ல உதாரணம் தான் ,வள்ளுவர்,வாசுகி போல் .

எனக்கு தெரிந்து ஒரு ஜோடி இருந்தார்கள்.ரொம்ப உன்னதமாக .இதோ !!

அக்கிரகாரத்தில் குடியிருக்கும் பொழுது நண்பரின் அப்பாவும், அம்மாவும்.

கீழும் ,மேலுமாக வீடு .நண்பனின் உடன்பிறந்தவர்கள் நான்கைந்து சகோதரிகள். மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் அவர்களின் குழந்தைகள் எல்லாமே நண்பரின் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.

மாடி முழுவதும் அல்லோலகல்லோலம். பொருளாதாரம், வியாபாரம், அடுத்து எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் கலந்துகட்டி ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த நேரம் தாத்தா, மற்றும் பாட்டியின் பழைய ஞாபகங்களை தாத்தா பேரக் குழந்தைகளுக்கு சொல்வார்.

அதை கேட்கும் பொழுது அந்த வயதிலும் பாட்டியின் முகமும் சிவந்து விடும். அந்தளவுக்கு வெட்கம் வழிந்தோடும்.

சில மாதங்கள் கழித்து தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லை. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்த்தோம்.

மாலையிலிருந்து நள்ளிரவு வரையிலும்கூட உடன் இருந்தோம். அப்போது சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட பெட்பேன் உபயோகியுங்கள் என்று நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் தாத்தா மறுத்துவிட்டார் .

அட போங்கடா!! நான் கடைசிவரையிலும் இவளை அந்த வேலைக்கு பணிவிடை செய்யுமாறு சொல்ல மாட்டேன், என்றவர் குளுக்கோஸ் டியூப் கையில் எடுத்தவாறு பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேட்டியை நன்றாக இருக்கி கட்டிக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட்டார்.

எங்கள்அனைவரையும் வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.

நாங்கள் தயங்கியபோது

வாழ்வும் நன்றாக இருக்கணும் .

சாவும் நன்றாக இருக்கணும் .

யாரையும் கஷ்டப்படுத்த கூடாது

என்றவாறே படுத்துக்கொண்டார் .

நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதிகாலை 5 மணிக்கு தாத்தா இறந்து விட்டார். நாங்கள் எல்லோரும் அழுதவாறு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாட்டியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை.

பேரன் ,பேத்திகள் ,பிள்ளைகள் அண்டை வீட்டார் அனைவரும் எடுத்துச் சொல்லியும் பாட்டிஅழ மறுத்துவிட்டார்.

நாங்கள் தாத்தாவை சுடுகாட்டிற்கு நல்லடக்கத்திற்கு கொண்டு சென்று விட்டோம்.

மறுநாள் காலை தீ ஆற்றும் காரியம். பால் ஊற்ற வேண்டும், என்று நாங்கள் எல்லாம் தயாராகி, தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை எழுப்புவதற்கு முயன்றோம் .

ஆனால் பாட்டி தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.

ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத பாட்டி, தாத்தாவை ஒருநாள்கூட விட்டு பிரியாமல் அதே 24 மணி நேரத்தில்தாத்தாவுடனேயே சென்றுவிட்டார்.

நிறைய படங்களில் பார்த்தது போல் அல்லாமல் நிஜத்திலும் நான் பார்த்த உண்மை காதல் ஜோடி தாத்தாவும், பாட்டியும் தான்.

சரிதானா ?நான் சொல்றது ?

