V.Kovil pathu

V.Kovil pathu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from V.Kovil pathu, Media/News Company, v. kovilpathu, Seydunganallur.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 17.10.2022 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிக...
17/10/2022

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 17.10.2022 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம்.

💥குலசை தசரா திருவிழா 2022🚩✨பத்தாம் திருநாளில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பத்து திருக்கரங்களுடன் வீரப்பல் தாங்கி...
06/10/2022

💥குலசை தசரா திருவிழா 2022🚩

✨பத்தாம் திருநாளில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பத்து திருக்கரங்களுடன் வீரப்பல் தாங்கி விரிசடையுடன் காளி சொரூபமாக சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினாள்✨

🔱ஓம்காளி ஜெய்காளி🙏

பக்தர்கள் கவனத்திற்கு 🙏
05/10/2022

பக்தர்கள் கவனத்திற்கு 🙏

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22.09.2022 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிக...
22/09/2022

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22.09.2022 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம்

வரும் 24ந்தேதி 120 கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை வளர்ச்சித்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்கலை...
22/09/2022

வரும் 24ந்தேதி 120 கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை வளர்ச்சித்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2022-2023 தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-2023 ஆம் ஆண்டு 120 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் சனிக்கிழமை 24/09/2022 அன்று காலை 10 மணி அளவில் 120 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த அனைத்து குறைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!குன...
22/09/2022

ஏறுமயில் ஏறி விளையாடும்
முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும்
முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற
முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த
முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த
முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ
அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த
பெருமாளே!

முருகாசரணம் 🐓🦚

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் செப்டம்பா் 23 ஆம் தேதி பயிா்க் கடன் வழங்கும் முகாம்இ...
19/09/2022

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் செப்டம்பா் 23 ஆம் தேதி பயிா்க் கடன் வழங்கும் முகாம்

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் முத்துக்குமாரசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 190 கோடி பயிா்க் கடன் வழங்க குறியீடு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ. 12.66 கோடி வழங்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகள் பயிா்க் கடன் பெற ஏதுவாக கடன் வழங்கும் முகாம் செப்டம்பா் 23 ஆம் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணனி சிட்டா நகல், பயிா் சாகுபடி தொடா்பான கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதாா் அட்டை நகல், ஸ்மாா்ட் காா்டு நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் வீட்டின் அருகேயுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடா்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அருகேயுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சோ்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம்.பயிா்க் கடன் வழங்கலில் ஏதாவது சேவைக் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் (7338749401) பொது மேலாளா் (8525858055), கடன் பிரிவு உதவி பொது மேலாளா் (7598787407) என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடு...
18/09/2022

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.10ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா 2022..
18/09/2022

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா 2022..

Address

V. Kovilpathu
Seydunganallur
628809

Telephone

9750402047

Website

Alerts

Be the first to know and let us send you an email when V.Kovil pathu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share