Thiruvengadu-திருவெண்காடு

Thiruvengadu-திருவெண்காடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvengadu-திருவெண்காடு, Digital creator, Thiruvengadu, Sirkazhi.

Thiruvengadu (also spelled Thiruvenkadu), Sirkazhi Taluk,Mayiladuthurai District, PIN 609114
இறைவர்: சுவேதாரண்யேஸ்வரர், இறைவி: பிரம்ம வித்யாம்பிகை, தனிச்சிறப்பு: அகோர மூர்த்தி, புதன். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது.

திருவெண்காடு ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகா சமேத ஸ்வேதாரண்யேஸ்வர  சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு பூர நட்சத்திரத்தை மு...
21/09/2025

திருவெண்காடு ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகா சமேத
ஸ்வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு பூர நட்சத்திரத்தை முன்னிட்டு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஓம் அகோரேஸ்வராய நமஹ 🙏🙏🙏

21/09/2025

மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருவெண்காடு திருக்கோயிலில் (புதன் ஸ்தலம் ) உள்ள ருத்ரபாதம் அமைந்துள்ள ஆலமரத்தடியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நடைபெற்றது...

*சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .*இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*1.பஞ்சாக்ஷர சிவ மந்திர...
20/09/2025

*சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .

*இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*

1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
*****************************
"ஓம் நமசிவாய"

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

2.ருத்ர மந்திரம் :
******************
"ஓம் நமோ பகவதே ருத்ராய"

3.சிவ காயத்ரி மந்திரம் :
**************************
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

4.சிவ தியான மந்திரம்:
*************************
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
*********************************
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

6.கபாலி மந்திரம்:
********************
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"

 #திருவெண்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலலில் புதன் கிழமை அன்று பக...
19/09/2025

#திருவெண்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலலில் புதன் கிழமை அன்று பக்தர்களுக்கு வெண்பொங்கல் அன்னதானம் அறங்காவலர் தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் கோயில் செயல் அலுவலர் அவர்களால் ஆரம்பிக்க பட்டது .


11/09/2025

சிதம்பரம் ரயில் நிலையம் NSG-5 இலிருந்து

NSG-4 ஆக மேம்படுத்தப்பட்டதன் பயன்

சமீபத்தில் சிதம்பரம் ரயில் நிலையம் NSG-5 வகையிலிருந்து NSG-4 வகைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இது அதன் கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகள் மேம்படுவதை குறிக்கிறது.

மேலும், பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது.

NSG-4 வகை என்பது என்ன?

இந்திய ரயில்வே நிலையங்களை, ஆண்டு பயணிகள் வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது.

NSG (Non-Suburban Group) வகைகள் NSG-1 முதல் NSG-6 வரை உள்ளன; NSG-1 அதிக முக்கியத்துவம் கொண்டது.

NSG-4 என்பது நடுத்தர அளவிலான பயணிகள் மற்றும் வருவாய் கொண்ட நிலையங்களை குறிக்கிறது.

சிதம்பரம் நிலையம் NSG-4 ஆக மேம்படுத்தப்பட்டதால், பயணிகள் மற்றும் சேவைகள் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

இந்த மேம்பாட்டின் தாக்கங்கள்

✅ வசதிகள் மேம்படும் – காத்திருப்பு அறைகள், கழிவறைகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவை மேம்படுத்தப்படும்.

✅ ரயில் சேவைகள் அதிகரிக்கும் – பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய அதிகமான மற்றும் சிறந்த சேவைகள் கிடைக்கும்.

✅ உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் – அதிகமான பயணிகள் வருகையால் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும்.

✅ உள்கட்டமைப்பு மேம்படும் – மேம்பட்ட தளங்கள், நல்ல விளக்குகள், எளிதாக அணுகும் வசதிகள் போன்றவை உருவாகும்.

இந்த வகை மேம்பாடு, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், பகுதியின் வளர்ச்சிக்கு துணையாகவும் இருக்கும். 🙏 நன்றி !!!

*முக்கிய அறிவிப்பு* *வரும் 11-9-2025 முதல் 10-11-2025 வரை மட்டும்*1....வண்டி எண்  22695 சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள...
11/09/2025

*முக்கிய அறிவிப்பு*
*வரும் 11-9-2025 முதல் 10-11-2025 வரை மட்டும்*

1....வண்டி எண் 22695 சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி *சோழன்* அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூருக்கு பதிலாக *தாம்பரம்* ரயில் நிலையத்தில் இருந்து காலை *8.12 மணிக்கு* புறப்படும்.

2......(வண்டி எண் 20696 திருச்சிராப்பள்ளி- சென்னை எழும்பூர் சோழன் அதிவிரைவு ரயில் வழக்கம்போல் சென்னை எழும்பூர் வரை செல்லும்.)