பெண் என்பவள் போதை அல்ல...நாம் கண்டோ, உண்டோ, களிப்புற..🦚பெண் என்பவள் ஆடை அல்ல,நாம் உடுத்தி, கிழித்து, சேதப்படுத்த...🦚பெண்...
30/03/2025

பெண் என்பவள் போதை அல்ல...
நாம் கண்டோ, உண்டோ, களிப்புற..
🦚
பெண் என்பவள் ஆடை அல்ல,
நாம் உடுத்தி, கிழித்து, சேதப்படுத்த...
🦚
பெண் என்பவள் கண்ணாடி அல்ல..
நம்மையே நாம் அங்கு காண...
🦚
பெண் என்பவள் கொடி கம்பம் அல்ல
நம்மை கொடியாய் உயர்த்த...
🦚
பெண் என்பவள் கனவு அல்ல...
நம் ஆசைகளை மட்டும் காண...
🦚
பெண் என்பவள் வர்ணம் அல்ல...
நம் கொண்டாடங்களுக்கு பூசி மகிழ..
🦚
அப்போ பெண் என்பவள் யார் தான்?????
🦚
பெண்
ஒரு மருந்து , நாம் அன்பிற்கு ஏங்குகையில்....
🦚
பெண்
ஒரு ஊசி , நம் கிழிசல்களை தைத்து அழகாக்கும்....
🦚
பெண்
ஒரு கூரிய கத்தி , நம் தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்...

பெண்
ஒரு கொடி, உயரே பறந்து நம்மை பார்க்க வைப்பாள்...
🦚
பெண்
ஒரு காட்சி, நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்...
🦚
பெண்
ஒரு தூரிகை, நம் வெற்று வாழ்க்கையில், வர்ணம் பூசி,
பின் வர்ணமாகி, நம் கறை பட்டு , கரைந்தே போகிறாள்...
❤️❤️

ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்...
30/03/2025

ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர், இட்லிக்கு 15 பேர், பூரிக்கு 17 பேர், பொங்கலுக்கு 14 பேர் என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக அளிக்கப்பட்டது.

நான் சொல்ல வந்தது....
தேர்தலில் வாக்களிக்கும்போது
சிந்திப்பீர்....

இது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த இன்சிடென்ட், எனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்தாங்க,நல்ல குணம் , அழகாவும் இருந்தார் , ஜாதகம் ...
30/03/2025

இது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த இன்சிடென்ட், எனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்தாங்க,நல்ல குணம் , அழகாவும் இருந்தார் , ஜாதகம் பொருத்தம் இருந்துச்சு. வேலையும் நல்ல வேலை . ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன்..

ஏதேச்சையா அந்த பையனோட அப்பா அம்மாவை ட்ரெயின் ல பாத்தேன். ஏன் மா புடிக்கல சொல்லிட்ட உன்ன நல்லா பாத்துக்குவோம் ஏன் வேணாங்குறனு கேட்டாங்க. நான் பதில் எதுவும் சொல்லாம இல்லைங்க வேற பாருங்க உங்க பையன் மேல குறை ஒன்னும் இல்லனு சொல்லிட்டு கெளம்ப பாத்தேன்.

அவங்க என்ன விடாம , நீங்க காரணம் சொன்னாத்தான் விடுவோம்னு அடம்பிடிச்சுட்டாங்க. அப்றம் தான் சொன்னேன் , உங்க பையன் பேரு தான்ங்க காரணம்னு சொன்னேன்.
அதிர்ச்சில அவங்க என் பையன் பேருக்கு என்ன கொறைச்சல்னு கோவப்பட ஆரம்பிச்சுட்டாங்க. நான் இல்லைங்க உங்க பையன் பேரு 'மது'பாலா .
பெயரளவுல கூட மதுன்ற வார்த்தைய பயன்படுத்தாத கூட்டத்தை சேர்ந்தவங்க நாங்க , இப்ப ஒரு தடவை அந்த பெயரை சொன்னதுக்கே குற்ற உணர்ச்சில ஒரு வாரம் தூக்கம் வராது. உங்க பையனை கட்டிகிட்டு எப்டிங்க தினம் தினம் உச்சரிக்க முடியும். ப்ளிஸ் வேற பொண்ணு பாத்துகிடுங்கனு சொன்னேன்.

