Seermai

Seermai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seermai, Publisher, Tamizhagam.

ரீகன், ஜெலென்ஸ்கி முதல் விஜய் வரை மக்களின் பொதுப்புத்தியை அறுவடை செய்யும் பிம்ப அரசியல்-  அருண் நெடுஞ்செழியன்இந்தத் தேர்...
01/06/2026

ரீகன், ஜெலென்ஸ்கி முதல் விஜய் வரை

மக்களின் பொதுப்புத்தியை அறுவடை செய்யும் பிம்ப அரசியல்

- அருண் நெடுஞ்செழியன்

இந்தத் தேர்தல் முடிவு தற்செயலான விபத்தோ, ஒற்றைக் காரணியால் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. மக்களின் வாக்களிக்கும் போக்கிற்குப் பின்னால் அவர்களின் வாழ்வியல் சூழல் சார்ந்த தனித்துவமான அரசியல் உணர்வு எப்போதும் நிலவுகிறது. அந்தத் தேர்வு, அறிவுஜீவிகளின் தர்க்கத்திற்கு இணங்க இல்லை என்பதற்காகவே, சாமானியர்களின் சுயசிந்தனையை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது.

Read fully, link in the first comment 🖇️


அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!***
28/05/2026

அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

***

26/05/2026

இஹ்றாம் என்றால் என்ன ? ஹஜ் புத்தகத்திலிருந்து.. 🖤

Comment "HAJJ" for the book link 🖇️

காஃப்காவின் காதுகள்- சாகுல் ஹமீதுRead fully, link in the first comment 🖇️
26/05/2026

காஃப்காவின் காதுகள்
- சாகுல் ஹமீது

Read fully, link in the first comment 🖇️

இலக்கிய நிகழ்வுகளும் எனது அனுபவங்களும் - உமர் ஃபாரூக்உமர் எழுத்தைப் போலவே அதன் கர்த்தாவையும் நேசிக்கக்கூடியவர். இலக்கியம...
21/05/2026

இலக்கிய நிகழ்வுகளும் எனது அனுபவங்களும் - உமர் ஃபாரூக்

உமர் எழுத்தைப் போலவே அதன் கர்த்தாவையும் நேசிக்கக்கூடியவர். இலக்கியம் பேசக்கூடிய வாசகர்களோடு உரையாட விரும்புபவர். இலக்கியக் கூடுகைகளில் தான் கலந்துகொண்ட அனுபவங்களையும் அவற்றின் மீதான தன் அபிப்ராயங்களையும் இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.

கட்டுரையிலிருந்து...

ஆரம்பத்தில் இலக்கிய நிகழ்வுகள் எனக்கு அந்நியமாகவே தோன்றின. அவை குறுங்குழுக்களுக்கானவை என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் நண்பர்களின் அழைப்பின் பேரில் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது, வாசிப்பைப் பகிர்ந்து பேசுவதில் உள்ள ஆனந்தத்தை உணர்ந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

Read fully, link in the first comment 🖇️

20/05/2026

மோடி அரசின் அயலுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளால் அதிக லாபம் அடைவது யார்?

📗📘📙

சீர்மை மெய்நிகர் நூல் விமர்சன நிகழ்வு - 31உரையாடப்படும் நூல்: விண்மீன் துகள்கள் நாம் நாள்/நேரம்:13-06-2026 சனிக்கிழமை இர...
20/05/2026

சீர்மை மெய்நிகர் நூல் விமர்சன நிகழ்வு - 31

உரையாடப்படும் நூல்: விண்மீன் துகள்கள் நாம்

நாள்/நேரம்:
13-06-2026 சனிக்கிழமை இரவு 07:00 மணி

மதிப்புரை:
முகம்மது ரியாஸ்
(ஊடகவியலாளர்)

அருண் நெடுஞ்செழியன்
( சூழலியலாளர்)

ஏற்புரை:
ஆசை
(நூலாசிரியர்)

நெறியாளுகை:
சாளை பஷீர் (எழுத்தாளர்)

Zoom வழியில் பங்கெடுப்பதற்கான விவரங்கள் முதல் கமெண்டில்

Zoom Meeting ID: 849 2723 0008
Passcode: seermai

தொடர்புக்கு: ‪+91 80721 23326‬ / ‪+91 99628 41761‬

அரை நாள் (சிறுகதை) - நஜீப் மஹ்ஃபூழ் (தமிழில்: தி. மரிய தனராஜ்)கால மாற்றத்தையும் நவீனத்தின் வளர்ச்சியையும் தன் வாழ்வின் க...
18/05/2026

அரை நாள் (சிறுகதை)

- நஜீப் மஹ்ஃபூழ்

(தமிழில்: தி. மரிய தனராஜ்)

கால மாற்றத்தையும் நவீனத்தின் வளர்ச்சியையும் தன் வாழ்வின் கடந்தகாலச் சுவடுகளோடு பொருத்திப் பயணிக்கும் ஒருவனின் கதை. கதையின் இறுதியில் நிகழும் மாயாஜாலம் இதை ஒரு கூர்மையான கவிதைபோல் ஆக்கிவிடுகிறது.