3......வண்டி எண் 16751 சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் (போட் மெயில் ) விரைவு வண்டி சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்படும்.

4...வண்டி எண் 16752 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (போட் மெயில் ) விரைவு வண்டி சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் ரயில் வரை மட்டுமே செல்லும். எழும்பூர் செல்லாது.

மேற்கண்ட ரயில்களில் பயணம் செய்பவர்கள் ரயில் சேவை மாற்றம் பற்றி தெரிந்து கொண்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் பற்றிய தகவல்கள்...பித்ரு தோஷத்தினால் பாதி...
08/09/2025

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் பற்றிய தகவல்கள்...

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

"மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி. திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்ச காலத்தில் செய்யும் தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பது நம்பிக்கை. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் மகாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

பித்ரு தர்ப்பணம் கடமை

இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாவ புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

மகாளய அமாவாசை

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிரார்த்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும்.

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.

இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

முன்னோர்களின் ஆசி

மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

முன்னோர்களுக்கு திருப்தி

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.

முன்னோர்கள் சாபம் நீங்கும்

மகாளய பட்ச காலத்தில் புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பபணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

பித்ரு பூஜையின் மகிமை

நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம். பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

தீராத கஷ்டங்கள் தீரும்

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது என்பது நம்பிக்கை. பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மஹாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பசுவிற்கு பழம்

அவரவர் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம். இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

என்ன நாளில் என்ன பலன்

மகாளய பட்ச காலமான 14 நாட்களில் எந்தெந்த நாளில் திதி கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பிரதமை : செல்வம் பெருகும் துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி) திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும். சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்) பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி) சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்) சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி அஷ்டமி : நல்லறிவு வளரும். நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும். ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம். துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும். திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும். சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

👉🛤 Route Map of the Tambaram-Rameswaram Express.....🚆
03/09/2025

👉🛤 Route Map of the Tambaram-Rameswaram Express.....🚆

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருவெண்காடு ஊராட்சி ராதாநல்லூர் ஊராட்சி மணிக்கிராமம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளடக்கி...
30/08/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருவெண்காடு ஊராட்சி ராதாநல்லூர் ஊராட்சி மணிக்கிராமம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளடக்கிய முகாம் வருகின்ற செப்டம்பர் மாதம் (02.09.2025) தேதி #செவ்வாய்க்கிழமை திருவெண்காடு #ராயல்திருமணமஹாலில் நடைபெற இருப்பதால் மூன்று ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்  108 Shiva Temples பலன்கள்1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக2 திருச்சிராப்பள்ளி வி...
27/08/2025

108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள் 108 Shiva Temples பலன்கள்
1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 #திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அல்ல
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டிசுபம். தோஷம் விலக
108 சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக சுபம்.

மஞ்சள் பிள்ளையாரை முதலில் வணங்குவதன் பலன்கள்...இந்து மதக் கடவுளர்களை வணங்குவதை ஆறு வகைகளாகப் பிரித்துப் பெயரிட்டார் ஆதிச...
27/08/2025

மஞ்சள் பிள்ளையாரை முதலில் வணங்குவதன் பலன்கள்...

இந்து மதக் கடவுளர்களை வணங்குவதை ஆறு வகைகளாகப் பிரித்துப் பெயரிட்டார் ஆதிசங்கரர். அவை காணாபத்தியர், சைவர், வைணவர், சாக்தர், கௌமாரர், சௌராஷ்டிரர் என ஆறு வகையினர்ஆவர். இதில் கணபதியை முழுமுதற் கடவுளாக வணங்கிடுவோர் காணாபத்தியர் என்றும், அம்மதப் பிரிவிற்கு காணாபத்தியம் என்றும் பெயரிட்டார். அனைத்திலும் இறைமையைக் காணுகின்ற இந்து மதம் யானை வடிவுடைய கணபதி வழிபாட்டையும் கொண்டுள்ளது போற்றத்தக்க சிறப்புடையதாகும்.