அவங்க ரெண்டு பேரும் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுட்டு கெளம்புனாங்க. இனிமேலயாவது பெத்தவங்க பிள்ளைங்களுக்கு பெயர் வைக்குறப்ப எங்களை மாறி டீடோட்டலர்ஸை மனசுல வச்சுகிட்டு பெயரை வைங்க ப்ளிஸ். 🙏

விரக்தியின் உச்சத்தில் எழுதும் இந்தப் பதிவு. யாரும் தயவு செய்து மனம் புண் படும்படி பின்னூட்டம் இட வேண்டாம்.காதலின் புறக்...
30/03/2025

விரக்தியின் உச்சத்தில் எழுதும் இந்தப் பதிவு. யாரும் தயவு செய்து மனம் புண் படும்படி பின்னூட்டம் இட வேண்டாம்.

காதலின் புறக்கணிப்பு இவ்வளவு கொடுமையாக இருக்குமா என்பதை சில நாட்களாக உணர்கிறேன்.

மற்றவர்களை போலவே நாங்களும் சந்தித்தோம். 'சாப்டிங்களா, சாப்டேன்' என பேசத்தொடங்கி 'என்ன பண்ற', 'சும்மா தான் இருக்கேன்' என நகர்ந்து ஒரு கட்டத்தில் 'என்னடி பண்ற', 'செல்லக் குட்டி' 'மாமா' என்கிற அளவுக்கு நெருக்கமானோம்.

சில நாட்களிலேயே பேச்சு அடுத்தக் அத்யாயத்திற்கு நகர்ந்தது. திருமண பயம் சற்றேத் தடுத்தது. இருவரின் வீட்டாருக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ என்கிற அச்சம். ஆனால் இந்தகாலத்தில் காமம் கலந்த காதல் காமன்தானே என்கிற அடிப்படையில் இருவரும் மனதை தேற்றிக்கொண்டு பேசத்தொடங்கினோம். வாழ்க்கை என்றால் என்ன என்பதை இருவரும் உணர்ந்தோம். சாதாரண காதல் புனிதமான காதலாக மாறியது. இருவரும் புரிந்து கொண்டோம்- இனி உனக்கு நான் எனக்கு நீ என்று.

இனிதாக நகர்ந்த வாழ்க்கை என்னை இந்த ஒரு கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம். நன்றாக பேசி வந்தக் காதல் சற்றே என்னை இக்னோர் செய்வதாக உணர்ந்தேன். இரவு இரண்டு மணி ஆனாலும் இன்பமாக பேசிய காதல் இப்போது நண்பகல் 2 மணிக்கு கால் செய்தாலும் நான்கு மணிக்கே பதில் தந்தது. அதுவும் ஒரு குறுந்தகவல் வரும். அதில்- 'சொல்றா... கொஞ்சம் பிசியா இருந்தேன், சாப்டியா' என இருக்கும்.
அதற்கு ரிப்ளை கொடுத்தால் அடுத்த நாளே பதில் வரும்.

காதலித்து ஏமாற்றம் பெண்களை பற்றி திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பத்திரிகைகளில் படித்திருக்கிறேன் ஆனால் என் வாழ்க்கையில் நடக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம். என்னுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி இருந்தது அந்தக் காதல். காரணம் கேட்டால், வீட்டில் அவர் இருக்கிறார் என பதில் வரும். சென்ற மாதம் அவர் இருக்கவில்லையா என கேட்டால் மவுனமே பதிலாக வரும்.

ஒரு பெண்ணால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என உணரும் போதுதான் மனைவியின் அருமை ஆண்களுக்கு புரிகிறது.

ஏன் ... ஆண்களின் வாழ்க்கையை இவ்வளவு கடினமாக வடிவமைத்துள்ளார் கடவுள்.

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி சென்றுருந்தார்! ! ! !கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்.இங்கே காபிபொடி...
30/03/2025

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி சென்றுருந்தார்! ! ! !

