Sivagangai News

Sivagangai News சிவகங்கை செய்திகளை தெரிந்துகொள்ள சிவகங்கை நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
website: www.karaikudinews.in
(1)

08/09/2026

இலவச மின் இணைப்பு வேறு நிலத்திற்கு மாற்றியதாக புகார்.

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகளைபின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் -மாவட்ட ஆட்சித்தலைவர் ...
08/09/2026

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை
பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் -மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்
தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் குடங்கள் மற்றும் பீப்பாய்கள்களை (Drum, Barrel) முழுமையாக மூடி வைக்க வேண்டும். அவற்றை வாரம் ஒரு முறையாவது நன்றாக தேய்த்து கழுவி பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டின் சுற்றுப்புறத்திலும் பொது இடங்களிலும் மழை நீர் தேங்கும் வகையிலான வேண்டாத பொருட்கள் (டயர்கள், தேங்காய் சிரட்டைகள், தேனீர் குவளைகள், டப்பாக்கள் போன்ற கொள்கலன்கள்) இல்லாத வண்ணம் பராமரிக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுங்கள். மேலும், போதுமான அளவு திரவ உணவுகளை (ORS கரைசல், இளநீர், அரிசிக்கஞ்சி, பழச்சாறு போன்றவை) எடுத்துக்கொள்ளுங்கள்.

எனவே, பொதுமக்கள் பருவ மழை காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான (2026) மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 25.09.2026 வ...
08/09/2026

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான (2026) மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தகவல்.

அனைத்து பள்ளி / கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்கு பெறவேண்டும் -
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தகவல்.
*****
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை-2026, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெறவுள்ளது.
போட்டிகளின் விவரங்கள்

I. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்:
பள்ளி பிரிவுகளுக்கு

1. தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கையுந்துபந்து, வளைகோல்பந்து – ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு -09.09.2026 மாணவிகளுக்கு -10.09.2026 –ம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
2.கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு 10.09.2026 மாணவிகளுக்கு 09.09.2026 ஹோலிஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவிலில் நடைபெற உள்ளது.
3.சிலம்பம், செஸ், யோகாசனா – ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு -15.09.2026 மாணவிகளுக்கு -16.09.2026 செட்டிநாடு பப்ளிக் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
4.கேரம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -15.09.2026 மாணவிகளுக்கு -16.09.2026 –ம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

-2-
5.கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -15.09.2026 முதல் 16.09.2026 மாணவிகளுக்கு -10.09.2026 –ம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
6.கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு -15.09.2026 முதல் 16.09.2026 வரை செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
7.டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -15.09.2026 மாணவிகளுக்கு -16.09.2026 அன்று செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
8.ஸ்பீடுகேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு -10.09.2026 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

II. மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்:
கல்லூரி பிரிவுகளுக்கு

1. தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கைப்பந்து, கையுந்துபந்து, பால்பேட்மிட்டன் ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு -17.09.2026 மாணவிகளுக்கு -18.09.2026 சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
2.சிலம்பம், செஸ், யோகாசனா – ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு -17.09.2026 மாணவிகளுக்கு -18.09.2026 செட்டிநாடு பப்ளிக் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.

3.கேரம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -21.09.2026 மாணவிகளுக்கு -22.09.2026 –ம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

4.கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -21.09.2026 முதல் 22.09.2026 மாணவிகளுக்கு -23.09.2026 –ம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
5.கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -17.09.2026 முதல் 19.09.2026 மாணவிகளுக்கு -21.09.2026 –ம் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
6.கபடி விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு -21.09.2026 முதல் 22.09.2026 ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லுாரி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
7.டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு -17.09.2026 மாணவிகளுக்கு -18.09.2026 –ம் அன்று செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
8.ஸ்பீடுகேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு -10.09.2026 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

III. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்:
பொதுப் பிரிவினர்களுக்கு –

1.தடகளம், இறகுப்பந்து, கபடி, கால்பந்து, கேரம், கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்குட - 23.09.2026 சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
2.சிலம்பம் மற்றும் யோகாசனா – ஆகிய விளையாட்டு போட்டிகள் ஆண்களுக்கு-17.09.2026 பெண்களுக்கு -18.09.2026 செட்டிநாடு பப்ளிக் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.

3.கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு - -22.09.2026 –அன்று செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடியில் நடைபெற உள்ளது.
-4-

IV. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்:
அரசு ஊழியர்கள் பிரிவுகளுக்கு

தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கேரம், செஸ், யோகாசனா - ஆண்கள் (ம) பெண்களுக்கு - 24.09.2026 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

V. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்:
மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுக்கு
அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகள் 25.09.2026 (ஆண்/பெண் இருபாலருக்கும்) சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள பள்ளி பிரிவு மாணவ/மாணவியர்கள் தங்களுக்கான அடையாள அட்டை (Bonafide Certificate). அல்லது (School ID card) மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் கல்லூரி பிரிவில் கலந்து கொள்ள உள்ள மாணவ/மாணவிகள் அடையாள அட்டை (Bonafide Certificate). அல்லது (College ID card) மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் அரசு ஊழியர்கள் தங்களுக்கான அலுவலக அடையாள அட்டை ( Department ID card) மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ( ID card) மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் பொதுப் பிரிவில் கலந்து கொள்ள உள்ள வீரர்/ வீராங்கனைகள் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய தங்களுக்குரிய பிரிவு விளையாட்டு நாட்களில் நேரில் வரும் பொழுது கண்டிப்பான முறையில் கொண்டு வருமாறும், தங்கள் விளையாட்டு பிரிவுகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் (Playing Kit) கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.

-5-அனைத்து விளையாட்டு வீரர்/வீராங்கனைகளும் தங்களுக்கு குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளின் நாட்களில் காலை 7.00 மணியளவில் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைப்பேசி எண் 04575-299293 என்ற எண்ணிலோ வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

08/09/2026

மர்ம காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி ப*லி! சிவகங்கை அருகே கிராமம் முழுவதும் மருத்துவ முகாம் – பொதுமக்கள் அச்சம்.

#

08/09/2026

தலைவர் பேசுனா ஒரு நிமிஷம் கூட உட்காரமாட்டாங்க- எம்.எல்.ஏ. இளங்கோவன்

சிவகங்கை நியூஸ் இ பேப்பர் செப்டம்பர் 8
08/09/2026

சிவகங்கை நியூஸ் இ பேப்பர் செப்டம்பர் 8

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் தாலுகா, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சன...
07/09/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளம் தாலுகா, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சன்னியாசி பூல்பாண்டி தனது யாசகம் பெற்ற தொகையை, நேபாளம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. வழங்கினார்.

07/09/2026

“கஜானாவில் பணம் இல்லை…

07/09/2026

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் கைது.

Address

Nehru Bazaar
Sivaganga

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919790597137

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share