15/05/2025
இசையமைப்பாளர் சிற்பி ❤️
பெயருக்கு ஏற்றார் போல பல Hit பாடல்களை செதுக்கி இருப்பார் சிற்பி.
அவர் இசையமைத்த காலத்தில் அவருக்கு இருந்த போட்டியைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கும். இளையராஜா, தேவா, ரஹ்மான், வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார் என அனைவரும் சரிக்கு சமமாய் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த காலம்.
கடும் போட்டிக்கு மத்தியிலும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
✅நாராயணன் என்பது இவர் பெயர் பின்னர் சினி வாழ்க்கையின் போது இவர் தன் பெயரை சிற்பியாக மாற்றிக்கொண்டார்.
✅இவருக்கு இப்போது வயது 62 .
✅50-க்கும் மேற்பட்ட தமிழ் மலையாள தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
✅1997 ஆம் வருடம் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவர் பெற்றுள்ளார்.
சிற்பியின் ஆரம்ப கால சினி வாழ்க்கை..
இயக்குனர் மனோபாலாவால் அறிமுகபடுத்தப்பட்டவர் சிற்பி.
முதல் படமான செண்பகத் தோட்டம், இரண்டாவது படமான "அன்னை வயல்" படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனதால், சிற்பிக்கும் பெரிய வரவேற்பு இல்லை.
First Combo - Best Combo ☑️
திரை உலகில் ஒரு நடிகரோ, ஒரு இசை அமைப்பாளரோ, பெரிய அளவில் வரவேற்பைப் பெற வேண்டுமானால், ஒரு சிறந்த இயக்குனரோடு கை கோர்த்தால் மட்டுமே முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இயக்குனர் விக்ரமனின் "கோகுலம்" படம் சிற்பிக்கு ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. கூடவே ஆர்.பி சௌத்ரி எனும் காட்பாதரின் அறிமுகமும் கிடைத்தது. படம் சூப்பர் ஹிட். அன்றைக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களின் வேடந்தாங்கலாக சூப்பர் குட் பிலிம்ஸ் இருந்தது.
"செவ்வந்தி பூவெடுத்தேன்" பாடல் ஒலிக்காத இடமே இல்லை. புது ரோஜா பூத்திருக்கு, அந்த வானம் எந்தன் கையில், தெற்கே அடிக்குது காத்து என ஆல்பமே அதிரிபுரி ஹிட். "புது ரோஜா பூத்திருக்கு" என்னுடைய பர்சனல் பேவரைட்.
இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான "நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. "ஏலேலங்கிளியே" பாடல் யேசுதாஸ் குரலில் ஒன்று, மனோ, பி சுசீலா இணையில் ஒன்று. "பூங்குயில் ராகமே" சோகப்பாடல் வெர்ஷன் அந்நாளில் காதலில் தோற்றவர்களின் தேசிய கீதங்களுள் ஒன்று. "செந்தமிழில் புது சொல்லெடுத்து", பாடல் மனோவுக்கு. சிற்பி அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த ஆல்பம் என்றால் மிகையே இல்லை.
First Blockbuster Hit ☑️
அதன் பிறகு மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் "நாட்டாமை".
"கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும்" பாடலின் ரீச் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் பட்டி தொட்டி அவர் பாடல் ஒலித்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது சோகமான உண்மை.
பொதுவாகவே ஹிட் படக் கூட்டணியில் இருப்பவர்களுக்குத் தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சிற்பி அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
Mass combo - Sundar C + Sirpy ☑️
விக்ரமனுக்குப் பிறகு சிற்பிக்கு கிடைத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சுந்தர் சி. இருவரும் இணைந்த படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை.
"உள்ளத்தை அள்ளித்தா" படத்தின் வெற்றி தான் அவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது என்று சொல்லலாம். "அழகிய லைலா" பாடல் பம்பர் ஹிட்டானது.
பிறகு உள்ளத்தை அள்ளித்தா காம்போ அப்படியே இணைந்து கொடுத்த இன்னொரு படம் "மேட்டுக்குடி". ஒரு ஆல்பமாகவே அந்தப் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் வகையறா. மனோ+சிற்பி கூட்டணி தான் அனைத்துப் பாடல்களும்.
அந்தப் படத்தில்,
✅" சரவணபவ எனும் திருமந்திரம்" பாடல் அட்டகாசமான முருகன் பக்திப் பாடல்.
✅"அன்புள்ள மன்னவனே" பாடல் சுவர்ணலதாவின் ட்ரேட்மார்க் பாடல்களில் ஒன்று.