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்.இங்கே காபிபொடியும் இல்லை சர்க்கரை ­யும் இல்லை அடுப்ப ங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்

எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான் கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன். இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா என்று அழ ஆரம்பித்தாள்…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல் வெளியேறினார்..விருந்தாளி

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .என்றான் கணவன்..

ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…”என்­றாள் மனைவி பிராமாதம் ­ என்றான் கணவன்

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…

நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் விருந்தாளி..

 #டிராகன்  டிராகன் திரைப்படம் திரையரங்கு சென்று பார்க்க இயலாத சூழ்நிலையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் OTT இல் பார்க்கும் சூழல்...
29/03/2025

#டிராகன்

டிராகன் திரைப்படம் திரையரங்கு சென்று பார்க்க இயலாத சூழ்நிலையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் OTT இல் பார்க்கும் சூழல் முதல் சீனிலே காதலியின் இடுப்பு டாட்டூ வை கதாநாயகன் பார்க்க துவங்கையில் அடடா குடும்பத்துடன் பார்க்கும் படம் அல்லவே என ஜெர்க்காகி சரி பார்ப்போம் என பார்க்கையில்...

படம் ஏதோ ஒரு வகையில் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது ( ஒருவேளை அந்த 48 அரியர் ஆக கூட இருக்கலாம் 😂😂 ஆனா நமக்கு செமஸ்டர் எழுதுவதையேதடை போட்டாய்ங்க 🏃🏃 ) பிறகு கல்லூரி படிப்பை இடை நிறுத்தி கதாநாயகன் தனது தாய் தந்தையினரை ஏமாற்றி அவர்களின் காசை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வருவதை கண்டு எங்கள் குடும்பமே கொந்தளித்து கதா நாயகனே திட்டி தீர்த்தது..

பிறகு ஒரு வாராக fake சர்டிபிகேட், நல்ல நிலை அடைதல், மீண்டும் கல்லூரி என படம் வெவ்வேறு திசையில் எடுத்தாலும் இதில் அடிப்படை உண்மை என்பதை அனைத்து கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் உணர வேண்டியது ஒன்றுதான் கல்லூரி பருவம் என்பது மிக மிக சந்தோசமாக கழிக்க வேண்டிய ஒரு பருவம் அதில் எவ்வளவு ஜாலியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு ஜாலியாக இருந்தால் அந்த இனிமையான நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்

ஆனால் ஒரே ஒரு கோரிக்கை தான் எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியாக இருக்கிறோமோ அதேபோல் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றியுடன் கல்லூரி காலத்தை கடக்க வேண்டும் இல்லையெனில் என்றாவது ஒருநாள் அதற்கான விலையை, துன்பத்தை வருத்தத்தை நாம் கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும்...

என்னுடைய கல்லூரி காலத்தில் இயற்பியல் பேராசிரியர் திரு Mr. . என்ற ஒரு டெரர்ர்ர்....
பேராசிரியர் இருந்தார் மற்ற பேராசிரியர்களிடம் டீல் செய்வது போல் இவரிடம் அவ்வளவு எளிதாக டீல் செய்ய இயலாது எனவே அவருடைய வகுப்பு என்றால் அனைவரும் வாலை சுருட்டி கொண்டு அமர வேண்டும்...

இருப்பினும் என் போன்ற சில அகராதிகள் அவரிடமும் வேலையைக் காட்ட முற்பட்ட தருணத்தில் அவர் சொன்ன ஒரே வார்த்தை இன்று வரை பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் பதிந்துள்ளது உள்ளது அது என்னவென்றால்

" நீங்கள் இங்கு படிக்கும் இந்த மூன்று வருடமும் நீங்கள் என்ன சேட்டை வேண்டுமானாலும் பண்ணலாம் யாரை வேண்டுமானாலும் கிண்டல் செய்து சிரிக்கலாம் ஆனால் தோற்றுப் போய் மூன்றாண்டுகள் படிப்பு முடிந்து கல்லூரி வாசலில் நின்று கல்லூரியை உற்று பார்த்தால் கல்லூரி உன்னை பார்த்து சிரிக்கும் அன்று உன்னுடன் யாரும் இருக்க மாட்டார்கள் " என்பார் அது உண்மைதான் #ஒருநாள் #கல்லூரியும் #என்னை #பார்த்து #சிரித்தது..

