சிபூ

சிபூ சற்று அமர்ந்து செல் ... என் ஆன்மா உயிர் பெறட்டும்.....

கடும்பசியில் ஏந்தப்படும் கரங்களுக்கு,சட்டை பையில் பாரமாய் இருக்கும் சில்லறைகளை காணிக்கையாகின்றன... #சிபூ  #கவிதைகள்
26/12/2024

கடும்பசியில்
ஏந்தப்படும்
கரங்களுக்கு,
சட்டை பையில்
பாரமாய் இருக்கும்
சில்லறைகளை காணிக்கையாகின்றன...

#சிபூ
#கவிதைகள்

ஒரு மனைவியின் உச்சக்கட்ட சாபம் சுமங்கலியாய் மரணிக்கவேண்டும். #சிபூ  #கவிதைகள்
03/11/2024

ஒரு மனைவியின்
உச்சக்கட்ட சாபம்
சுமங்கலியாய்
மரணிக்கவேண்டும்.

#சிபூ
#கவிதைகள்

ஒரே ஒரு பேராசை தான் என் விரல்கள் நடுங்கும் வயதில், தோல் சுருங்கிய உன் கன்னத்தில் தினமும் ஒரு முத்தம். #சிபூ #கவிதைகள்
12/09/2024

ஒரே ஒரு
பேராசை தான்
என் விரல்கள்
நடுங்கும் வயதில்,
தோல் சுருங்கிய
உன் கன்னத்தில்
தினமும்
ஒரு முத்தம்.

#சிபூ
#கவிதைகள்

29/07/2024
பறிக்கப்பட்ட அரும்புகள்  ×××××××××××××××××××××××××××××××××××××××பீரங்கி குண்டுகளுக்கும் இடி மின்னலுக்கும் வித்தியாசம் தெ...
04/07/2024

பறிக்கப்பட்ட அரும்புகள்
×××××××××××××××××××××××××××××××××××××××
பீரங்கி குண்டுகளுக்கும்
இடி மின்னலுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
ஓடி ஒளிந்தார்கள்,

பல நேரங்களில்
ஒளிந்து ஒளிந்தே விளையாண்டார்கள்
தேடுபவர்கள் யார்
என்று தெரியாமலே,

பள்ளிகளிலும் பூங்காக்களும்
பாதுங்குக் குழிகளாகவே பழகிபோனார்கள்...

கொலை என்ன
என்பதே தெரியலாம்
கொள்ள படுகின்றர்கள்
அந்த குழந்தைகள்...

காசாவில் கொலையுண்ட மழலைகள்....

#சிபூ
#கவிதைகள்

ஒரே ஊர், ஒரே தெருக்களில் , காதல் மலர்ந்த பல பெண்களுக்கு ஏனோ அந்நிய ஊர்களின் மாப்பிள்ளைகளே காதல் பரிசாக ... #காதல்_பரிசு ...
28/01/2024

ஒரே ஊர்,
ஒரே தெருக்களில் ,
காதல் மலர்ந்த
பல பெண்களுக்கு ஏனோ
அந்நிய ஊர்களின்
மாப்பிள்ளைகளே
காதல் பரிசாக ...

#காதல்_பரிசு
#சிபூ
#காதல்
#கவிதைகள்

பேருந்தில் பார்த்தாள்,சிரித்தாள்,முத்தமிட்டாள், கட்டி அணைத்தாள் வெட்கப்பட்டு கண்களை மூடி கொண்டாள், ஆயிரம் பேர் மத்தியில்...
28/01/2024

பேருந்தில் பார்த்தாள்,
சிரித்தாள்,
முத்தமிட்டாள்,
கட்டி அணைத்தாள்
வெட்கப்பட்டு கண்களை
மூடி கொண்டாள்,
ஆயிரம் பேர் மத்தியில்
குளித்தாள்,
சமைத்தால்,
அழு தொடங்கினாள்
அவளிடம் இருந்த மிட்டாய்
கீழே விழுந்ததும்..

#அவள்_மழலை
#சிபூ
#கவிதைகள்

தேவதையின் தேடல் ...அவள்,ஆகாயத்தில் நூல் அளவு கம்பியில் நடந்தாள்,பின்னே வட்டமாய் வளைந்து பூமியில் முத்தமிட்டாள் ,பல அடி த...
25/12/2023

தேவதையின் தேடல் ...

அவள்,
ஆகாயத்தில் நூல் அளவு
கம்பியில் நடந்தாள்,
பின்னே வட்டமாய் வளைந்து
பூமியில் முத்தமிட்டாள் ,
பல அடி தூரத்திலிருந்து
குதித்தாள்,
அவ்வளவு நளினமாய்
நடனம் ஆடினாள்,
அனைவரும் கைதட்டினார்கள்..

அவள் மட்டும் கையேந்தினாள்..

#தெரு_கூத்து_தேவதை
#சிபூ
#கவிதை

மரணத்தின் விளிம்பில்நான் மலை உச்சியில்,குதிக்க நொடிகள் இருக்க,வேகமாய் பற்றி மேலே வருகிறது சிலந்தி,என் சட்டையில் ஒட்டிய ஒ...
16/12/2023

மரணத்தின் விளிம்பில்
நான் மலை உச்சியில்,
குதிக்க நொடிகள் இருக்க,
வேகமாய் பற்றி
மேலே வருகிறது சிலந்தி,
என் சட்டையில் ஒட்டிய
ஒரு நூலை பிடித்து...

#வாழ்க்கை
#சிபூ
#கவிதைகள்

நீ பக்கம் நெருங்க நொறுங்கியது என் வெக்கங்கள் ,மூக்குகள் உரச முணங்கி தவிக்கும்உன் மூக்குத்தி,உன் உதடுகள் அவிழ்த்த ஆடையில்...
01/11/2023

நீ பக்கம் நெருங்க
நொறுங்கியது
என் வெக்கங்கள் ,
மூக்குகள் உரச
முணங்கி தவிக்கும்
உன் மூக்குத்தி,
உன் உதடுகள்
அவிழ்த்த ஆடையில்
நிர்வாணமாய்
என் முத்தங்கள்..

#சிபூ
#கவிதை
#முத்தங்கள்

Address

Sivagangai
630303

Telephone

+918248444609

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிபூ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சிபூ:

Share

Category