இந்திரன், சூரபதுமனுக்கு பயந்து மூங்கில் மரமாக சீர்காழியில் நின்றான். நீர் இல்லாமல் வாடிய தோட்டத்திற்கு நீர் விடும் வகையில் விநாயகர் காக்கை வடிவெடுத்து, அகத்திய முனிவர் வைத்திருந்த கமண்டலத்தை கவிழ்த்து நீர் தரையில் ஓடுமாறு செய்தார். அந்த நீர் தரையில் ஓடி, இந்திரன் மூங்கில் மரமாக நின்ற இடத்திற்குச் சென்றது. இதனால் இந்திரன் காப்பாற்றப்பட்டான். ஆகையால், சீர்காழிக்கு ‘வேணுபுரம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

வியாசர் பெருமான் மகாபாரதத்தை கூறியபோது அதனை விநாயகர் தனது தந்தம் ஒன்றை உடைத்து மேரு மலையில் எழுதினார் என்பது ஒரு நம்பிக்கை. அதனால் விநாயகருக்கு ஒரு தந்தம் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதனால் விநாயகருக்கு, 'ஏகதந்தர்' எந்த பெயரும் உண்டாயிற்று. இதனால் விநாயகரை, 'ஏக தந்தாய வித்மஹே' என்று கூறி வழிபடுவர்.

நம் அறிவை எப்போதும் ஆணவ மலம் மறைத்துக் கொண்டிருக்கிறது. ஆணவ மலம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும். தேங்காயில் குடுமி மற்றும் கண்கள் இருப்பது நம் தலையைக் குறிப்பது போன்றது. தேங்காயைச் சுற்றியுள்ள நார் அறிவை சூழ்ந்துள்ள ஆணவ மலத்தைக் காட்டுகிறது. ஆணவ மலத்தை நீக்கி அறிவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று இறைவனை கேட்பதே தேங்காய் உடைப்பதன் தத்துவமாகும். எனவே, ஆணவம் என்று கூறக்கூடிய 'நான், எனது’ என்று கூறிடும் இறுமாப்பு நீக்கமே தேங்காய் உடைப்பதன் தத்துவமாகும் என்று கூறியுள்ளார்கள்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.

திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன், விநாயகரை வணங்கிச் செல்லாததால் சிவபெருமானின் தேர் அச்சு முறிந்தது. பின்னர் விநாயகருக்காக தேங்காய் உடைத்து விட்டு பின்பு போருக்கு தேரில் சென்றதால் விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

கணபதிக்கு சாதனை, அறிவு இரண்டும் சிறப்புப் பண்புகள் ஆகும். அதனால் இவ்விரண்டில் சாதனையை சித்தி என்றும், அறிவை புத்தி என்றும் உருவகித்தனர். பொதுவாக, தென்னிந்தியாவில் கணபதியை திருமணமாகாதவராகவே கொண்டாடுகின்றனர் என்றாலும், திருவலஞ்சுழியில் விநாயகர் வாணி, கமலி என்ற இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.

நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயத்தாட்சி அம்மன் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உள்ளார். சிதம்பரம் ஆயிரம் கால் மண்டபத்தில் வெண்ணையுடன் தொடர்புப்படுத்தி நவநீத கணபதி வணங்கப்படுகிறார். திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில் மிகப்புகழ் மிக்கது. சுவாமி மலையில் விநாயகரின் துதிக்கை வடக்கு நோக்கி வளைந்திருக்கும். கடல் நுரையினால் ஆன இச்சிலைக்கு ‘வலஞ்சுழி விநாயகர்’ என்று பெயர். கோயிலும் 'திருவலஞ்சுழி' என்றே அழைக்கப்படுகிறது. பாறைகளுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் பிள்ளையார்பட்டி விநாயகர் காணக் கண் கோடி காட்சி தந்து நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் எல்லா பண்டிகைக்கும் முன்பு மஞ்சளில், சாணத்தில் என்று பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல் செருகி வழிபாடு செய்த பின்னரே மற்ற தெய்வங்கள் வழிபடப்படுகிறார்கள். இதனால் அவருக்கு முழுமுதற் கடவுள் என்ற பெயர் ஏற்பட்டது. இப்படிச் செய்வதால், ‘விக்னம்’ என்று சொல்லக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி, தங்குத் தடையின்றி நாம் தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும் என்பதை உறுதியாக நம்புகின்றோம். அப்படி, ‘நம்பினோர் கெடுவதில்லை. இது நான்குமறைத் தீர்ப்பு’ என்பது உறுதி. வழிபடுவோம்; வழிவிடுவார் விநாயகர்

Address

Thiruvengadu
Sirkazhi
609114

Opening Hours

Monday 6am - 1pm
4pm - 8:30pm
Tuesday 6am - 1pm
4pm - 8:30pm
Wednesday 6am - 1pm
4pm - 8:30pm
Thursday 6am - 1pm
4pm - 8:30pm
Friday 6am - 1pm
4pm - 8:30pm
Saturday 6am - 1pm
4pm - 8:30pm
Sunday 6am - 1pm
4pm - 8:30pm

Website

https://www.google.com/maps/d/viewer?mid=1M_MZlm-s5HIpTPr2pcwBoFXIFqlHJD8&ll=11.01398

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvengadu-திருவெண்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruvengadu-திருவெண்காடு:

Share