09/09/2024
மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள்.
ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்
https://youtu.be/VbdxC3Xvb1I?si=UEAuYxkU6c__6mqv
#விநாயகர்சதுர்த்தி #உச்சிப்பிள்ளையார் #ராக்ஃபோர்ட் #தாயுமானசுவாமிகோவில் #சுகப்பிரசவம்அருளும்தாயுமானசுவாமி #திருச்சி #தாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #தேவாரம்பாடல்பெற்றகோவில்
#திருச்சிராப்பள்ளி #தாயுமானவர்கோயில் #சிரபுரம் #மலைக்கோட்டை #திரிசிராப்பள்ளி #திருச்சிராப்பள்ளிதாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #மட்டுவார்குழலி #தாயுமானசுவாமி #சாம்பிராணிவாசனை #சாம்பிராணி #வாசனைசாம்பிராணி #வாசனை #சம்பந்தர் #தேவாரம் #திருப்புகழ்
#அப்பர்
#சுந்தரா்
#அருணகிரிநாதா்
#தாயுமானவடிகளாா்
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அம.....