10/07/2025
இதய நோய்கள் முழுமையாக குணமாகும் நம்புங்கள் நலமடையுங்கள் ......
அஹம் பிரம்மாஸ்மி !!!
ஓம் நமசிவாய !!!
ஓம் ஸ்ரீ சற்குரு சதாசிவ ப்ரமேந்திராள் போற்றி !!!
இதய நோயின் அறிகுறிகள் # #
கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசுபாடு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடல் செயலற்ற தன்மை, ஆல்கஹால் போன்ற தீங்கு விளைவிக்கும் பயன்பாடு உள்ளிட்ட சமூக, பொருளாதார, நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகளின் கலவையால் இது ஏற்படலாம். மன அழுத்தம், குடும்ப வரலாறு, இனப் பின்னணி, பாலினம், வயது ஆகியவையும் ஒரு நபரின் இதய நோய் அபாயத்தை பாதிக்கலாம்.
இதயம் # #
மனித இதயம் ஒரு முஷ்டியின் அளவு மட்டுமே. ஆனால், அது உடலின் வலிமையான தசை. ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், இதயம் ரத்தத்தை பம்ப் செய்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.
இதயம் என்பது ஒரு தசை உறுப்பு. ரத்தம் மற்றும் ரத்த நாளங்களால் ஆனது. இது ரத்த ஓட்ட அமைப்பு வழியாக உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்துகிறது.
பம்ப் செய்யப்பட்ட ரத்தம், ரத்த நாளங்கள் வழியாக திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கிறது. அதே நேரத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியே எடுத்துச் செல்கிறது.
மனித இதயம் ஒரு பெரிய முஷ்டியின் அளவு இருக்கும். இது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. 7,500 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இதய நோய் # #
கரோனரி இதய நோய், சில நேரங்களில் கரோனரி தமனி நோய் அல்லது இஸ்கிமிக் இதய நோய் என்று அழைக்கப்படுகிறது. இது இதய நோயின் மிகவும் பொதுவான வகையாகும். இது இதய தசைகளுக்கு ரத்தத்தை வழங்கும் குறுகலான கரோனரி தமனிகளால் ஏற்படும் இதய பிரச்சினைகளைக் குறிக்கிறது.
சிலருக்கு கரோனரி இதய நோயின் முதல் அறிகுறியே மாரடைப்பாக இருக்கலாம்.
மாரடைப்பு # #
மாரடைப்பு, அல்லது ஹார்ட் அட்டாக்… பொதுவாக ரத்த உறைவு, இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை துண்டிக்கும்போது ஏற்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல், இதய தசை இறக்கத் தொடங்குகிறது. உடனடியாக மருத்துவக் கவனிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றால் மாரடைப்பு ஆபத்தானது அல்ல. அது இதயத்துக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் அவசியம்.
அறிகுறிகள் # #
இதய நோயின் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்….
மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசௌகரியம்
கால்கள் மற்றும்/அல்லது கைகளில் வலி, பலவினம் அல்லது உணர்வின்மை
கைகள், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலி அல்லது அசௌகரியம்
மூச்சுத் திணறல்
உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்
இதய தாளத்தில் மாற்றங்கள் ‘
மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பு, பதற்றம் அல்லது மார்பில் படபடப்பு
மயக்கம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
பலவீனம் அல்லது சோர்வு
கைகள், கால்கள், கணுக்கால் அல்லது கால்களின் வீக்கம்
காய்ச்சல்
தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள்
உலர் அல்லது தொடர் இருமல்
ஆண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
கடுமையான மார்பு வலி, இடது கை அல்லது தாடையில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்.
பெண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
பெண்களுக்கும் மேற்சொன்ன சில அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், அவர்களின் வலி அதிகமாகி, தோள்பட்டை, கழுத்து, கைகள், வயிறு மற்றும் முதுகில் பரவுகிறது.
பெண்கள் அஜீரணம் போன்ற வலியையும் அனுபவிக்கலாம்.
வலி சீராக இல்லாமல் இருக்கலாம். வலி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், விவரிக்க முடியாத கவலை, குமட்டல், தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் குளிர் வியர்வை ஏற்படலாம்.
பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் விவரிக்க முடியாத சோர்வு ஏற்படலாம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு கடுமையான முதல் மாரடைப்பு ஏற்பட்டால், அது மிகவும் சிக்கலை உண்டாக்கும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும்/அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம் என நீங்கள் நினைத்தால், அவசர உதவி எண்ணை உடனே அழைக்க வேண்டும்.
இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிப்பது எளிது. உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய வழிமுறைகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். குறிப்பாக… உங்களுக்கு இதய நோய்க்கான குடும்ப வரலாறு இருந்தால்!
மருத்துவர் உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு, உங்கள் ஆபத்து காரணிகளை ஆய்வு செய்து, உடல் பரிசோதனை செய்வார். தேவைப்படும்போது, அவர்கள் தங்கள் அறிதல்களை சோதனைகள் மற்றும் நடைமுறை முடிவுகளுடன் இணைத்து முடிவெடுப்பார்கள்.
இதய நோய்களைக் கண்டறியும் சில பொதுவான சோதனைகள்
பல்வேறு ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதய நோய்கள் கண்டறியப்படுகின்றன.
ரத்த சோதனை, அழுத்த சோதனை, மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம், கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (சிஜி) ஸ்கேன், காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன், எலக்ட்ரான்பீம் கம்ப்யூட்டட் டோமோகிராபி (CBET), கார்டியாக் வடிகுழாய் மற்றும் கரோனரி, ஆஞ்சியோகிராபி…
ஆபத்து காரணிகள் # #
இதய நோய்களுடன் தொடர்புடைய பல ஆபத்து காரணிகள் உள்ளன. குடும்ப வரலாறு போன்ற சில ஆபத்து காரணிகளை மாற்ற முடியாது, அதே நேரம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்து காரணிகளை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்க முடியும்.
இதய நோயின் மிக முக்கியமான நடத்தை ஆபத்து காரணிகள் இவைதாம்…
ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயலற்ற தன்மை, புகையிலைப் பயன்பாடு மற்றும் ஆல்கஹால். இவை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை மதிப்பிடுவதற்காக அளவிடப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆபத்து காரணிக்கு தீர்வு காண உதவும், ஆனால், இதய நோய் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க, உங்கள் வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது முக்கியம். நீங்கள் ஏற்கனவே இதய நோயோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம். அது மோசமடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
இதில் தனிப்பட்ட செயல்பாடுகள் ஒரு பங்கு என்றாலும், சுத்தமான காற்று, மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு, நன்கு திட்டமிடப்பட்ட ஆரோக்கிய வாழிடங்கள் உள்ளிட்ட நல்வாழ்க்கை வாழ மக்களுக்குத் தேவையானவற்றை உறுதி செய்வதில் அரசாங்கங்களும் கொள்கை வகுப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான செயல்பாடுகளும் மட்டுமின்றி, மலிவு விலையில் நல்ல சூழல்களை உருவாக்கும் சுகாதாரக் கொள்கைகளே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதற்கு மக்களைத் தூண்டும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 80% மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவையே. இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற ஆபத்து காரணிகளால் துரிதப்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம். புகையிலையை நிறுத்துதல், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ணுங்கள்
ஊட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்க முக்கியமானது. ஆரோக்கியமான உணவில் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் நல்ல கொழுப்புகள், குறைவான சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவுகள் உட்பட பல்வேறு வகையான பதப்படுத்தப்படாத மற்றும் புதிய உணவுகள் இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றில் பெரும்பாலும் அதிக அளவு உப்பு உள்ளது. மேலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்!
சித்த மருத்துவத்தில் இதற்கு முழுமையான தீர்வு உண்டு . பலரும் குணமடைந்து வாழ்ந்து வருகின்றனர் . ஆஞ்சியோகிராம் செய்தவர்கள் கூட குணமாகலாம் . நம்பியவர்கள் பலர் நலமோடு வாழ்கிறார்கள் . பெரும்பாலும் இதயப் பிரச்சினைகள் மட்டுமே உள்ளது எனில் 2 மாத்திரைகள் ( 2 மாதம் )காலை மட்டுமே தருகிறேன் அதிலேயே அவர்களின் இதய அடைப்புகள் குணமடைந்து நலமாகுகிறது .
ஒரு மாதத்திற்கான மருந்தின் விலை ரூபாய் 8000 மட்டுமே . விலையை பார்ப்பவர்களுக்கு மருந்தின் தரமும் அதன் குணமும் தெரியாது இதுவே எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை .
மருந்தை உண்டு குணமடைந்து இறையருள் பெற்று வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .