18/05/2024
முருகனின் நான்காம் படை வீடு,
சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதன் திருக்கோவில். மூலவர் சுவாமிநாதர் ஆறு அடியில் கையில் தண்டம், தலையில் குடுமி, மார்பில் பூணூலுடன் காணப்படுகிறார். வலது கரத்தில் தண்டாயுதத்துடனும், இடது கையை தொடை மீது வைத்தபடி யோக நிலையில் குருவாக அருள்பாலிக்கிறார். இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப் பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார்.
சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்யனாக அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டதால், பரமகுரு, தகப்பன் சுவாமி என்றும் போற்றப்படுகிறார்.
கருவறையின் பீடம், சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் சுவாமி பாண லிங்கமாகவும் உள்ளார். திருமண வரம், குழந்தை வரம், ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக வேண்டிக்கொள்கின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால், பூதம், தீ, நீர், வெள்ளம், ஆகியவற்றால் வரும் தீமைகள் விலகுகிறது என்பது நம்பிக்கை. ஆன்மீக புரிதலில் ஹலோ சந்திரன்.