(அப்போதும் சரி எப்போதும் சரி சந்தோஷத்தில் மகிழ்ந்திருக்கும் பொழுது உடனிருந்தவர்கள் யாரும் உடன் வர மாட்டார்கள் )

எனவே ஜாலி ஒரு புறம்...
படிப்பு ஒரு புறம்....

என கல்லூரியை கடக்க வேண்டும் என்று கூறி

கண்டிப்பாக ஒவ்வொரு மாணவர்களும் பார்க்க வேண்டிய படம் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

அதிர்ச்சி தரும் வெற்றிக்கான ரகசியங்கள்!வெற்றி… சிலருக்கு சாதாரணமானது, ஆனால் பலருக்கு அது ஒரு பெரிய கனவு! ஏன்? ஏனெனில் வெ...
29/03/2025

அதிர்ச்சி தரும் வெற்றிக்கான ரகசியங்கள்!

வெற்றி… சிலருக்கு சாதாரணமானது, ஆனால் பலருக்கு அது ஒரு பெரிய கனவு! ஏன்? ஏனெனில் வெற்றி பெறும் மிகுந்த ஆளுமைகள் சில அதிர்ச்சி தரும் ரகசியங்களை பயன்படுத்துகிறார்கள், ஆனால் பெரும்பாலான மக்கள் அவற்றை கவனிக்கவில்லை!

🔥 நீங்கள் வெற்றி பெற விரும்பினால், இந்த ரகசியங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

---

1. வெற்றி பெறும் மக்கள் ஒற்றைத் தீர்மானத்தை எடுக்கிறார்கள்!

நாம் பல நேரம் ஒரு முடிவை எடுக்கவும் தயங்குகிறோம். ஆனால் வெற்றிகரமானவர்கள் ஒரே ஒரு முக்கிய முடிவை எடுத்து, அதை மாற்றமில்லாமல் செயல்படுத்துகிறார்கள்.

✅ நீங்கள் செய்யும் ஒரு சிறிய முடிவு, உங்கள் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றும்!
✅ “நான் இதை செய்ய வேண்டும்” என்று உறுதி செய்துவிட்டால், முழு உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
✅ தன்னம்பிக்கையை கொண்டிருங்கள். கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்!

🚀 வெற்றி என்பது வாய்ப்பு இல்லை – அது ஒரு தீர்மானம்!

---

2. அவர்களது காலத்தையும், எரிசக்தியையும் வீணாக்கமாட்டார்கள்!

வெற்றிகரமானவர்கள் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை. அவர்கள் நேரத்தை முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே செலவிடுவார்கள்.

நேரம் வீணாகும் சில விஷயங்கள்:
❌ சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது.
❌ ஒவ்வொரு விஷயத்திலும் கண்டிப்பாக ஏதாவது குறை சொல்லுவது.
❌ அடுத்தவர்களின் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வது.

🔥 நேரத்தை கட்டுப்படுத்துவது என்பது வெற்றிக்கான முதல் படி!

---

3. தோல்வியை பயப்படாமல் தங்களது ஆற்றலாக மாற்றுகிறார்கள்!

🚫 “ஒருமுறை தோல்வி அடைந்தால் முடியாது” என்று நினைக்காதீர்கள்!
🚫 “என் முயற்சி வீணாகிவிட்டது” என்று சொல்லாதீர்கள்!

வெற்றியாளர்கள் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதிலிருந்து அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.

