Covai News Times

Covai News Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Covai News Times, News & Media Website, Sulur.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய்...
02/04/2026

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய்...

01/04/2026
15/03/2026

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

09/03/2026

திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாநாடு | திருச்சி

சோகத்தில் மூழ்கியது கோவைஒரே குடும்பத்தினர் தற்கொலைபொதுமக்கள் பெரும் சோகம்கோவை அருகே மத்தம்பாளையம் பகுதியில் கணவன், மனைவி...
03/02/2026

சோகத்தில் மூழ்கியது கோவை
ஒரே குடும்பத்தினர் தற்கொலை
பொதுமக்கள் பெரும் சோகம்

கோவை அருகே மத்தம்பாளையம் பகுதியில் கணவன், மனைவி ,மகள் உட்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் கமலேஷ் .

இவருக்கு இலக்கியா என்ற மனைவியும் எக்சிதா ஏஞ்சல் என்ற 10 வயது பெண் குழந்தையும் உள்ளது இவர்கள் மத்தம்பாளையம் அருகே உள்ள தம்பு நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலக்கியாவுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் புற்றுநோய் தாக்கம் அதிகரித்ததால் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வந்து உள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த கமலேஷ் பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கூட்டி சென்றும் சிகிச்சை பலனளிக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளார்.

தற்கொலை முடிவை எடுத்துவிட்டு தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி விட்டு உணவில் விஷம் கலந்து அந்த உணவை மூவரும் உண்டு தற்கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டை விட்டு மூவரும் வெளியே வராததால் அக்கம், பக்கம் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர காவல்துறை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி Tamil Nadu Police
30/01/2026

கோவை மாநகர காவல்துறை
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

Tamil Nadu Police

  | வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் எஸ்.ரா...
30/01/2026

| வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவிப்பு.

இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.

|

29/01/2026

Address

Sulur
641402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Covai News Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share