கதையிலிருந்து...

தலை சுற்றியது. பித்துப் பிடித்தவன்போல ஆனேன். அரை நாளில் இவ்வளவு மாறியிருக்க முடியுமா? காலையில் ஏறிய கதிரவன் இப்போதுதானே இறங்கத் தொடங்கியிருக்கிறான். அதற்குள் இது சாத்தியமா? தந்தைக்கு விடை தெரியலாம். விரைவாக வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆனால்.. வீடு எங்கே? உயரமான கட்டடங்களும் மக்கள் கூட்டமும் மட்டுமே கண்களுக்குத் தென்படுகின்றன! அபூ ஹுதா பாலத்திற்கும் வயல் வெளிக்கும் இடையே இருந்த குறுக்குச்சாலையை விரைவாகக் கடந்தேன். அபூ ஹுதா பாலத்தைத் தாண்டினால் வீடு வந்துவிடும். ஆனால், பெரிய வெள்ளம்போலத் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் வாகனங்கள் வழியை விடுவதாகத் தெரியவில்லை. தீயணைப்பு வண்டியின் சைரன் பெரிய அலறலோடு மெதுவாக நகர்ந்துசென்றது.

சிறுகதையை முழுமையாக வாசிக்க: https://magazine.seermai.com/arai-naal

ஒரு கவிதை வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம் - டோனி பிரஸ்லர்டோனி கவிதையை விளங்கிக் கொள்வதில் உள்ள அழகை, சிடுக்கை, இடையூறை இக்...
15/05/2026

ஒரு கவிதை வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம் - டோனி பிரஸ்லர்

டோனி கவிதையை விளங்கிக் கொள்வதில் உள்ள அழகை, சிடுக்கை, இடையூறை இக்கட்டுரையில் விரிவாகப் பேச முயன்றிருக்கிறார்.

கட்டுரையிலிருந்து...

கவிதை அனுபவப்பூர்வமானது. கவிதையின் போக்குகளை உற்றுநோக்கினால், ஒப்பிடும் அளவுமுறைகள், தினசரி வாழ்முறைகளோடு சம்பந்தப்படுகின்றன. உண்மையும் அதன் பிழையும் தனித்தனி உயிரிகள் போன்றவை. ஆதார இணைப்புகளாக நாம் கணக்கிடும்போது, பிழைகளின் அடிப்படைக் குணங்களே கவிதையின் வளர்ச்சியில் தேவைப்படுகின்றன. பிறக்கும்பொழுது குழந்தையின் மொழி குலைவானது. குலைவு சரிவரப் புரியாது. கவிதையின் பிறப்பு சிதிலங்களிலானது அன்று. சட்டென வெடிப்புறும் பிரமிப்பின் இடையே அதைச் சரிவரப் பரிமாறத் தெரியாத அழுத்தங்களால் உருவம் பெறுகிறது. வாழ்வெனச் சொல்லிக்கொடுக்கப்பட்ட கருத்தியல் மரபழுத்தம் தானாகவே நம்மிடமிருக்கிறது. மனித வளர்ச்சியிலும் பூவின் வளர்ச்சியிலும் படிநிலைகள் அறிவியல் பாற்பட்டதுபோல், கவிதையில் படிநிலைகளை இயற்கையாக வளரும் சூழல் உருவாக்கத் தொடர்ச்சியிலே சரிவர அளவிட்டுப் பார்க்க முடியும். உருவாகும் பல் வராத குழந்தையின் அழுகையோ சிரிப்போ மொழியின் விவரிப்பில் சீரற்றதாக இருக்கிறது. ஆனால் அம்மொழியே அதனுடைய கனவுகளின் ஆரம்ப விளைவுகளைக் கணிக்கப் பயன்படும். அவற்றைச் சரிவர வளராக் கவிதைகள் என்ற சமாதானத்தில் ஏற்றுக்கொள்ளலாம். கவிதையில் அசைவுகள் சுற்றியிருக்கும் சூழலைப் பொறுத்து மாறுகிறது. மொழியின் பழக்கம் அதன் சொல்நிலை, சொல்லப்படும் சூழலின் முன்னிலையைக் கண்டிப்பாகக் கொண்டிருக்கும். சந்தேகங்கள், எண்ணங்களின் உண்மையான காரணத்தைக் கண்டுவிட்டால், அதன் மொழி மயக்கும் யுக்தியைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க: https://magazine.seermai.com/oru-kavithai-vasaganin-vaakkumoolam

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when Seermai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seermai:

Share

Category