✅ அவர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்!
✅ அவர்கள் மேலும் முயற்சி செய்கிறார்கள்!
✅ அவர்கள் இறுதிவரை முயற்சி செய்யலாம் – ஆனால் தளரமாட்டார்கள்!

🔥 தோல்வி – வெற்றிக்கான ஒரு அடிக்கல்!

---

4. அவர்கள் 80/20 விதியை கடைபிடிக்கிறார்கள்!

வெற்றிகரமானவர்கள் அதிகமான செயல்களை செய்யமாட்டார்கள், ஆனால் மிக முக்கியமான செயல்களை மட்டுமே செய்யுவார்கள். இதுதான் 80/20 விதி!

✅ உங்கள் 20% முக்கியமான வேலைகள் – உங்கள் 80% வெற்றியை தீர்மானிக்கும்.
✅ மிக முக்கியமான செயல்களை முதலில் செய்யுங்கள் – மற்றவற்றை பிறகு செய்யலாம்.
✅ அதிக வேலை செய்யும் போது, உண்மையில் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

💡 வெற்றி என்பது கடினமான உழைப்பால் வராது – அது புத்திசாலித்தனமான உழைப்பால் வரும்!

---

5. அவர்கள் தொடர்ந்து வளர்கிறார்கள்!

வெற்றிகரமானவர்கள் ஒரே நிலைமையில் இருப்பதில்லை – அவர்கள் தினசரி வளர்கிறார்கள்!

✅ புத்தகங்களை படிக்கிறார்கள்.
✅ புதிய திறன்களை கற்றுக்கொள்கிறார்கள்.
✅ அவர்களின் மனநிலையை வளர்க்கிறார்கள்.

🚀 “நீங்கள் இன்று சற்றும் முன்னேறவில்லை என்றால், நீங்கள் பின்னோக்கி செல்கிறீர்கள்” – இது வெற்றியாளர்களின் கோட்பாடு!

🔥 தினசரி 1% வளர்ச்சி – உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிடும்!

---

6. வெற்றி பெறும் மக்கள் – சாதாரண மக்கள் செய்யாத ஒரு விஷயத்தை செய்கிறார்கள்!

வெற்றி என்பது விதிவிலக்காக இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சாதாரணமான மக்கள் செய்யாத சில விஷயங்களை வெற்றிகரமானவர்கள் செய்வார்கள்.

✅ அவர்கள் அதிக வேலை செய்வார்கள் – ஆனால் புத்திசாலித்தனமாக.
✅ அவர்கள் ‘நான் இயலாது’ என்று சொல்ல மாட்டார்கள்.
✅ அவர்கள் நெருக்கடியை சமாளித்து, அதிலிருந்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவார்கள்.

🔥 நீங்கள் சாதாரணமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது வெற்றி பெற விரும்புகிறீர்களா?

---

7. அவர்கள் – யாருக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள், ஆனால் தங்களுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்!

🚫 “என் வாழ்க்கை இப்படியிருப்பதற்குக் காரணம்…”
🚫 “அவர்கள் உதவவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன்”

இப்படி யாரும் சொல்ல மாட்டார்கள்! வெற்றிகரமானவர்கள் தங்களது வாழ்க்கை முடிவுகளை முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

✅ அவர்கள் முயற்சி செய்வார்கள்!
✅ அவர்கள் எப்போதும் தங்களை முன்னேற்றுவார்கள்!
✅ அவர்கள் எதையும் ‘சரியில்லை’ என்று விமர்சிப்பதற்குப் பதிலாக, தாங்களே முடிவுகளை எடுப்பார்கள்.

🔥 உங்கள் வாழ்க்கையின் முழு பொறுப்பையும் நீங்கள் ஏற்றுக்கொண்டால் – வெற்றி உங்களுக்கே சொந்தம்!

---

🎯 வெற்றி பெற தயாரா? இன்று முதல் இந்த ரகசியங்களை செயல்படுத்துங்கள்!