அதே போல் இவர்கள் காம்போவில் வந்த இன்னொரு ஹிட் பாடல் கண்ணன் வருவான் படத்தில் இடம்பெற்ற
✅"வெண்ணிலவே வெண்ணிலவே" ✅ "காற்றுக்கு பூக்கள் சொந்தம்" இரண்டும் அட்டகாசமாக இருக்கும்.
சுந்தர் சி + சிற்பி காம்போவில் அந்த ஆல்பமே ஹிட் பாடல்கள் தான்.
மறக்க முடியாத ஆல்பம் ☑️
சில வருடங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படத்திற்கு ஒன்று என ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த போது தான், மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் "வருசமெல்லாம் வசந்தம்" ஆல்பம் வந்தது.
அந்தப் படத்திற்கு விசிட்டிங் கார்டே சிற்பியின் இசையில் வந்த பாடல்கள் தான்.
✅"அடி அனார்கலி",
✅"எங்கே அந்த வெண்ணிலா",
✅" முதல் முதலாக" பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன.
மிக மிக எளிமையான மெட்டமைப்பில் வெளிவந்த இந்த பாடல்கள் சிற்பிக்கு ஒரு கம்பேக் கொடுத்தது.
மறக்க முடியாத ஆல்பம் ☑️
பிறகு மீண்டும் விக்ரமன் கூட்டணியில் இணைந்த "உன்னை நினைத்து" படத்தின் பாடல்கள் அவருக்கு ஸ்டேட் அவார்டை பெற்றுத் தந்தது.
காதலை பாடல்களை கொண்டாடி தீர்த்ததில் இந்த படத்திற்கு பெரிய பங்கு உண்டு.
✅என்னை தாலாட்டும் சங்கீதம்,
✅யார் இந்த தேவதை ,
✅பொம்பளைங்க காதல தான் நம்பி விடாதே
✅ஹேப்பி நியூ இயர் வந்ததே என தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு ஆல்பம் 💥💥💥🔥
இளையராஜா பீக்ல இருந்த சமயத்தில் ஹிட்டான எல்லா பாடல்களுக்கும் இளையராஜாதான் இசை என நினைத்தவர்கள் பலர்.
அப்படி எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் எல்லாம் ஹிட்டான சமயத்தில் இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்த பல பாடல்களை இன்று வரை எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தப் படத்தில் வந்த பாடல் என்றே தெரியாமல் அனைவரும் ரசித்த பாடல்கள்.!
🎧 "மணி ரத்னம்" - "காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா"
🎧 “கேப்டன்” - " கன்னத்துல வை"
🎧 "சின்ன மேடம்” - " முத்து முத்து பெண்ணொருத்தி"
🎧"கங்கா கௌரி" - "காதல் சொல்ல வந்தேன்"
🎧 "பூச்சூடவா" - "காதல் காதல் காதல்" , “நீ இல்லை நிலவில்லை”- பலருக்கும் பேவரைட் பாடலாக இருக்கும்.
🎧"சுந்தர புருஷன்" - "சமஞ்சேன் உனக்குத்தான்" மற்றுமொரு டவுன்பஸ் ஹிட் பாடல்.
🎧 “மூவேந்தர்” - "குமுதம் போல் வந்த குமரியே", " நான் வானவில்லையே பார்த்தேன்" இரண்டும் சிற்பி+ ஹரிஹரன் காம்போவில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள்.
🎧 “சுயம்வரம்” படத்தில் ஹரிஹரன் பாடிய "செக்கச் சிவந்தவளே" பாடல்.
🎧 “குங்குமப் பொட்டுக் கவுண்டர்” - "முதன் முதலா உன்னைப் பார்த்தேன்" , “பூவும் காற்றும் சேரும் போது”
🎧 “விண்ணுக்கும் மண்ணுக்கும்” - “உனக்கென உனக்கென பிறந்தேனே”
🎧 கோடம்பாக்கம் படத்தில் வந்த "ரகசியமானது காதல்" பாடல் சாட்டிலைட் சானல் காலத்தில் மிகப்பெரிய ஹிட் பாடல்.
மிக எளிமையான, கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் மெட்டு தான் சிற்பியின் பாடல்களின் சிறப்பம்சம். பாமரனாலும் முணுமுணுக்க முடியும். அவ்வளவு எளிமையாக இருக்கும். அதனால் தான் காலம் கடந்தும் அவரது பாடல்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்தாலும், பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தன.
ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்க தவறவில்லை. தேவா அவர்களுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததைப் போல சிற்பி அவர்களுக்கும் ஒரு பூஸ்ட் கிடைத்திருந்தால், அவரும் தன் மேதைமையை நிரூபித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
காலம் கடந்தாலும் மனதிற்கு இதமான நிறைவான பாடல்களை தந்தமைக்காக நன்றி சிற்பி சார்.!❤️👏