இந்த கட்டுரையை நீங்கள் படித்த பிறகு…
🔹 நீங்கள் எந்த முடிவை எடுக்கப் போகிறீர்கள்?
🔹 நீங்கள் எந்த பழக்கத்தை மாற்றப் போகிறீர்கள்?
🔹 நீங்கள் எந்த முயற்சியை தொடங்கப் போகிறீர்கள்?

🚀 வெற்றி என்பது இன்று உங்களால் தொடங்கலாம் – இது உங்கள் கையில்!

#வெற்றி #வெற்றிக்கானரகசியம் #தொழில்முனைவோர் #வாழ்க்கைமாற்றம் #வெற்றிவழி #தினசரிமோட்டிவேஷன் #உற்சாகம் #நேரம்நிர்வாகம் #முயற்சியேவெற்றி

சிறிது  #தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:1. ஆக்ஸிஜன் 43 கிலோ...
29/03/2025

சிறிது #தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் செப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளன.

மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்:மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்மூளை-...
29/03/2025

மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்:

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்

மூளை
-----------------
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

கண்கள்
------------------
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைகாய் மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும் கண் பலப்படும்.

பற்கள்
--------------
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ் வாழைப்பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

நரம்புகள்
-------------------
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வர நரம்புகள் வலுப்பெறும்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வர நரம்புகள் பலம் பெறும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்புகளுக்கு நல்லது.

ரத்தம்
-------------
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

சருமம்
---------------
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வர வேண்டும்.

நுரையீரல் & இதயம்
---------------------------------------
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்

இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கருப்பு திராட்சை ஜூஸ், கருப்பு உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது

வயிறு
---------------
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

கல்லீரல் & மண்ணீரல்
-----------------------------
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

மலக்குடல்
-----------------------
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

பாதம்

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

 #வாழ்க்கையில்_ரொம்போ முக்கியமான விஷயம்!சுய ஒழுக்கமே தவறுகள் நடைபெறாமால் இருப்பதற்கான வழிகள்.1. அடுத்தவர் பணத்தை முடிந்த...
29/03/2025

#வாழ்க்கையில்_ரொம்போ
முக்கியமான விஷயம்!

சுய ஒழுக்கமே தவறுகள் நடைபெறாமால் இருப்பதற்கான வழிகள்.

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர், பண்ணவும் நினைக்காதீர்.

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்.

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள். செலவு செய்தபின் Tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள்.

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்). அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! (None of your business). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள்.
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ, பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

10. நீங்கள் ஓட்டுனராகவோ அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc) இருந்தால் கஸ்டமரின் Personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள்.
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சமயம் என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

12. நீங்கள் Guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா' என்று கடுப்பேற்றாதீர்கள்.

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய Opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப Shy டைப்பா? வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் etc).

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்.
(No one likes advices).

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள்.
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்ட்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ? என்று கேட்காதீர்கள். எங்க ஏரியாவில் கம்மி ரேட் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
'வீடு நல்லா இருக்கு கங்கிராட்ஸ்' என்று முதலில் சொல்லுங்கள்.

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள்.
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it.

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் Designation ஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம்.
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.
(Unless they are your spouse / lover)
நீங்கள் Guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள்.
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது Offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ, வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

23. பாடல்களை கேளுங்கள் என்று சொல்லவில்லை. அப்படி கேட்பதாக இருந்தால் சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி Comment செய்யாதீர்கள்.
(என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல).

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

26. மற்றவரின் Taste / Preference களைக் குறை சொல்லாதீர்கள்.
(இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!).

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்.

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

#நாகரிகங்கள்

குறை நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்...

நன்றி

இணையத்தில் கண்ணில் பட்டு நீங்கள் வாசிக்க பகிர்வது உங்கள்....
Kannadi Channel Bilal

Address

Chennai
Ramapuram
600018

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Movies World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category